Madurai: 'ஆளுநர் தொடர்ந்து களங்கத்தை ஏற்படுத்துகிறார்' - மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு !
ஆளுநர் தமிழக அரசுக்கு எதிராக, மக்களுக்கு எதிராக இந்துதுவா கருத்தை பேசி வருகிறார் என மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் குற்றச்சாட்டியுள்ளார்.
மதுரை மேலூர் தாலுகா உறங்கான்பட்டி அரசு பள்ளிக்கு பள்ளியின் வளர்ச்சி பணிக்காக தலைமை ஆசிரியர் அருணாச்சலம் அவர்கள் 10 லட்சம் ரூபாய் நிதி உதவியாக வழங்கியதை முன்னிட்டு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தன்னுடைய நாடாளுமன்ற அலுவலகத்தில் வைத்து பாராட்டி கௌரவித்தார். பின்னர் சு.வெங்கடேசன் செய்தியாளர்களிடம்...,"பா.ஜ.க., தற்போது திட்டமிட்டு அரசியல் சாசனத்தை தகர்த்தும் வேலையை செய்து கொண்டிருக்கிறது. அதற்கு அனைத்து அரசு நிறுவங்களையும் பயன்படுத்துகிறது. எனவே இதற்கு எதிராக ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அரசியல் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். இது தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு. அந்த வகையில் பாட்னாவில் நடைபெற்ற எதிர்கட்சித் தலைவர்களின் கூட்டம் முக்கியதுவம் வாய்ந்தது. கடந்த 9 ஆண்டுகளாக பா.ஜ.க., ஆட்சியில் நடந்தப்பட்ட சிதைவுகளை மீட்க முயற்சி எடுக்கும் முக்கிய ஜனநாயக கூட்டமாக பார்க்கிறேன். பா.ஜ.க.,விற்கு எதிரான பங்கை தி.மு.க., முக்கியதுவம் வாய்ந்ததாக இருக்கும். அதை தான் தமிழக முதல்வர் விளக்கி இருக்கிறார்.
கடந்த எதிர்கட்சி கூட்டத்தொடர்களில் தனித்தனியாக இருந்ததை பார்க்க முடிந்தது. பிரகாசஷ் பிரச்னை வந்த போது செல்போனை உளவு பார்த்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து அதானி பிரச்னை வந்த போது ஒற்றுமை வலு பெற்றது. தற்போது மேலும் ஒற்றுமை வலிமை பெற்றுள்ளது. அதற்கு காரணம் எதிர்கட்சிகள் ஆளும் எல்லா மாநிலங்களிலும் நிறுவங்கள் மூலம் இடையூறு செய்யும் வகையில் செயல்பட்டு வருகிறது. இதனால் உரிமை பறிக்கும் வேலையை செய்வதால் அனைவரும் ஒன்றிணைகின்றனர். இதனால் 2024 தேர்தல் முன்னேற்றத்தின் முன்னெடுப்பாக இந்த கூட்டத்தை பார்க்கிறேன்.
திட்டமிட்டு ஆர்.எஸ்.எஸ் அஜண்டாவை நிலை நிறுத்தி வருகிறார். ஆளுநர் தமிழக அரசுக்கு எதிராக, மக்களுக்கு எதிராக இந்துதுவா கருத்தை பேசி வருகிறார். சட்ட மன்றத்தில் அவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியாச்சு. ஆனாலும் தொடர்ந்து அவர் கலங்கத்தை ஏற்படுத்துகிறார். அவருக்கு மக்கள் தகுந்த பாடம் கொடுப்பார்கள்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai: ‘என் கார் வந்தால் கூட விழுந்துடும் போல’ - தரமற்ற சாலையால் கடுப்பான மதுரை கலெக்டர்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்