மேலும் அறிய

ஏழை மாணவர்களுக்கு பெரும் அநீதி; துணை மருத்துவப் படிப்புகளுக்கு NEET கட்டாயம்: வெகுண்டெழுந்த முதல்வர் ஸ்டாலின்!

இளங்கலை பிசியோதெரபி (B.PT) மற்றும் இளங்கலை ஆக்குபேஷனல் தெரபி (B.OT) ஆகிய இரண்டு பட்டப்படிப்புகளில் சேருவதற்கு, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் பங்கேற்பதைக் கட்டாயமா?- முதல்வர் பிரதமருக்கு கடிதம்.

துணை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வை கட்டாயமாக்கி அறிவித்துள்ளதை உடனடியாக கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். துணை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வை கட்டாயமாக்கி தேசிய துணை மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகள் ஆணையம் (NCAHP) அறிவித்துள்ளதை கைவிட வலியுறுத்தி இந்தக் கடிதம் எழுதப்பட்டு உள்ளது.

அக்கடிதத்தில், தேசிய துணை மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகள் ஆணையம் (NCAHP), வரவிருக்கும் கல்வியாண்டு முதல் இளங்கலை பிசியோதெரபி (B.PT) மற்றும் இளங்கலை ஆக்குபேஷனல் தெரபி (B.OT) ஆகிய இரண்டு பட்டப்படிப்புகளில் சேருவதற்கு, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (NEET) பங்கேற்பதைக் கட்டாயமாக்கியுள்ளது என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இந்த அவசரமான மற்றும் தன்னிச்சையான முடிவினால், பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்பதால் அதனை உடனடியாகத் திரும்பப்பெறப்பட வேண்டுமென்று தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டின் அச்சங்கள் உண்மையாகிவிட்டன

இளநிலை மருத்துவப் படிப்பு (MBBS) சேர்க்கைக்கான நீட் தேர்வை தமிழ்நாடு தொடர்ந்து உறுதியாக எதிர்த்து வருகிறதென்றும், மற்ற துணை மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் தொடர்ச்சியாக எச்சரித்து வருகிறதென்றும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் துரதிர்ஷ்டவசமாக, தமிழ்நாட்டின் அச்சங்கள் இன்று உண்மையாகிவிட்டன என்றும் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் அனைத்து துணை மருத்துவப் படிப்புகளுக்கும் (Allied Health Care Courses-AHCs) நீட் தேர்வைக் கட்டாயமாக்கும் ஒரு பெரிய திட்டத்தின் முதல்படியாக, இரண்டு படிப்புகளுக்கு நீட் தேர்வு பரிந்துரைக்கப்படுவதாக ஒன்றிய சுகாதார அமைச்சகத்தின் சமீபத்திய தகவல்களிலிருந்து தெளிவாகத் தெரிகிறதென்று தெரிவித்துள்ளார்.

அரசமைப்புச் சட்டப்படி சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய இரு துறைகளுக்கும் பொறுப்பான மாநில அரசுகளுடன் முறையான கலந்தாலோசனைகளை செய்யாமல் மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி மாநில அரசால் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தமது கடிதத்தில் முதலமைச்சர் ள் தெளிவுபடக் குறிப்பிட்டுள்ளார்.

தேவையற்ற செலவு, மன அழுத்தம்

நாங்கள் ஏற்கெனவே சுட்டிக்காட்டியிருந்தது போல, நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதால், 12,000 எம்.பி.பி.எஸ் இடங்களுக்குப் போட்டியிட 1.40 இலட்சம் மாணவர்கள், பயிற்சி வகுப்புகளுக்கு அதிக கட்டணம் செலுத்தி நீட் தேர்வை எழுத வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளதுடன் அவர்களது குடும்பத்தினருக்குத் தேவையற்ற செலவு, மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பள்ளித் தேர்வுகளில் காட்டும் செயல்திறனைப் பயனற்றதாக்கிவிட்டதாகவும் முதலமைச்சர் தனது கடிதத்தில் சாடியுள்ளார். இந்தத் தவறான நடைமுறையை துணை மருத்துவப் படிப்புகளுக்கும் விரிவுபடுத்துவது என்பது நிலைமையை மேலும் மோசமாக்கும் என்று எச்சரித்துள்ள அவர், தமிழ்நாட்டில் துணை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்திற்கும் அதிகமாகும் என்றும், இந்த இடங்களுக்குச் சேர விரும்பும் லட்சக்கணக்கான மாணவர்கள், எம்.பி.பி.எஸ் படிக்க விரும்பும் மாணவர்களை விட மிகவும் பின்தங்கிய சமூகப் பொருளாதாரப் பின்னணியைக் கொண்டவர்கள் என்றும், இது ஏழைக் குடும்பங்களை நீட் பயிற்சிக்குச் செலவழிக்கக் கட்டாயப்படுத்தும் ஒரு பெரும் அநீதியாகும் என்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கட்டாயப்படுத்துவது சரியானதல்ல

நீட் தேர்வில் பங்கேற்றிருக்க வேண்டுமென்பதை ஒரு தகுதியாக நிர்ணயித்திருப்பது என்பது நடைமுறைக்கு ஒவ்வாதது என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், உலகளவில், ஒரு தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலமோ அல்லது அதில் அதிக மதிப்பெண் பெறுவதன் மூலமோ கல்வித்தகுதி வரையறுக்கப்படுகிறது என்றும், ஒரு நுழைவுத் தேர்வில் பங்கேற்றிருக்க வேண்டுமென்று கட்டாயப்படுத்துவது சரியானதல்ல என்றும், இது நீட் தேர்வை நாடு முழுவதும் வடிவமைக்கப்பட்டதாகத் தெரிகிறது என்றும் விரிவுபடுத்துவதற்காக மட்டுமே தெரிவித்துள்ளார்.

இதனால் லட்சக்கணக்கானோர் நீட் பயிற்சியை நாடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு, இறுதியில் ஏழைக் குடும்பங்களின் செலவில் நீட் பயிற்சி மையங்கள் நன்றாக லாபம் பெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார். எம்.பி.பி.எஸ் சேர்க்கைக்கான தகுதியாக நீட் (NEET) மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், தகுதி மதிப்பெண்கள் (cut-offs) படிப்படியாகக் குறைக்கப்பட்டு, கிட்டத்தட்ட பூஜ்ஜியத்திற்கு இணையாகக் கொண்டு வரப்பட்டுள்ளதால், இது மாணவர்களின் தரம் குறித்த வாதத்தை முற்றிலும் அர்த்தமற்றதாக்குகிறது என்பதைத் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தச் சூழலில், துணை மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை நடைமுறைகள் மாநில அரசின் அதிகார வரம்பிற்குள்ளேயே நீடிக்கவேண்டும் என்பதும், இந்தச் சேர்க்கைக்கு நீட் தேர்வினை விலக்கி வைக்கப்படவேண்டும் என்பதும் மிகவும் அவசியமாகும். எனவே, இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றும், இந்த நடவடிக்கையை உடனடியாகக் கைவிடுமாறும் தேசிய துணை மருத்துவ ஆணையத்திற்கு (NCAHP) அறிவுறுத்தவேண்டும் என்றும் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். மேலும் இந்த விஷயத்தின் அவசரத் தன்மையைக் கருத்தில்கொண்டு, இந்தியப் பிரதமரின் விரைவான தலையீட்டை தாம் எதிர்பார்ப்பதாகவும் தமிழ்நாடு முதலமைச்சர் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN 12th Result 2026 Date: பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள்: நாளை காலை வெளியீடு - ரிசல்ட் பார்ப்பது எப்படி?
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை வெளியீடு - ரிசல்ட் பார்ப்பது எப்படி?
NEET UG 2026: நீட் யுஜி விடைக்குறிப்பு வெளியீடு: தேர்வர்கள் ஆட்சேபனை தெரிவிக்கலாம்- எப்படி?
NEET UG 2026: நீட் யுஜி விடைக்குறிப்பு வெளியீடு: தேர்வர்கள் ஆட்சேபனை தெரிவிக்கலாம்- எப்படி?
TNGASA Admission 2026: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்; எப்படி?
TNGASA Admission 2026: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்; எப்படி?
PM Shri Scheme: அதுக்குள்ளயா? பிஎம் ஸ்ரீ திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு கடிதம்
PM Shri Scheme: அதுக்குள்ளயா? பிஎம் ஸ்ரீ திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு கடிதம்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: “என்ன முடிவெடுத்தாலும் கட்டுப்பட வேண்டும்“ திமுக MLA-க்களுக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவால் உச்சகட்ட பரபரப்பு
“என்ன முடிவெடுத்தாலும் கட்டுப்பட வேண்டும்“ திமுக MLA-க்களுக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவால் உச்சகட்ட பரபரப்பு
ஆட்சி டிஸ்மிஸ்; அதிரடி முடிவெடுத்த ஆளுநர்; பரபரக்கும் அரசியல் களம்; நடந்தது என்ன.?
ஆட்சி டிஸ்மிஸ்; அதிரடி முடிவெடுத்த ஆளுநர்; பரபரக்கும் அரசியல் களம்; நடந்தது என்ன.?
DMK AIADMK Alliance: தலைமை முடிவெடுத்தால் திமுக - அதிமுக கூட்டணியை ஏற்போம்; டிகேஎஸ் இளங்கோவன் அதிரடி பேட்டி
தலைமை முடிவெடுத்தால் திமுக - அதிமுக கூட்டணியை ஏற்போம்; டிகேஎஸ் இளங்கோவன் அதிரடி பேட்டி
MK Stalin Decision : ‘திமுக-அதிமுக கூட்டணி’ மு.க.ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு – பின்னணியில் ரஜினி?
’திமுக – அதிமுக கூட்டணி ஆட்சி?’ பின்னணியில் ரஜினிகாந்த்..?
TN 12th Result 2026 Date: பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள்: நாளை காலை வெளியீடு - ரிசல்ட் பார்ப்பது எப்படி?
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை வெளியீடு - ரிசல்ட் பார்ப்பது எப்படி?
EPS Plan: சொகுசு பங்களாவில் தங்கியுள்ள 30 அதிமுக எம்எல்ஏ-க்கள்; இபிஎஸ்-ன் வியூகமா.? வெளியான பரபரப்பு தகவல்
சொகுசு பங்களாவில் தங்கியுள்ள 30 அதிமுக எம்எல்ஏ-க்கள்; இபிஎஸ்-ன் வியூகமா.? வெளியான பரபரப்பு தகவல்
Maruti 4 Family Cars Launch: ஹூண்டாய், கியா, டொயோட்டாவுக்கு பேரிடி; SUV, MPV, EV என 4 குடும்பக் கார்களை களமிறக்கும் மாருதி
ஹூண்டாய், கியா, டொயோட்டாவுக்கு பேரிடி; SUV, MPV, EV என 4 குடும்பக் கார்களை களமிறக்கும் மாருதி
EPS TN Governor: இன்று ஆளுநரை சந்திக்கும் இபிஎஸ்; மாலையில் நிகழப் போகும் அதிரடி திருப்பம் என்ன.? பரபரக்கும் அரசியல் களம்
இன்று ஆளுநரை சந்திக்கும் இபிஎஸ்; மாலையில் நிகழப் போகும் அதிரடி திருப்பம் என்ன.? பரபரக்கும் அரசியல் களம்
Embed widget