மேலும் அறிய
Advertisement
Kappalur Toll Gate: மீண்டும் கப்பலூர் டோல் பஞ்சாயத்து - "அனுமதி கிடைத்தாலும் ஆர்டர் இல்லாமல் வாகனங்களை அனுமதிக்க முடியாது”
கப்பலூர் டோல்கேட்டில் கடந்து செல்ல உள்ளூர் வாகனங்களுக்கு அனுமதி அளித்த நிலையில், வாகன ஓட்டிகளை சுங்கச்சாவடி நிர்வாகம் order copy கேட்டு விடமறுத்ததால் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு வாக்குவாதம்.
டோல்கேட் சம்பந்தமாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறியதை தொடர்ந்து போராட்டக்காரர்கள் தற்போது கலைந்து சென்றனர்.
சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம்
மதுரை திருமங்கலம் நகராட்சி எல்லைக்குட்பட்ட கப்பலூர் பகுதியில் அமைந்துள்ளது கப்பலூர் டோல்கேட். விதிமுறைக்கு புறம்பாக அமைக்கப்பட்டதோடு, மட்டுமல்லாமல் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண செலுத்த வேண்டுமென நிர்பந்தம் செய்து, கடந்த மாதம் 12 ஆண்டுகளுக்கு மேலாக கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி திருமங்கலம் உள்ளூர் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். கடந்த ஜூலை 10-ஆம் தேதி உள்ளூர் வாகனங்களுக்கு 50% கட்டணம் வசூல் செய்வதாக அறிவித்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு உள்ளூர் வாகன ஓட்டிகள் ஒன்பது மணி நேரம் போராட்டம் நடத்தினர்.
அமைச்சர் தலைமையில் பேச்சுவார்த்தை
அதனைத் தொடர்ந்து 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் மூர்த்தி தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் எந்த ஒரு முடிவும் எட்டப்படாத நிலையில் 18-ம் தேதி தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிலும் எவ்வித முடிவும் எட்டப்படாத நிலையில், சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு 30ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக தெரிவித்தனர். போராட்டக்காரர்களை அழைத்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகம் மற்றும் போராட்டக் குழுவினரை அழைத்து கடந்த ஜூலை 29ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த பேச்சுவார்த்தையில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைமுறைப்படி உள்ளூர் வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் செல்லலாம் எனவும் சுங்கச்சாவடியில் இருந்து 7 km தொலைவில் உள்ள வாகனங்கள் ஆதர அட்டையை காண்பித்து கட்டணம் செலுத்தாமல் செல்லலாம் எனவும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார். மேலும் எழுத்துப்பூர்வமாக கொடுக்க வேண்டும் என போராட்டக் குழுவினர் தெரிவித்தனர். அதற்கு எந்த வித உறுதியும் கொடுக்காமல் அமைச்சரின் மூர்த்தி கூட்டரங்கில் இருந்து வெளியே சென்றார். அதனைத் தொடர்ந்து 30ஆம் தேதி போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தில் அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் உட்பட பலரும் கைது செய்யப்பட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இந்த நிலையில் இன்று உள்ளூர் வாகன ஓட்டி கப்பலூர் சுங்கச்சாவடியை கடந்து செல்ல முற்பட்டபோது கட்டணம் கட்டிவிட்டு செல்லுமாறு கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகம் மீண்டும் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆதார் அட்டையை காண்பித்தால் போதும், என்று மாவட்ட நிர்வாகமே கூறியுள்ளது. என வாகன ஓட்டி கூறிய நிலையிலும், தங்களுக்கு எந்தவித ஆணையும் வரவில்லை எழுத்து நகல் (order copy ) காண்பிக்குமாரு, இல்லையென்றால் சுங்கச் சாவடி கடக்க கட்டணம் செலுத்துமாறு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் உள்ளூர் வாகன ஓட்டிக்கும், கப்பலூர் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கப்பலூர் சுங்கச்சாவடியில் இரண்டு பாதைகளில் உள்ளூர் வாகன ஓட்டுகள் வாகனங்கள் நிறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கப்பலூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
போராட்ட குழு கலைந்து சென்றது
தொடர்ந்து கப்பலூர் சுங்கச்சாவடிக்கு வந்த காவல்துறை போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் கப்பலூர் சுங்கச்சாவடியில் ஏழு கிலோ மீட்டரை தாண்டி உள்ள வாகன ஓட்டிகளும் இலவசமாக செல்ல வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபடுவதாக கூறினர். ஆனால் அதற்கு போராட்டக்காரர்கள் கூத்தியார் குண்டு, தனக்கன்குளம் பகுதியில் இருந்து வந்தவர்கள் தான் செல்ல வேண்டும் என கூறுவதாகவும் ஏழு கிலோமீட்டர் குள்ளே உள்ள பகுதியில் இருப்பவர்களையும் விடுவதில்லை என, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது சம்பந்தமாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறியதை தொடர்ந்து போராட்டக்காரர்கள் தற்போது கலைந்து சென்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion