ஓ.பி.எஸ்., திமுக-வுக்கு சென்றால் வருத்தம்.. மதுரையில் டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி !
அதிமுக மீண்டும் அழைத்தார்கள் என செங்கோட்டையனிடம் கூறினேன். எனக்கு சரி வராது என செங்கோட்டையன் கூறினார். - டிடிவி தினகரன் பேட்டி.

ஓபிஎஸ் எடுக்கும் முடிவுகள் ஜெயலலிதாவின் ஆன்மாவுக்கும் தொண்டர்களுக்கும் உண்மையாக இருக்க வேண்டும். - டி.டி.வி தினகரன் பேட்டி.
டி.டி.வி தினகரன் பேட்டி
மதுரையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அளித்த பேட்டியின் போது...,” மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உண்மையான மக்கள் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் நிலைநிறுத்த, ஓ.பன்னீர்செல்வம் தங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று அவர் தெரிவித்துள்ளார். அதிமுகவில் ஏற்பட்டுள்ள அதிகார போட்டிகளுக்கு இடையே, ஓபிஎஸ் ஒருவேளை திமுக பக்கம் சென்றால் அது எனக்கு மிகப்பெரிய வருத்தத்தை அளிக்கும். கொள்கை ரீதியாக ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட ஒரு தலைவர், மாற்று முகாமுக்கு செல்வது தொண்டர்களுக்கு நல்லதல்ல என்பதை அவர் சுட்டிக்காட்டினார். தற்போதைய அரசியல் சூழலில், பிரிந்து கிடக்கும் தொண்டர்களை ஒன்றிணைப்பதும், வலிமையான கூட்டணியை உருவாக்குவதும் அவசியம். ஓபிஎஸ் எடுக்கும் முடிவுகள் ஜெயலலிதாவின் ஆன்மாவுக்கும் தொண்டர்களுக்கும் உண்மையாக இருக்க வேண்டும்.
எனக்கு சரி வராது என செங்கோட்டையன் கூறினார்.
சசிகலா நிலைப்பாடு குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும். தொகுதி பங்கீடு தொடர்பாக இதுவரை எதுவும் பேசவில்லை. அதிமுக கூட்டணியில் அமமுக இணைவதால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. விஜய் அதிமுகவை ஊழல்கட்சி என்கிறார். செங்கோட்டையன் அதிமுகவில் அமைச்சராக இருந்தார். இப்போது அவர் அங்கு தானே உள்ளார். ஊழல் கட்சியில் இருந்து வந்தவரை தவெக சேர்த்துள்ளார்கள். என்ன நிலைப்பாட்டில் தவெக உள்ளார்கள். வைத்தியலிங்கம் திமுகவுக்கு சென்றது வருத்தமளிக்கிறது. நாங்கள் எல்லாம் ஒன்றோடு ஒன்றாக இருந்தவர்கள். அவருடைய சூழ்நிலையால் திமுக வுக்கு சென்றுவிட்டார். நான் அதிமுக கூட்டணியில் செல்ல மாட்டேன் என வைத்தியலிங்கம் நினைத்தார். நான் எப்படி திமுகவுக்கு செல்ல முடியும். அதிமுக மீண்டும் அழைத்தார்கள் என செங்கோட்டையனிடம் கூறினேன். எனக்கு சரி வராது என செங்கோட்டையன் கூறினார்.





















