மேலும் அறிய
Advertisement
Madurai: கோலாகலமாக தொடங்கிய மீனாட்சியம்மன் கோயில் தெப்பத் திருவிழா
மீனாட்சியம்மன் கோயில் தெப்பத் திருவிழா கோலகலமாக தொடங்கியது - சுவாமியும் அம்மனும் தெப்பத்தில் வலம்வந்து பின்னர் மைய மண்டபத்தில் எழுந்தருளினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவர் திருக்கோயிலின் தெப்பத்திருவிழா கடந்த ஜனவரி 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் தங்கச்சப்பரம், அன்னம், காமதேனு, சிம்ம வாகனம், குதிரை, ரிஷபம், யாழி, பல்லக்கு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதனிடையே நேற்று மதியம் சிந்தாமணி பகுதியில் கதிரறுப்பு மண்டபத்தில் எழுந்தருளிய பின்னர் கதிரறுப்பு திருவிழா நடைபெற்றது. இதனை தொடர்ந்து தைப்பூத பௌர்ணமி தினமான இன்று தெப்பத்திருவிழா கோலாகலமாக தொடங்கியது.
இதனை முன்னிட்டு அதிகாலை மீனாட்சி அம்மன் அவுதா தொட்டில் வாகனத்திலும், சுவாமி வெள்ளி சிம்மாசனத்திலும் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளி விளக்குத்தூண், கீழவாசல் காமராஜர் சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக பக்தர்களுக்கு அருள்பாலித்தபடி மீனாட்சியம்மன் கோயிலின் உப கோயிலான மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள மரகதவல்லி முக்தீஸ்வரர் கோயிலுக்கு வந்தடைந்தனர்.
பின்னர் அங்கு சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட பின்னர் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினர். இதனையடுத்து அனுப்பானடியை சேர்ந்த இளைஞர்கள் தெப்பத்தேரினை வடம் பிடித்து இழுப்பதற்காக பாரம்பரிய முறைப்படி அழைத்துவரப்பட்டனர். பின்னர் அவர்கள் வடம் பிடித்து இழுக்க தெப்பத்தில் வலம் வந்த சுவாமியையும் , அம்மனையும் மதுரை மட்டுமல்லாது அருகில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பெண்கள், முதியவர்கள், குழந்தைகளும் என ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதில் உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி ராஜா மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஸ்ரீமதி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் ஆகியோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். நீர் நிரம்ப காணப்பட்ட தெப்பக்குளத்தில் சுவாமியும் அம்மனும் இருமுறை வலம்வந்த நிலையில் சுவாமியும், அம்மனும் மைய மண்டபத்தில் எழுந்தருளினர். பின்னர் இரவு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளி இரவு தெப்பத்தை ஒரு முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி தருவர்.
இந்த தெப்ப உற்சவத்தின்போது மட்டும் தான் சுவாமியும், அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளினாலும் கூட சுவாமியை விட அம்மன் கூடுதலாக ஒரு வாகனமான அவுதா தொட்டி வாகனத்தில் எழுந்தருளுவார் என்பது கூடுதல் சிறப்பு. தெப்பகுளத்தில் நீர்நிரம்பி இருப்பதால் தெப்பத்திலும் தீயணைப்புத்துறையினர், காவல் துறையினர் படகு மூலம் ரோந்து பணியில் ஈடுபட்டனர் பக்தர்களின் பாதுகாப்பிற்காக மாநகர கவால் ஆணையர் தலைமையில் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். முன்னதாக தெப்பதேரினை வடம்பிடித்து இழுக்கவந்த அனுப்பானடி கிராமத்தினரை அனுமதித்தபோது காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் சிறிதுநேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்பாக காணப்பட்டது. அப்போது நெரிசலில் சிக்கி சிறுவர்கள் கதறி அழுதனர் கடந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடு காரணமாக பக்தர்கள் குறைவாக இருந்த நிலையில் இந்த ஆண்டு ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். மீனாட்சியம்மன் தெப்பதிருவிழாவை நேரில் பார்த்தது மகிழ்ச்சியளிப்பதாகவும், அம்மனின் அருள் பெற்றதாகவும் பக்தர்கள் தெரிவித்தனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Palani Temple: தைப்பூச திருவிழா பஞ்சாமிர்தத்திற்காக 30 டன் வாழைப்பழங்கள் பழனியில் இறக்குமதி
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
க்ரைம்
க்ரைம்
தொழில்நுட்பம்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion