Madurai: ‘என் கார் வந்தால் கூட விழுந்துடும் போல’ - தரமற்ற சாலையால் கடுப்பான மதுரை கலெக்டர்
வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. பேரூராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
”ரோடா இது என் வண்டி வந்தாலே ரோடு விழுந்திடும்” 1.10 கோடியில் புதிய தரமற்ற சாலை அமைத்த அதிகாரியை கண்டித்த மதுரை ஆட்சியர் சங்கீதா.
மதுரை மாவட்டம் வாடிப் பட்டியில் இருந்து குலசேக ரன்கோட்டைக்கு அமைத்த புதிய தார் ரோட்டை ஆய்வு செய்த கலெக்டர் சங்கீதா, அதன் தரம், பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேள்விகள் எழுப்பி கண்டித்தார்.#madurai | #road | @mducollector | #sangeetha #vadipatti @JeeVaigai | @abpnadu | @abplive pic.twitter.com/tq1fhrrbkg
— arunchinna (@arunreporter92) June 10, 2023
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி முதல் குலசேகரன்கோட்டை வரை சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் சாலை அமைக்க நபார்டு வங்கி உதவியுடன் ரூ.1 கோடியே 10 லட்சம் செலவில் சுமார் 1.5 கிலோ மீட்டர் புதிய தார் சாலை அமைக்கப்பட்டது. சுமார் 10 ஆண்டுகளாக சாலை வசதி இன்றி தவித்த நிலையில் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது குறிப்பிடதக்கது. இந்நிலையில் இந்த சாலை தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதாக புகார் எழுந்தது. அப்போது அங்கு ஆய்வுப்பணிக்காக வந்த மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தனது காரை நிறுத்தி சாலையை ஆய்வு செய்து அதிகாரிகளை கண்டித்தார். சாலை சரியில்லை எனது வாகனம் வந்தாலே சாலை சேதமாகிவிடும், இது எப்படி நல்லா இருக்கும் dis qualified Road என அதிகாரிகளை மாவட்ட ஆட்சியர் சங்கீதா கண்டித்து அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பொதுமக்கள் கூறுகையில்,”மெயின் ரோட்டில் இருந்து பொன் பெருமாள் கோயில், கண்மாய் வரை ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமிப்பில் உள்ளது. பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு அதிக வாகனங்கள் வந்து செல்கின்றன. வாழை மரம், கம்பி வேலியால் போட்டி போட்டு ஆக்கிரமித்துள்ளனர். எதிரெதிரே கார்கள் கூட செல்ல முடியாது. ரோட்டோரத்தில் பள்ளம் வெட்டி கால்நடை கழிவுகளை குவித்துள்ளனர். வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. பேரூராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்” என தெரிவித்தனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - உசிலம்பட்டி மருத்துவமனையில் அடிக்கடி பெயர்ந்து விழும் கான்கிரீட் சுவர்.. அச்சத்துடன் வந்து செல்லும் கர்ப்பிணிகள்..!
மேலும் செய்திகள் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மதுரையில் சோகம்...50 நாட்களுக்கு முன் ஓடும் பேருந்தில் இருந்து குதித்து தாய் தற்கொலை; தற்போது பாம்பு கடித்து மகள் உயிரிழப்பு
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்