மேலும் அறிய

போச்சா? இனி துணை மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் கட்டாயம்- வெளியான அதிரடி அறிவிப்பு!

இனி பாரா மெடிக்கல் எனப்படும் துணை மருத்துவப் படிப்புகள் (Paramedical) தொடர்புடைய மற்றும் சுகாதாரப் பராமரிப்பு Allied and Healthcare என்றே அழைக்கப்பட உள்ளன.

துணை மருத்துவப் படிப்புகளுக்கும் இனி நீட் தேர்வு கட்டாயம் என்று தேசிய துணை மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகள் ஆணையம் (National Commission for Allied and Healthcare Profession) தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 2026- 27ஆம் கல்வி ஆண்டு முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளங்கலை மருத்துவ இணை, துணை படிப்புகளில் சேர நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நீட் தேர்வில் தேர்ச்சி கட்டாயம்

12ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பை முடித்தவர்கள், இனி நீட் தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும். மருத்துவக் கல்லூரியில் தரத்தை மேம்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி,

பிஸியோதெரபி,

ஆப்டோமெட்ரி,

ஊட்டச்சத்து மற்றும் டயட்டடிக்ஸ்

டயாலிசிஸ் தொழில்நுட்பம்

தெரபி சார்ந்த படிப்புகள் மற்றும் பிற படிப்புகள், புதிய பாடத்திட்டத்தின்படி நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட உள்ளது. இனி பாரா மெடிக்கல் எனப்படும் துணை மருத்துவப் படிப்புகள் (Paramedical) தொடர்புடைய மற்றும் சுகாதாரப் பராமரிப்பு Allied and Healthcare என்றே அழைக்கப்பட உள்ளன.

பாடத் திட்டங்கள் வெளியீடு

மேலும் இளங்கலை மற்றும் முதுகலை துணை மருத்துவப் படிப்புகளுக்கு 13 மேம்படுத்தப்பட்ட பாடத் திட்டத்தையும் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக மேலும் பல படிப்புகளுக்கான பாடத் திட்டமும் வெளியாக உள்ளது.

இதுதொடர்பாக மத்திய, மாநிலக் கல்வி வாரியங்களுக்கு Ncahp எனப்படும் தேசிய துணை மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகள் ஆணையம், அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இதன்படி நீட் தேர்ச்சி கட்டாயம் என்னும் அறிவிப்பை மாணவர்களுக்கு உரிய முறையில் கொண்டு சேர்க்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின்கீழ் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், துணை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. சுமார் 50-க்கும் மேற்பட்ட துணை மருத்துவப் படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

PG சீட் இன்னும் கிடைக்கலயா? கவலை வேண்டாம்! புதுச்சேரி PTU-வில் ஆகஸ்ட் 14-ல் நேரடிச் சேர்க்கை!
PG சீட் இன்னும் கிடைக்கலயா? கவலை வேண்டாம்! புதுச்சேரி PTU-வில் ஆகஸ்ட் 14-ல் நேரடிச் சேர்க்கை!
இந்தியாவில் பார்க்க முடியுமா? ஆகஸ்ட் 12-ல் நிகழும் அரிதான 4 விண்வெளி நிகழ்வுகள்! தவறவிடாதீர்கள்!
இந்தியாவில் பார்க்க முடியுமா? ஆகஸ்ட் 12-ல் நிகழும் அரிதான 4 விண்வெளி நிகழ்வுகள்! தவறவிடாதீர்கள்!
ஏழை விவசாயியின் மகன் நீட் தேர்வில் தமிழ்நாடு அளவில் முதலிடம்! அரசு பள்ளியின் மாபெரும் சாதனை..!
ஏழை விவசாயியின் மகன் நீட் தேர்வில் தமிழ்நாடு அளவில் முதலிடம்! அரசு பள்ளியின் மாபெரும் சாதனை..!
11,773 குடும்பங்களின் வாழ்வாதாரம்: சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் அரசாணை வெளியாகுமா?
11,773 குடும்பங்களின் வாழ்வாதாரம்: சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் அரசாணை வெளியாகுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Maruti Suzuki SUV: 7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
Embed widget