மேலும் அறிய
Advertisement
மக்களின் செல்லம் பார்வதிக்கு நவீன சிகிச்சை : உயர்தர சிகிச்சையால் நலமடைந்துவரும் மீனாட்சியம்மன் கோவில் யானை..!
”பார்வதி யானைக்கு இரண்டு கண்களிலும் உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், சில பரிசோதனைகளின் முடிவு அடுத்த வாரம் கிடைக்கும் நிலையில் கூடுதல் சிகிச்சைகள் அளிக்கப்படும்” என தெரிவித்துள்ளனர்.
மதுரை மீனாட்சியம்மன் கோவில் யானைக்கு இரண்டாவது முறையாக கண்ணில் சிகிச்சை மற்றும் பரிசோதனைகளை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக குழுவினர் மேற்கொண்டுள்ளனர். கொரோனா தொற்று காரணத்தால் கடந்த ஆண்டைப்போல் இந்த ஆண்டும் கள்ளழகர் மதுரைக்கு வர முடியாமல் போய்விட்டது. இருப்பினும் சித்திரைத் திருவிழாவில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளும் ஆகம விதிப்படி கோவில் உள் பிரகாரத்தில் பக்தர்கள் அனுமதியின்றி நடைபெற்றுது. சித்திரை திருவிழாவில் சுவாமி புறப்பாடுக்கு முன் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டமாக இருக்கு. டங்கா மாடு, யானை, குதிரை, ஒட்டகம் என்று விலங்குகள் சில குழந்தைகள் உற்சாகப்படுத்தும்.
இதற்காக கோயிலில் 'பார்வதி' என்ற சுமார் 25 வயதுடைய பெண் யானை ஒன்று வளர்க்கப்பட்டு வருகிறது. கடந்த 2000-ல் வாங்கப்பட்ட இந்த யானை கோயில் கிழக்கு ஆடி வீதியில் தனியாக அமைக்கப்பட்டுள்ள மண்டபத்தில் கவனிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பார்வதி யானையின் இடது கண்ணில் 'புண்' ஏற்பட்டு வலியால் துடித்துள்ளது. மேலும் கண்ணில் இருந்து நீர்வழிந்து கொண்டே இருந்த நிலையில் பார்வதி யானை சற்று சோர்வாக உள்ளதாக தெரியவந்தது. இதனையடுத்து சிறப்பு மருத்துவ குழு யானைக்கு அளித்த சிகிச்சையின் யானையின் இடது கண்ணில் புண் மற்றும் புரை போன்ற நோய் ஏற்பட்டு இருப்பது தெரிவித்துள்ளனர். இதனால் அந்த கண்ணில் பார்வை சற்று மங்கி உள்ளதால் யானை சோர்வாக இருப்பதாக கண்டறியப்பட்டது.
இந்நிலையில் கண் சிறப்பு மருத்துவர்கள் ஆலோசனையின் படி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தமிழ்நாடு கால்நடைத்துறை அறிவியல் பல்கலைகழக குழுவை சேர்ந்த மருத்துவக்குழு சிறப்பு மருத்துவ உபகரணங்கள் விமானம் மூலமாக கொண்டு வந்து அதனை பயன்படுத்தி கண் சிகிச்சை அளித்தனர். இதனிடையே யானையின் மருத்துவ பரிசோதனையின் முடிவை பொறுத்து, தாய்லாந்து நாட்டில் யானைகளுக்கென பிரேத்யேகமாக செயல்படும் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்று மேற்சிகிச்சை வழங்கவும் முடிவெடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இரண்டாம் முறையாக சென்னை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை கழகத்தை சேர்ந்த சிறப்பு மருத்துவக்குழுவினர் யானையின் இரண்டு கண்களிலும் சிறப்பு கண்சிகிச்சை உபகரணங்களை பயன்படுத்த சில சிகிச்சைகளை மேற்கொண்டுடதோடு, சில பரிசோதனைகளை செய்துள்ளனர்.
இரண்டு கால்நடைத்துறை மண்டல இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், கால்நடை மருத்துவர்கள் என யானைக்கு சிகிச்சையளிக்கும் பணிகளை செய்தனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மீனாட்சியம்மன் கோயிலில் ஆய்வு நடத்தியபோது, கோயில் யானை பார்வதியின் கண் சிகிச்சைக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும் என கூறியிருந்த நிலையில் தற்போது, பார்வதி யானைக்கு இரண்டு கண்களிலும் உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், சில பரிசோதனைகளின் முடிவு அடுத்த வாரம் கிடைக்கும் நிலையில் கூடுதல் சிகிச்சைகள் அளிக்கப்படும் என மதுரை கால்நடைத்துறை மண்டல இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அளிக்கப்பட்ட சிகிச்சைகள் மூலம் யானை பார்வதிக்கு வலது கண்ணில் முன்னேற்றம் உள்ளதாகவும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும் - மதுரை : விலங்குகள் மீது தொடரும் கொடூர வன்முறை : கடுமையாக எச்சரித்த ஆட்சியர்..!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
கல்வி
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion