மேலும் அறிய

மதுரை என்றால் மூர்த்தி தான்; அரசு விழா மேடையில் அமைச்சரை மட்டும் புகழ்ந்து தள்ளிய உதயநிதி ஸ்டாலின்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஓராண்டில் 1.18 கோடி பெண்கள் பயன்பெற்று வருகின்றனர். மதுரையில் மட்டும் 4.62 லட்சம் பெண்கள் பயன்பெற்றுள்ளனர் - உதயநிதி பெருமிதம்.

திமுக அரசின் பல்வேறு மகளிர் நலன் திட்டங்களால் தமிழ்நாட்டில் பெண்கள் தலை நிமிர்ந்து நிற்கிறார்கள் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்.
 
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
 
மதுரை ஒத்தக்கடையில் நடந்த விழாவில் 11,500 பேருக்கு வீட்டு மனைப் பட்டாக்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.2,500கோடி மதிப்பிலான கடன் உதவியையும் வழங்கினார். 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு ரூ.298 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “நாடாளுமன்றத் தேர்தலில் 40-40 வெற்றி என்பது திராவிட மாடல் அரசுக்கு மக்கள் அளித்த நற்சான்று. மக்களை தேடிவந்து அரசின் திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடந்தாண்டு ரூ.30,0755 கோடி வங்கிக்கடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு இதுவரை ரூ. 14,000 கோடி அளவிற்கு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைக்கப்பட்டுள்ளது.
 
தமிழ்நாட்டில் பெண்கள் தலை நிமிர்ந்து நிற்கிறார்கள்
 
இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு. உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. அரசுப்பள்ளியில் படித்த மாணவர்கள் ஐஐடி, என்ஐடி, ஐஐஎம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்கின்றனர். தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் படித்த ஏராளமானோர் உலகின் முன்னணி நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர். திமுக அரசின் பல்வேறு மகளிர் நலன் திட்டங்களால் தமிழ்நாட்டில் பெண்கள் தலை நிமிர்ந்து நிற்கிறார்கள். மகளிர் சிரமப்படக்கூடாது, குழந்தைகள் பசியோடு பள்ளிக்கு வரக்கூடாது என்பதற்கே காலை உணவு திட்டம். மகளிர் இலவச பயண திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் 520 கோடி பயணங்களை பெண்கள் மேற்கொண்டுள்ளனர்.
 
மதுரை என்றால் மூர்த்தி தான்
 
மதுரையில் மட்டுமே 21 கோடி இலவச பயணங்களை பெண்கள் மேற்கொண்டுள்ள்ளனர். காலை உணவு திட்டத்தை அரசுப் பள்ளியில் மட்டுமின்றி அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கும் நீட்டித்துள்ளார் முதல்வர். காலை உணவு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நாளும் சுமார் 20 லட்சம் குழந்தைகள் தமிழ்நாட்டில் பயனடைந்து வருகின்றனர். மதுரையில் மட்டும் தினந்தோறும் 80,000 பள்ளி குழந்தைகள் காலை உணவு திட்டத்தில் பயன்பெற்று வருகின்றனர். புதுமைப் பெண், தமிழ் புதல்வன் திட்டத்தின் மூலம் மாதம் 7 லட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். மதுரையில் மட்டும் 15,000 மாணவ, மாணவிகள் புதுமைப் பெண், தமிழ் புதல்வன் திட்டத்தில் பயன். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஓராண்டில் 1.18 கோடி பெண்கள் பயன்பெற்று வருகின்றனர். மதுரையில் மட்டும் 4.62 லட்சம் பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பயன்பெற்றுள்ளனர்,” இவ்வாறு  கூறினார்.
 
திட்டங்கள் குறித்து விவரிக்கும் முன்னர் அமைச்சர் மூர்த்தி குறித்து புகழ்பாடினார். மதுரை என்றாலே மூர்த்தி தான் ஒவ்வொரு நிகழ்வையும் மாநாடு போல் மாற்றிக் காண்பிப்பார். என்று தெரிவித்தார். இது அமைச்சர் பி.டி.ஆர் ஆதரவாளர்கள் மத்தியில் சற்று சோர்வை ஏற்படுத்தியது.
 
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - EPS: தவெகவில் செஞ்சி ராமச்சந்திரன் இணைகிறாரா? - இபிஎஸ்-ன் பதில் என்ன?
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
"உங்களவிட்டு மனைவி ஓடிடுவாங்க.. பாத்துக்கோங்க" அதானி கொடுத்த அட்வைஸ்!
Embed widget