மேலும் அறிய
BBC Documentary: மதுரையில் மோடி ஆவணப்படத்தை வெளியிட்டவர்களும், தடுத்தவர்களும் கைது
மோடியின் ஆவண படத்தை வெளியிட்ட இந்திய கம்யூனிஸ்ட்டை மற்றும் தடுக்க முற்பட்ட பா.ஜ.க., மாவட்டத் தலைவர் உட்பட 7 பேரை கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
![BBC Documentary: மதுரையில் மோடி ஆவணப்படத்தை வெளியிட்டவர்களும், தடுத்தவர்களும் கைது Madurai news: 7 people, including those published Modi's documentary film and the person who tried to stop it, were arrested TNN BBC Documentary: மதுரையில் மோடி ஆவணப்படத்தை வெளியிட்டவர்களும், தடுத்தவர்களும் கைது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/14/addaeb6f75a49ebb4f85a7ba083af199_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பிரதமர் மோடி
கடந்த 2002ஆம் ஆண்டு, குஜராத்தில் நடந்த கலவரத்தை மையப்படுத்தி பிபிசி வெளியிட்டுள்ள ஆவணப்படம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து, சர்ச்சையை ஏற்படுத்திய பிபிசி ஆவணப்படத்திற்கு அவசர கால அதிகாரங்களை பயன்படுத்தி மத்திய அரசு இந்தியாவில் தடை விதித்தது. யூடியூப், பேஸ்புக், ட்விட்டர் என சமூக வலைதளங்களில் வெளியான பிபிசி ஆவணப்படத்திற்கான லிங் அதிரடியாக நீக்கப்பட்டது. ஆனால், தடையை மீறி கேரளாவிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மாணவர் அமைப்பினர் அந்த ஆவணப்படத்தை திரையிட்டு வருகின்றனர். அதேபோல, தடைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் மதுரை மீனாட்சி நகர் பகுதியில் மோடியின் ஆவணப் படத்தை வெளியிட்ட இந்திய கம்யூனிஸ்ட்டை தடுக்க முற்பட்ட பாரதிய ஜனதா கட்சி மாவட்டத் தலைவர் உட்பட 7 பேரை கைது செய்து விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.
![BBC Documentary: மதுரையில் மோடி ஆவணப்படத்தை வெளியிட்டவர்களும், தடுத்தவர்களும் கைது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/10/b842f94eb6e8732eaa02c1ce286fb9d01665377898133102_original.jpg)
மதுரை மீனாட்சி நகர் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மோடியின் ஆவண படத்தை தனியார் மண்டபத்தில் வைத்து வெளியிட்டதாக பா.ஜ.க.,வில் இருப்பவர்களுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற பா.ஜ.க., மாவட்ட தலைவர் சசிகுமார் உட்பட ஏழு பேர் ஆவண படத்தை தடுக்க முயன்ற போது அங்கு வந்த அவனியாபுரம் காவல்துறையினர் பா.ஜ.க.,வினரை கைது செய்து அவனியாபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
![BBC Documentary: மதுரையில் மோடி ஆவணப்படத்தை வெளியிட்டவர்களும், தடுத்தவர்களும் கைது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/02/96c5b8141d3ceff214d29daced099f18_original.jpg)
மோடி ஆவண படத்தை தடுக்க சென்ற பாஜக மாவட்ட தலைவர் சசிகுமார், பாரதிராஜா, சோலை மணிகண்டன், ஜெயகணேஷ், கருப்பையா மதன் தமிழ்செல்வி, உள்ளிட்ட ஏழு பேரிடம் அவனியாபுரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவனியாபுரம் காவல் துறையினரை கண்டித்து காவல் நிலைய வாசலில் பாஜகவினர் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Crime: நண்பனை நம்பி சென்ற பெண்.. பேருந்து நிலையத்தில் மயங்கி கிடந்த கொடூரம்.. தந்தையே மீட்ட சோகம்..!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion