மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
கப்பலூர் டோல்கேட்டை இடமாற்ற கோரி 15க்கும் மேற்பட்ட ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு தபால் மூலமாக கோரிக்கை மனு அனுப்பும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
கப்பலூர் சுங்கச்சாவடியை இடமாற்ற கோரி 15க்கும் மேற்பட்ட ஊராட்சி கிராம சபை கூட்டத்தின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மதுரையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கப்பலூர் டோல்கேட்டை அகற்ற கோரிக்கை
மதுரை மாவட்டம், கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கப்பலூர் சுங்கச்சாவடி நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு கட்டாய கட்டணம் வசூல் செய்வதாகவும், கட்டணம் செலுத்தாமல் செல்லும் உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு லட்சக்கணக்கில் அபராதம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் வக்கீல் நோட்டீஸ் அனுப்புவதாக உள்ளூர் வாகன ஓட்டிகள் சார்பாக தொடர் போராட்டங்கள் நடந்தப்படுகிறது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு கட்டண விலக்கு அளிக்கப்பட்டது. ஆனாலும் கப்பலூர் சுங்கச் சாவடியில் இது போன்ற பல கூட்டங்களில் கட்டண விலக்கு எனக் கூறியும் சில மாதங்களில் மீண்டும் கட்டணம் வசூல் செய்யும் நிலை ஏற்படுவதாகவும், எனவே கப்பலூர் சுங்கச்சாவடியை கள்ளிக்குடி அருகே இடமாற்றுவதே முழு தீர்வாக எண்ணி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்
இதன் காரணமாகவே கப்பலூர் டோல்கேட் எதிர்ப்பு குழு சார்பாக கப்பலூர் சுங்கச்சாவடியை சுற்றியுள்ள அனைத்து ஊராட்சி கிராம சபை கூட்டத்திற்கும் கப்பலூர் சுங்கச்சாவடியை இடமாற்ற வேண்டும் என கோரிக்கை அனுப்பப்பட்டது. இந்த நிலையில் கப்பலூர் சுங்கச்சாவடியை சுற்றியுள்ள திருப்பரங்குன்றம், திருமங்கலம் தாலுகாவில் 15க்கும் மேற்பட்ட ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் கப்பலூர் சுங்கச்சாவடியை இடமாற்றக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக திருப்பரங்குன்றம் பகுதியில் கூத்தியார்குண்டு, தோப்பூர், நிலையூர் உள்ளிட்ட ஊராட்சிகளிலும் திருமங்கலம் தொகுதியில் அனைத்து ஊராட்சிகளிலும் கப்பலூர் சுங்கச்சாவடியை வேறு இடத்திற்கு மாற்ற கோரி ஊராட்சி மன்ற தலைவர் முன்பு கோரிக்கை வைக்கப்பட்டு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கப்பலூர் சுங்கச்சாவடியை இடமாற்றக் கோரி திருமங்கலம், திருப்பரங்குன்றம் பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்த நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று நடத்தப்பட்ட கிராம சபை கூட்டத்தில் சுங்கச்சாவடி அகற்றுவது குறித்து ஒரு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. கப்பலூர் சுங்கச்சாவடி அகற்ற வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு தபால் மூலமாக கோரிக்கை மனு அனுப்பும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - உதயநிதி துணை முதல்வராக வேண்டும் ; கிடாய் வெட்டி அசைவ விருந்து வைத்து வழிபாடு செய்த பெண் ஒன்றிய கவுன்சிலர்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - PM Modi: "2047க்குள் வளர்ந்த நாடு! வெற்று முழக்கம் அல்ல, 140 கோடி பேரின் கனவு" சுதந்திர தினத்தில் பிரதமர் மோடி சூளுரை
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
ஐபிஎல்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion