கூலித் தொழிலாளியிடம் ரூ.10 லட்சம் வழிப்பறி செய்த பெண் போலீஸ் மீதான வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம்
கூலித் தொழிலாளியிடம் ரூ. 10 லட்சம் வழிப்பறி செய்து சிறைக்கு சென்று தற்போது பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் வசந்தி தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி வழக்கு
கூலித் தொழிலாளி இடம் 10 லட்சம் வழி பறி செய்து சிறைக்கு சென்று தற்போது பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் வசந்தி தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி வழக்கில், சமரச மனுவை ஏற்க முடியாது என நீதிபதி தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்தவர் அர்சத் (வயது33). டெய்லரான இவர், தனியாக தொழில் தொடங்குவதற்காக ரூ.10 லட்சத்தை கடன் வாங்கியிருந்தார். கூடுதலாக பணம் தேவைப்பட்டது. இதனால் கடன் வாங்குவதற்காக ரூ.10 லட்சத்தையும் எடுத்துக்கொண்டு மதுரை நாகமலைப்புதுக்கோட்டை பகுதிக்கு கடந்த ஆண்டு வந்தார். அங்குள்ள ஒரு பாலத்தின் அருகில் அவர் நின்றிருந்தார். அவருக்கு ரூ.5 லட்சம் கடன் தருவதாக கூறியவர்களுக்காக காத்திருந்தார். ஆனால் அந்த வழியாக அப்போதைய நாகமலைபுதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அங்கு வந்தனர்.
அவர்கள், அர்சத்திடம் விசாரித்தனர். அப்போது அவர் தனக்கு கடன் தருபவர்களுக்காக காத்திருக்கும் தகவலை தெரிவித்தார். இதையடுத்து அவர் வைத்திருந்த ரூ.10 லட்சத்தை அவரிடம் இருந்து மிரட்டி இன்ஸ்பெக்டர் வசந்தி பறித்துக்கொண்டார். இதுகுறித்து வெளியில் சொன்னால் பொய் வழக்கு போட்டு, சிறையில் அடைத்துவிடுவோம் என்றும் மிரட்டினார்.
இதுகுறித்து அர்சத், மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவிடம் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் விசாரித்து, நாகமலைபுதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி மற்றும் போலீசார் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது அவருக்கு நிபந்தனை ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் வசந்தி மீது புகார் தெரிவித்த அர்ஷத் , காவல் ஆய்வாளர் வசந்தி உட்பட நான்கு பேர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாங்கள் சமாதானமாக போவதாக முடிவு எடுத்துள்ளதாகவும் புகார் அளித்தவரும், நாங்களும் சமரசமாக செல்வது என பேசி தீர்வு கண்டுள்ளோம். எனவே எங்கள் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சிவஞானம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மனுதாரர் காவல் துறையில் பணியில் இருந்தபோது, பணம் பறித்த சம்பவத்தில் அவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டுவிட்டு, சமரசமாக செல்கிறோம் என்பது ஏற்கத்தக்கதல்ல என்றார். இதையடுத்து இந்த வழக்கை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
திண்டுக்கல் வேடசந்தூரில் கிணற்றுப்பகுதியை ஆக்கிரமித்ததாகக் கூறப்படும், ரமேஷ் குமார், எவ்வளவு இடங்களை ஆக்கிரமித்துள்ளார் என அறிக்கையாகத் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது..
திண்டுக்கல் வேடசந்தூரைச் சேர்ந்த பாக்கியம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், ஆக்கிரமிப்பை அகற்றுமாறு துணை ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், ஸ்ரீமதி அமர்வு வழக்கு விசாரணையின் போது "மனுதாரர் தரப்பில் செய்யப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு அகற்ற பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
வட்டாட்சியரின் அறிக்கையின்படி ஆக்கிரமிப்பு முழுமையாக அகற்றப்படவில்லை என தெரியவந்தது. அதனடிப்படையில் மனுதாரரின் சொத்துக்கள் அளவீடு செய்யப்பட்டு அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
வேடசந்தூரைச் சேர்ந்த் ரமேஷ் குமார் என்பவர் உள்ளாட்சி நிர்வாகத்தால் தோண்டப்பட்ட கிணற்றுப் பகுதியை கடந்த 2011 மே முதல் ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தாசில்தார் தரப்பில் இது அறிக்கையாகவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவரது தரப்பில், " மனுதாரர் பொது இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் அதனை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்" எனவும் குறிப்பிடப்படுகிறது.
மனுதாரர் தரப்பில், " ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக கூறப்படும் இடத்தில் உள்ள கட்டிடத்தை காலி செய்து விட்டதாகவும், அந்த கட்டிடம் தற்போது காலியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு பத்து நாட்களில் அந்த அந்தக் கட்டிடத்தை வேறு இடத்திற்கு மாற்றவோ, இடிக்கவோ நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டது. அது நீதிமன்றத்தால் பதிவு செய்யப்படுகிறது. ரமேஷ்குமார் எவ்வளவு ஆக்கிரமிப்பு செய்துள்ளார் என்பதை முறையாக கணக்கிட்டு, அறிக்கையாக தாக்கல் செய்ய திண்டுக்கல் மாவட்ட வட்டாசியருக்கு உத்தரவிடப்படுகிறது. அதன் அடிப்படையிலேயே உரிய உத்தரவு பிறப்பிக்க நேரிடும் எனக்கூறி வழக்கை ஆகஸ்ட் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்