மேலும் அறிய

Munnar Double Decker Bus: மூணாறை சுற்றிப் பார்க்க டபுள் டக்கர் பேருந்து சேவை - டிக்கெட் விலை எவ்வளவு?

Munnar Double Decker Bus: டபுள் டக்கர் பேருந்து, கண்ணாடி பலகைகளால் ஆனது என்பதால், பயணிகள் பேருந்தில் இருந்தபடி கண்ணாடி வழியாக இயற்கை அழகை கண்டு ரசிக்க முடியும்.

கேரளாவின் அழகிய மலை வாசஸ்தலங்களில், மூணாறு ஒவ்வொரு பார்வையாளர்களின் பயணத் திட்டத்திலும் ஒரு சிறப்புக் குறிப்பைக் காண்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த மலைகள் மிகவும் தேவையான சுத்தமான காற்றை வழங்குகின்றன. மூணாறில் ஒரு நாளில் பார்க்க வேண்டிய இடங்கள் பல உள்ளன. ஒரு காலத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளின் உறைவிடமாக இருந்த மூணாறு, இன்று நகரின் இரைச்சல் மற்றும் மாசுபாட்டிலிருந்து மிகவும் விரும்பப்படும் இடமாக உள்ளது. சுமையான தேயிலை தோட்டங்களாக இருந்தாலும் சரி, அருவிகளாக இருந்தாலும் சரி, பல்வேறு தாவரவியல் பூங்காக்களில் உள்ள மலர்களின் தெளிவான வண்ணங்களாக இருந்தாலும் சரி, இயற்கை அனுபவங்களுக்கு இங்கு பஞ்சமில்லை. கேரள மாநிலத்தில் உள்ள சுற்றுலா தல வரிசையில் மூணாறு தவிர்க்க முடியாத ஒரு சுற்றுலா தலமாக இருந்து வருகிறது.

Munnar Double Decker Bus: மூணாறை சுற்றிப் பார்க்க டபுள் டக்கர் பேருந்து சேவை - டிக்கெட் விலை எவ்வளவு?

விடுமுறை நாட்கள் உள்பட பல்வேறு நாட்களில் கேரளாவின் சுற்றுலா தலங்களுக்கு அண்டை மாநிலங்களை சேர்ந்த பலரும் குடும்பத்தினருடன் படையெடுத்து வருகின்றனா். கேரள அரசின் வருவாய் சுற்றுலாத்துறையின் பங்கு மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. இதனால் அம்மாநில அரசு சுற்றுலா தலங்களை மேம்படுத்துவது, சுற்றுலா பயணிகளை ஈர்ப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றன. இதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்குவது, சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்கான வசதியாக புதிய வாகனங்களை கொள்முதல் செய்வது உள்ளிட்டவற்றை அரசு செய்கிறது. இந்த நிலையில் கேரளாவின் மூணாறு பகுதியில் சுற்றுலா பயணிகள் வசதிக்காக புதிதாக டபுள் டக்கர் பேருந்து இயக்கப்படுகிறது.

Munnar Double Decker Bus: மூணாறை சுற்றிப் பார்க்க டபுள் டக்கர் பேருந்து சேவை - டிக்கெட் விலை எவ்வளவு?

மூணாறுக்கு வரும் சுற்றுலா பயணிகள் சொகுசாக பேருந்தில் பயணித்தபடி இயற்கை அழகை ரசிக்க வேண்டும் என்பதற்காக புதிதாக இந்த டபுள் டக்கர் பேருந்தை இயக்கி வருவதாக அம்மாநில போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டபுள் டக்கர் பேருந்து, கண்ணாடி பலகைகளால் ஆனது என்பதால், பயணிகள் பேருந்தில் இருந்தபடி கண்ணாடி வழியாக இயற்கை அழகை கண்டு ரசிக்க முடியும். இந்த பேருந்தில் மேல் தளத்தில் 38 பேரும், கீழ் தளத்தில் 12 பேரும் அமருவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. மேல் தள இருக்கைகளுக்கு   நபருக்கு ரூ.400 எனவும், கீழ் தள இருக்கைகளுக்கு நபருக்கு ரூ.200 வீதம் டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Mullai Periyar Dam: பல ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாக நிற்கும்.. முல்லை பெரியாறின் வரலாறு தெரியுமா..?

Munnar Double Decker Bus: மூணாறை சுற்றிப் பார்க்க டபுள் டக்கர் பேருந்து சேவை - டிக்கெட் விலை எவ்வளவு?

இரட்டை அடுக்கு பேருந்து சேவை மலைப்பகுதியின் தற்போதைய சுற்றுலா தொடர்பான வசதிகளை பாதிக்காது எனவும், இரட்டை அடுக்கு பேருந்து சேவை சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும் என சுற்றுலா துறை சார்பாக கூறப்படுகிறது. இரட்டை அடுக்கு பேருந்து சேவை மலைவாசஸ்தலத்தில் தற்போதைய சுற்றுலா தொடர்பான வசதிகளை அச்சுறுத்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Munnar Double Decker Bus: மூணாறை சுற்றிப் பார்க்க டபுள் டக்கர் பேருந்து சேவை - டிக்கெட் விலை எவ்வளவு?

மேலும் மூணாறில் KSRTC-க்கு சொந்தமான நிலத்தில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் கட்டுவதற்கான திட்டங்கள் கோரப்பட்டுள்ளதாகவும், மூணாறில் இருந்து பிற சுற்றுலா தலங்களுக்கு பேருந்து சேவை நிறுவனம் இயக்கும் என்று கூறப்படுகிறது, மேலும் ஆறு மாதங்களுக்குள் KSRTC-யில் கணினிமயமாக்கல் முடிக்கப்படும் எனவும் அதிகாரப்பூரவமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டபுள் டக்கர் பேருந்து தினசரி நான்கு சேவைகள் வழங்குகிறது. மூணாறு ராயல் வியூ இரட்டை அடுக்கு பேருந்து, பேருந்திலிருந்து தேயிலைத் தோட்டங்கள் மற்றும் உயர்மட்டப் பகுதிகளின் 360 டிகிரி பார்வையை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: தரையிறங்கியதுமே பிரச்னை..! 45 நாட்கள், உடலில் இவ்வளவு மாற்றங்களா? சுனிதாவிற்கான சவால்கள்

Sunita Williams Return: 286 நாட்கள் காத்திருப்பு, 17 மணி நேர பயணம், கடலில் தரையிறங்கிய நொடிகள், பூமி திரும்பிய  சுனிதா வில்லியம்ஸ்

Trump Putin: 2.5 மணி நேரம் நீடித்த ஃபோன் கால்.. ட்ரம்ப் அதிரடி, ஓகே சொன்ன புதின் - உக்ரைனில் அமைதி திரும்புமா?

sunita williams Return: நான் வந்துட்டேன்..! பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ், முதல் வீடியோ - இணையத்தில் வைரல்

ABP Premium

வீடியோ

DMDK Alliance DMK | Sunita williams Return | நேரலை செய்யும் NASA ஆளே மாறிப்போன சுனிதா மாணவர்கள் நெகிழ்ச்சி சம்பவம்Nagpur Violence | பற்றி எரியும் மகாராஷ்டிரா இந்துக்கள் இஸ்லாமியர்கள் மோதல் படத்தால் வந்த பஞ்சாயத்துADMK Sengottaiyan: சுத்துப்போட்ட எம்எல்ஏ-க்கள்..! செங்கோட்டையனுக்கு செக்! எடப்பாடி பக்கா ஸ்கெட்ச்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: தரையிறங்கியதுமே பிரச்னை..! 45 நாட்கள், உடலில் இவ்வளவு மாற்றங்களா? சுனிதாவிற்கான சவால்கள்
Sunita Williams: தரையிறங்கியதுமே பிரச்னை..! 45 நாட்கள், உடலில் இவ்வளவு மாற்றங்களா? சுனிதாவிற்கான சவால்கள்
Sunita Williams Return: 286 நாட்கள் காத்திருப்பு, 17 மணி நேர பயணம், கடலில் தரையிறங்கிய நொடிகள், பூமி திரும்பிய  சுனிதா வில்லியம்ஸ்
Sunita Williams Return: 286 நாட்கள் காத்திருப்பு, 17 மணி நேர பயணம், கடலில் தரையிறங்கிய நொடிகள், பூமி திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்
Trump Putin: 2.5 மணி நேரம் நீடித்த ஃபோன் கால்.. ட்ரம்ப் அதிரடி, ஓகே சொன்ன புதின் - உக்ரைனில் அமைதி திரும்புமா?
Trump Putin: 2.5 மணி நேரம் நீடித்த ஃபோன் கால்.. ட்ரம்ப் அதிரடி, ஓகே சொன்ன புதின் - உக்ரைனில் அமைதி திரும்புமா?
sunita williams Return: நான் வந்துட்டேன்..! பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ், முதல் வீடியோ - இணையத்தில் வைரல்
sunita williams Return: நான் வந்துட்டேன்..! பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ், முதல் வீடியோ - இணையத்தில் வைரல்
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே உங்களுக்குத்தான்.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Sunita Williams Return: சுனிதா வில்லியம்ஸ் எத்தனை மணிக்கு பூமிக்கு வர்றாங்க? எப்படி நேரலையில் பார்ப்பது?

Annamalai:
Annamalai: "பக்தர்கள் உயிரிழப்புக்கு சேகர்பாபுதான் பொறுப்பு" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு
IPL 2025 Coach:
IPL 2025 Coach: "பாண்டிங் முதல் பதானி வரை" 10 அணிக்கும் பயிற்சியாளர்கள் யார்? யார்?
Embed widget