வைகை ஆற்றில் வெள்ளத்தில் சிக்கிய குதிரைகள்; 3 மணி நேரத்துக்கு பின் மீட்பு
வைகை ஆற்றில் 3 மணி நேர போராட்டத்திற்கு பின் குதிரைகள் மீட்கப்பட்டது.
#வைகை அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு. மதுரை வைகை ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு வெள்ளத்தில் குதிரைகள் சிக்கிய நிலையில் 3 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
— arunchinna (@arunreporter92) November 14, 2022
| #madurai | @MaruthupandiN2 | @SSluwing | #horse | #vaikai #வைகை | @imanojprabakar | @abpnadu pic.twitter.com/2xBAnHkLeE
ஒரே ஆண்டில் வைகை அணையின் நீர்மட்டம் பலமுறை 70 அடியை எட்டி உள்ளது. அதேபோல அணையின் முழு உயரமான 71 அடியை இதுவரையிலும் ஆறு முறை எட்டி உள்ளது. ஆனால் இந்த ஆண்டு முதல் முறையாக அணைக்கு வினாடிக்கு 10538 கன அடி நீர் வந்ததும், அது உபரிநீராக வெளியேற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தற்போது தேனி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் வைகை அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரித்து, அணையிலிருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவும் மீண்டும் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதால் பொதுப்பணித்துறையினர் அணை நிலவரத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்