மேலும் அறிய
Advertisement
Madurai: காஞ்சிபுரம் பட்டு, மதுரை சுங்குடி, சேலம் வெண்பட்டு - விதவிதமாக பாரம்பரிய கலெக்ஷன் பேஷன் ஷோ !
பல்வேறு மாவட்டங்களின் பெருமைகளான சேலை, வேஷ்டிகளை அணிந்து ஒய்யார நடைபோட்டு பெண்களும், அவர்களுக்கு இணையாக ஆண் மாடல்களும் வந்தனர்.
மதுரையில் காஞ்சிபுரம் பட்டு, மதுரை சுங்குடி ஆரணி சில்க்ஸ், சேலம் வெண்பட்டு என விதவிதமாக பாரம்பரிய சேலை வேஷ்டிகளுடன் நடைபெற்ற பேஷன் ஷோ பார்த்து ரசித்த பார்வையாளர்கள்.
தன்னம்பிக்கையை ஊக்குவிப்பதற்காக அழகிப் போட்டிகள்
பெண்களின் தன்னம்பிக்கையை ஊக்குவிப்பதற்காக பல்வேறு பிரிவுகளின் கீழ் அழகிப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. திருமணம் ஆகாத பெண்கள் மட்டுமின்றி, திருமணம் ஆன பெண்களுக்காகவும் அழகிப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்திய பெண்கள் உலகளவில் இதில் கோலாச்சி வரும் நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்களும் இதில் சமீபகாலமாக அசத்தி வருகின்றனர். அதே போல் திருநங்கைகளை உற்சாகப்படுத்தும் விதமாக விழுப்புரத்தில் மிஸ் கூவாகம் என்ற தலைப்பில் ஆண்டுதோறும் அழகிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதே போல் பாரம்பரிய உடைகளை வெளியில் கொண்டுவரும் வகையில் காஞ்சிபுரம் பட்டு, மதுரை சுங்குடி ஆரணி சில்க்ஸ், சேலம் வெண்பட்டு, கோவை கோரச் சேலை, செட்டிநாடு கண்டாங்கி சேலை, செடிபுட்டா சேலை , தோடர் சேலை, திருப்புவனம் சேலை, சின்னாளபட்டு சேலை மற்றும் வேஷ்டிகளை அணிந்துவந்த மாடல்கள் நடத்திய பாரம்பரிய பேஷன் ஷோ மதுரையில் நடைபெற்றது.
- Thiruparankundram: திருமணம் செய்வோருக்கு சிறந்த ஸ்தலம் ; மணக்கோலத்தில் குடிகொண்டுள்ள சுப்பிரமணியன் !
தமிழ்நாடு டிராவல்ஸ் எக்ஸ்போ நிகழ்ச்சிக்கான தொடக்கவிழா நடைபெற்றது.
மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள ஐடாஸ் கட்டர் அரங்கில் தமிழ்நாடு டிராவல்ஸ் எக்ஸ்போ நிகழ்ச்சிக்கான தொடக்கவிழா நடைபெற்றது. இதில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள், நாடுகளை சேர்ந்த ஏராளமான தொழிலதிபர்கள், தங்குவிடுதி உரிமையாளர்கள், ஆடை அலங்கார நிறுவன உரிமையாளர்கள், உணவக உரிமையாளர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
காஞ்சிபுரம் பட்டு, மதுரை சுங்குடி ஆரணி சில்க்ஸ், சேலம் வெண்பட்டு, கோவை கோர சேலை
இதில் CII அதிகாரி, சுற்றுலாத்துறை அதிகாரிகள் என பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டு உரையாற்றினர். இந்த விழாவில் தமிழகத்தின் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் வகையிலான காஞ்சிபுரம் பட்டு, மதுரை சுங்குடி ஆரணி சில்க்ஸ், சேலம் வெண்பட்டு, கோவை கோர சேலை, செட்டிநாடு கண்டாங்கி சேலை, செடிபுட்டா சேலை, தோடர் சேலை, திருப்புவனம் சேலை, சின்னாளபட்டு சேலை மற்றும் வேஷ்டிகளை அணிந்துவந்த மாடல்கள் நடத்திய பாரம்பரிய பேஷன் ஷோ நடைபெற்றது. இதில் கோவை, மதுரை ,நீலகிரி, காஞ்சிபுரம் , திண்டுக்கல், ஆரணி என பல்வேறு மாவட்டங்களின் பெருமைகளான சேலை, வேஷ்டிகளை அணிந்து ஒய்யார நடைபோட்டு பெண்களும், அவர்களுக்கு இணையாக ஆண் மாடல்களும் வந்தனர். இந்த பாரம்பரிய பேஷன்ஷோ நிகழ்ச்சியினை ஏராளமான பார்வையாளர்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்து செல்போனில் படம் எடுத்துக்கொண்டனர். பாரம்பரிய உடைகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையில் இது போன்ற பேஷன் ஷோ நடத்தப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. பல்வேறு துறை சார்ந்த முக்கிய நபர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டதால் இது போன்ற நிகழ்விற்கு அங்கீரம் கிடைக்கும் என பார்வையாளர்கள் தெரிவித்தனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - SIIMA Winner List : ஐந்து விருதுகளை தட்டித்தூக்கிய ஜெயிலர்...சைமா விருது வென்றோர் முழுப் பட்டியல் இதோ
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - IND vs BAN: 515 ரன்கள் டார்கெட்! வங்கதேசத்தை வதைத்த ரிஷப்பண்ட், சுப்மன்கில் சதம் - எளிதில் வெல்லுமா இந்தியா?
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion