மேலும் அறிய
Advertisement
நாளை தமிழகம் வரும் குடியரசுத் தலைவர் - மதுரையில் பாதுகாப்பு ஒத்திகை
நாளை மீனாட்சியம்மன் கோயிலுக்கு குடியரசுத் தலைவர் வருவதை முன்னிட்டு பாதுகாப்பு ஒத்திகை செய்யப்பட்டு வருகிறது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு எதிராக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக வெற்றி பெற்றவர் திரௌபதி முர்மு. ஒடிஷாவின் ராய்ரங்கப்பூரில் பிறந்தவர் திரௌபதி முர்மு. கடந்த 1997ஆம் ஆண்டு, ராய்ரங்கப்பூர் நகரப் பஞ்சாயத்துத் தேர்தலில் கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார் திரௌபதி முர்மு. அவர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரது வெற்றி கொண்டாடப்பட்டது. இந்நிலையில் ஜனாதிபதி திரௌபதி முர்மு தமிழகம் வர உள்ளார்.
ஜனாதிபதி திரௌபதி முர்மு டெல்லியில் இருந்து தனி விமான மூலம் மதுரை விமான நிலையத்திற்கு 11:50-க்கு வருகிறார். தொடர்ந்து 12:15 -க்கு மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்கிறார். தொடர்ந்து மீண்டும் 2:00 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்து தனி விமானம் மூலம் கோயம்புத்தூர் செல்கிறார்.
கோயம்புத்தூர் விமான நிலையத்தில் 3:20 மணிக்கு சென்றடைகிறார். அங்கிருந்து விடுதியில் ஓய்வெடுத்து பின்னர் 5:45 மணிக்கு ஈஷா மையத்தில் நடக்கும் மகாசிவராத்திரி விழாவில் பங்கு பெறுகிறார். தொடர்ந்து 19ஆம் தேதி காலை 9 :25 மணிக்கு கோயம்புத்தூர் விமான நிலையம் சென்று டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு வருகை தரவுள்ள நிலையில் கோயிலை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. மீனாட்சியம்மன் கோவிலை சுற்றி 8 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு ஒரு கோபுரத்தில் இரண்டு காவலர்கள் என கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் குடியரசுத்தலைவரின் வருகையையொட்டி கோவிலுக்கு வந்தவுடன் தற்காலிக வரவேற்பரை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் குடியரசுத்தலைவரின் வருகையையொட்டி கோவிலை சுற்றியுள்ள ஆடி வீதிகளில் சாலையோர கடைகள் அமைக்கக்கூடாது என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்கியுள்ளவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதேபோன்று ரயில் நிலையங்களில், விமான நிலையங்களில் பயணிகளிடம் பாதுகாப்பு சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மதுரையில் 3500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.நாளை மீனாட்சியம்மன் கோயிலுக்கு குடியரசுத் தலைவர் வருவதை முன்னிட்டு பாதுகாப்பு ஒத்திகை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion