மேலும் அறிய
Advertisement
"கால் சிலம்பு, மரப்பாச்சி பொம்மைகள், கீழடி மாதிரி” - மதுரையில் பாரம்பரிய, கலாச்சார கண்காட்சி !
மதுரையில் நடைபெற்ற பாரம்பரிய, பண்பாட்டு கண்காட்சி நிகழ்ச்சியை கல்லூரி மாணவிகள் உற்சாகத்தோடு பார்வையிட்டனர்.
மதுரையை சேர்ந்த தனியார் அறக்கட்டளை(தானம் அறக்கட்டளை) சார்பில் மதுரை கூடல்நகர் பகுதியில் உள்ள பாத்திமா பெண்கள் கல்லூரியில் பாரம்பரிய பண்பாட்டு கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மதுரையில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டனர்.
மதுரை பாத்திமா பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற பாரம்பரிய, பண்பாட்டு கண்காட்சி நிகழ்ச்சியை கல்லூரி மாணவிகள் உற்சாகத்தோடு பார்வையிட்டனர் !#madurai | #FatimaCollege | #MaduraiFatimaCollege | pic.twitter.com/EZgEFhUSGC
— arunchinna (@arunreporter92) October 27, 2022
அறிவியல் தொழில்நுட்பம் வெகுவாக புழக்கத்திற்கு வரும் முன் மக்களிடையே பயன்பாட்டில் இருந்த உரல், அம்மி, சொழகு, ஓலைப்பொருட்கள், முறுக்கு பிழியும் அமுக்கி, கொட்டாச்சி கரண்டி, பாரம்பரிய பானைகள், நெல் கலன்கள், கால் சிலம்பு, மரப்பாச்சி பொம்மைகள், பாரம்பரிய சத்தான அரிசி வகைகள், விறகு அடுப்பு, மண் பானைகள், ஓலையால் செய்யப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்தினர்.
மேலும் மாணவிகள் தங்கள் கைகளால் செய்த கீழடி தொல்லியல் அகழாய்வு மாதிரி வடிவங்கள், பண்டைய கட்டிடங்களின் ஒவியங்கள் உள்ளிட்டவற்றையும் காட்சிப்படுத்தினர். இந்தக்கண்காட்சி மூலம் தாங்கள் பார்க்காத பாரம்பரிய பொருட்களை பார்க்க வாய்ப்பாக அமைந்ததாகவும், நமது பண்பாட்டை தெரிந்து கொள்ள உதவியதாகவும் மாணவிகள் தெரிவித்தனர்.
#மதுரை பாத்திமா பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற பாரம்பரிய, பண்பாடு கலாச்சார கண்காட்சி நிகழ்வு குறித்து வரலாற்றுத்துறை பேராசிரியர் பேட்டி ! #FatimaCollege | #Madurai | #women | #college pic.twitter.com/UVlWOPosdv
— arunchinna (@arunreporter92) October 27, 2022
கண்காட்சி குறித்து வரலாற்று துறை தலைவி சாரா இவாஞ்செலின் கூறுகையில்,” கண்காட்சியின் முக்கிய காட்சிப்படுத்ததலான விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்ட கருவிகள், சமையல் பொருட்கள் விளக்குகள், மண் குவளைகள், நகை பெட்டி, மர பொம்மைகள், அரிவாள், தண்டை, சிலம்பு, தாமிர பாத்திரங்கள் அணியும் பொருட்கள் அழகாக காட்சிப்படுத்தப்பட்டன. கீழடி அகழாய்வு மாதிரிகள், ஐவகை நிலங்கள் செட்டிநாடு கட்டிடக்கலை, கிராமப்புற சுற்றுலா, சித்தனவாசல் குகைக்கோயில், பாண்டிய கல்வெட்டுகள், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், தஞ்சைப் பெரிய கோயில், கங்கைகொண்ட சோழபுரம், மாமல்லபுரம் கடல் கடற்கரை கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில், பாண்டியரின் கொற்கை முத்து துறைமுகம்,
கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் கோயில், யானைமலை காஜிமார் பள்ளிவாசல், ஆல்பர்ட் விக்டர் பாலம், சித்திரைத் திருவிழா, மதுரையின் மிகவும் பிரபலமான உணவுப் பொருட்கள், மதுரை மல்லிகை, மலைக்கோவில், கன்னியாகுமரி திருவள்ளுவர் கோயில், கோவில், ஹொய்சாலேஸ்வரர் கோவில், காவேரி பூம்பட்டினம், கொலு போன்றவைகள் மிகவும் ஆர்வத்துடன் மாணவிகள் பார்வையிட்டனர். தமிழ் பாரம்பரிய மூலிகைகள் மற்றும் மருந்துகளின் காட்சிப்படுத்துதலும் இடம் பெற்றிருந்தன. வரலாற்றுத்துறை சார்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சி மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும்” என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion