மேலும் அறிய
Advertisement
Madurai: பேரணியில் ஓபிஎஸ் - இபிஎஸ் அணியினர் மோதல்; உசிலம்பட்டியில் பரபரப்பு
நிகழ்விடத்திற்கு வந்த உசிலம்பட்டி டிஎஸ்பி நல்லு தலைமையிலான போலிசார் மோதலில் ஈடுபட்டவர்களை விலகிவிட்டு தனித்தனியே ஊர்வலத்தில் பாதுகாப்புடன் அழைத்து வந்தனர்.
உசிலம்பட்டி 58 கால்வாயில் தண்ணீர் திறக்க கோரி விவசாய சங்கங்கள் நடத்திய பேரணியில் கலந்து கொண்ட ஓபிஎஸ் அணி - இபிஎஸ் அணியினர் ஒருவரை ஒருவர் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் கனவு திட்டமாக உள்ளது உசிலம்பட்டி 58 கிராம பாசன கால்வாய் திட்டம், சுமார் 100 கோடி வரை செலவு செய்து கட்டமைப்பு செய்யப்பட்ட இந்த திட்டத்திற்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்க ஒவ்வொரு ஆண்டும் போராடியே நீரை பெரும் நிலை உள்ளதாக கூறப்படுகிறது.
#madurai | உசிலம்பட்டி 58 கால்வாயில் தண்ணீர் திறக்க கோரி விவசாய சங்கங்கள் நடத்திய பேரணியில் கலந்து கொண்ட ஒ.பி.எஸ்., அணி - இ.பி.எஸ்., அணியினர் ஒருவரை ஒருவர் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.@AgencyTamil | @Ns7Senthil143 | @abplive | @abpmajhatv | @abpnadu | @LPRABHAKARANPR3 . pic.twitter.com/rTjRUky20w
— arunchinna (@arunreporter92) December 7, 2023
இந்த திட்டத்திற்கு வைகை அணையின் நீர் மட்டம் 65 அடி எட்டியதும் தண்ணீர் திறக்க அரசானை வழங்க கோரியும், தற்போது வைகை அணை நிரம்பி உள்ள சூழலில் இந்த 58 கிராம கால்வாயில் தண்ணீரை திறக்க கோரியும் விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் நிரந்தரமாக தண்ணீர் திறக்க அரசாணை வழங்க வலியுறுத்தியும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் விவசாய சங்கங்கள், பல்வேறு அமைப்புகள் இணைந்து உசிலம்பட்டி அரசு போக்குவரத்து பணிமனையிலிருந்து தேவர் சிலை வரை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டன பேரணி நடத்தினர். இந்த பேரணியில் விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக இபிஎஸ் அணி சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையிலான நிர்வாகிகளும், ஒபிஎஸ் அணி சார்பில் உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் தலைமையிலான நிர்வாகிகளும் கலந்து கொண்டு ஊர்வலமாக நடந்த போது., ஒபிஎஸ், இபிஎஸ் அணி நிர்வாகிகளிடையே யார் முதலில் செல்வது என ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நிகழ்விடத்திற்கு வந்த உசிலம்பட்டி டிஎஸ்பி நல்லு தலைமையிலான போலிசார் மோதலில் ஈடுபட்டவர்களை விலகிவிட்டு தனித்தனியே ஊர்வலத்தில் பாதுகாப்புடன் அழைத்து வந்தனர்.,
மேலும் சென்னை தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Cyclone Michaung: ”சென்னையில் 80 சதவீதம் மின் விநியோகம் சரி செய்யப்பட்டுள்ளது" - தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ”மழை நீர் வடிகாலுக்கு 4 கோடி கூட செலவு செய்யவில்லை” - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி !
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion