மேலும் அறிய

Madurai: கிரானைட் குவாரிகளால் விவசாயம் முடங்கிவிடும் என விவசாயிகள் வேதனை; மேலூரில் மீண்டும் கிளம்பும் பிரச்னை

கிரானைட் குவாரிகளை அனுமதிக்க கூடாது என கூறி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு

200-க்கும் மேற்பட்ட வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில்  நடைபெற்று வரும் நிலையில்  11 ஆண்டுகளுக்குப் பிறகு 
சுற்றிலும் விளைநிலங்கள் நடுவில் 20 ஆண்டுகளுக்கு கிரானைட் வெட்டி எடுக்க டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது விவசாயிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

மதுரை மாவட்டத்தில் 11 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கிரானைட் குவாரிகள் அமைக்க டெண்டர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே நடத்தப்பட்டு வந்த பல்வேறு கிரானைட் குவாரிகளால் மேலூர்- கொட்டாம்பட்டி பகுதிகளில்  பெரிய அளவில்  பாதிப்புக்கு உள்ளானதோடு கிரானைட் முறைகேடுகள் காரணமாக 2013-ம் ஆண்டு முதல் கிரானைட் குவாரிகள் இயங்க தடை விதிக்கப்பட்டது. மேலும் கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறுகின்றன. இந்தநிலையில் மேலூர் பகுதியில் உள்ள சேக்கிப்பட்டி, அய்யாபட்டி, திருச்சுனை ஆசிய 3 கிராமங்களில் 20 ஆண்டுகளுக்கு கிரானைட் வெட்டி எடுக்க டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.  

மேலும் செய்திகள் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - சிவகங்கையில் பழங்கால கழிவு நீர்க் குழாய் கண்டுபிடிப்பு - தொல்லியல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி

Madurai: கிரானைட் குவாரிகளால் விவசாயம் முடங்கிவிடும் என விவசாயிகள் வேதனை; மேலூரில் மீண்டும் கிளம்பும் பிரச்னை

ஏற்கனவே இந்த பகுதி நிலத்தடி நீர்மட்டம் மிக பாதாளத்திற்கு சென்றுவிட்டது. விவசாயமும் பொய்த்துப் போய்விட்டது. இந்த சூழலில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் கொட்டாம்பட்டி பகுதியில் உள்ள அய்யயாபட்டி மற்றும் சேக்கிப்பட்டி பகுதிகளில் கிரானைட் குவாரி நடத்த அரசு முயற்சிப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . விவசாயிகளின் வாழ்வாதாரம் சுற்றுச்சூழலுக்கும்  பெரிய பாதிப்புகளை   ஏற்படுத்துவதாக அமையப்போகும் இந்த கிரானைட் குவாரிகளுக்கு அனுமதி வழங்குவதை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும். என அப்பகுதி விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்புகளை மதுரை மாவட்ட நிர்வாகம் உடனே திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரங்களையும் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதற்காக பெரிய அளவில் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய சூழல் உருவாகும் என  தெரிவித்தனர்.

Madurai: கிரானைட் குவாரிகளால் விவசாயம் முடங்கிவிடும் என விவசாயிகள் வேதனை; மேலூரில் மீண்டும் கிளம்பும் பிரச்னை
 
இதுகுறித்து  சமூக ஆர்வலர் செல்வராஜ் கூறுகையில்,”சேக்கிபட்டி கிராமம், அய்யாபட்டி மற்றும் திருச்சுனை ஆகிய அரசு புறம்போக்கு நிலங்களில் அமைந்துள்ள பல வண்ண கிரானைட் குவாரிகளை 20 ஆண்டுகளுக்கு குவாரி குத்தகை உரிமம் வழங்க டெண்டருடன் இணைந்த பொது ஏலத்திற்கான மாவட்ட நிர்வாகத்தால் டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் மதுரை மேலூர் சேக்கிபட்டி, அய்யாபட்டி ஊராட்சிகளை சேர்ந்த சக்கிடிபட்டி, ஓட்டகோவில்பட்டி, சேக்கிபட்டி கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் கிரானைட் குவாரி அமைக்க கூடாது என கூறி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளனர். எனவே மாவட்ட ஆட்சியர் அப்பகுதி மக்களின் நிலையை உணர்ந்து கிரானைட் குவாரி அமைவதை தடுக்க வேண்டும்” என்றார்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
Doctors Protest :  ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
Doctors Protest : ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Controversy | கைதாகிறாரா கஸ்தூரி? அதிரடி காட்டிய நீதிபதி Aadhav Arjuna ED Raid |ஆதவ் வீட்டில் ED ரெய்டு! சிக்குகிறாரா லாட்டரி மார்டின்? பரபரப்பில் விசிகPriyanka Gandhi Wayanad|ராகுலை தாண்டுவாரா பிரியங்கா?ட்விஸ்ட் கொடுத்த வயநாடு!கதறும் பாஜக, கம்யூனிஸ்ட்DOGE Elon musk | ‘’வாங்க எலான் மஸ்க்..’’ ட்ரம்ப் கொடுத்த ASSIGNMENT! கலக்கத்தில் அமெரிக்கர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
Doctors Protest :  ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
Doctors Protest : ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
“திமுக கூட்டணி பற்றி எதுவும் பேசக் கூடாது” ஆதவ் அர்ஜூனாவிற்கு ஆர்டர் போட்ட திருமா..?
“திமுக கூட்டணி பற்றி எதுவும் பேசக் கூடாது” ஆதவ் அர்ஜூனாவிற்கு ஆர்டர் போட்ட திருமா..?
Kanguva Review: களைகட்டியதா ? கண்ணைகட்டியதா ? சூர்யாவின் கங்குவா முழு திரைவிமர்சனம் இதோ
Kanguva Review: களைகட்டியதா ? கண்ணைகட்டியதா ? சூர்யாவின் கங்குவா முழு திரைவிமர்சனம் இதோ
Dr. Ezhilan : ”திமுக எம்.எல்.ஏ, மருத்துவர் எழிலனை மருத்துவத் துறை அமைச்சராக்குங்கள்” எழுந்தது கோரிக்கை..!
Dr. Ezhilan : ”திமுக எம்.எல்.ஏ, மருத்துவர் எழிலனை மருத்துவத் துறை அமைச்சராக்குங்கள்” எழுந்தது கோரிக்கை..!
TNPSC Group 5A: நாளை கடைசி- டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? தகுதி, ஊதியம், பிற விவரங்கள் இதோ..!
TNPSC Group 5A: நாளை கடைசி- டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? தகுதி, ஊதியம், பிற விவரங்கள் இதோ..!
Embed widget