மேலும் அறிய
Advertisement
Madurai: மீனாட்சியம்மன் கோயில் அன்னதான கூடத்திற்கு சுகாதார சான்றிதழ் அளித்த மத்திய உணவுப்பாதுகாப்புதுறை !
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவர் கோயில் அன்னதான கூடத்திற்கு சுகாதாரமான அன்னதான கூடத்திற்கு சிறப்பு சான்றிதழ் அளித்த மத்திய உணவுப்பாதுகாப்புதுறை.
கடம்பவனத்துப் பேரரசி மீனாட்சி, மதுரையின் பெருமைக்கு காரணமாக விளங்குகிறாள். ‘ஏறிய சிவிகை இறங்காத பெருமாட்டி’ என்றே மீனாட்சியை பெருமை கொள்வர். சித்திரை மாதமே போற்றும் மீனாட்சியின், அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் தேவரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்களில் முதலாவது தலமாகும். இப்படி பல்வேறு பெருமைகளை தாங்கி நிற்கும் மீனாட்சியம்மன் கோயிலை மையமாக வைத்தே மாமதுரை நிர்மாணிக்கப்படுகிறது. தமிழ் மாதங்களில் வழியே பல்வேறு திருவிழா முன்னெடுக்கப்படும். இப்படியான உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவர் திருக்கோயில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்துவருகின்றனர். இங்கு நாள்தோறும் அன்னதானகூடத்தின் மூலமாக 24 மணிநேரமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
#Madurai | மதுரை மீனாட்சியம்மன் கோவில் அன்னதான கூடத்திற்கு சுகாதாரமான அன்னதான கூடம் சான்றிதழ் அளித்த மத்திய உணவுப் பாதுகாப்புதுறை.
— arunchinna (@arunreporter92) February 28, 2023
Further reports to follow -@abpnadu #news | @TamilNaduInfra | @LPRABHAKARANPR3 @ThanniSnake | @R_Gandhi_MLA | @arunreporter92 | @DonUpdates_in pic.twitter.com/62APtORdrv
இந்நிலையில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள அன்னதான கூடத்திற்கு மத்திய அரசின் குடும்ப நல அமைச்சகத்திற்கு உட்பட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணைய அதிகாரிகள் தொடர்ச்சியாக கோயில் அன்னதான கூடத்தில் தயாரிக்கப்படும் அன்னதானத்தின் தரம், மற்றும் அன்னதான கூடத்தின் சுத்தம், சுகாதாரம் கடை பிடிக்கப்படுவது குறித்தும், பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவு, உணவு தயாரிக்கும் முறைகள், இடங்கள், அதற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் என அனைத்தும் ஆய்வு செய்யதனர்.
இதனையடுத்து அன்னதான கூடம் சுகாதாரமாகவும், சுத்தமாகவும் இருந்ததோடு, தரமான பாதுகாப்பான உணவுகளை வழங்கியதற்காக உணவு பாதுகாப்புத்துறை சார்பில் தூய்மையான உணவு பாதுகாப்பு வளாகம் என்ற நன்மதிப்பு சான்று வழங்கப்பட்டுள்ளது. இந்த சான்றிதழ் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் அதிகாரிகள் வழங்கி உள்ளனர். சில தினங்களுக்கு முன்பு குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு மீனாட்சியம்மன் கோவிலுக்கு வருகை தந்த பின்னர் மீனாட்சியம்மன் கோயில் அன்னதான கூடத்திற்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மதுரை: முனியாண்டி கோவில் பிரியாணி திருவிழா - விடிய விடிய வரிசையில் நின்று பிரசாதத்தை வாங்கி சென்ற பக்தர்கள்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion