மேலும் அறிய
Advertisement
அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் சுங்கவரி வசூலிக்க தடை - நெடுஞ்சாலைத்துறைக்கு நீதிமன்றம் எச்சரிக்கை
’’திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலை பராமரிக்கப்படாமல் தரமற்ற முறையில் இருப்பதாக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு’’
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்த் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "திருநெல்வேலி-மதுரை இடையே உள்ள 4 வழி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் திருநெல்வேலியில் இருந்து மதுரை செல்வதற்கு ஒரு வழி கட்டணமாக ரூபாய் 275 வசூலிக்கப்படுகிறது.
ஆனால், இந்த 4 வழி தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் சாலைகள் சேதமடைந்தும், பாலங்கள் பராமரிப்பு வேலைகள் நடைபெறுக்கிறது மேலும் சாலை ஓரங்களில் வெள்ளை கொடு போடப்படவில்லை, ஒளிரும் ஸ்டிக்கர்களும் ஒட்டப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் மேலும் திருநெல்வேலி - மதுரை இடையே உள்ள 4 வழி தேசிய நெடுஞ்சாலையில் அதிகபடியாக விபத்துக்கள் ஏற்படுகிறது. சாலைகள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் பல கிலோமீட்டர் தூரம் நான்கு வழிச்சாலை இரண்டு வழி சாலையாக மாற்றி உள்ளனர்.
நீராதாரத்திற்காக வெட்டப்பட்ட கி.பி.9ஆம் நூற்றாண்டு கல்வெட்டு புதுக்கோட்டையில் கண்டுபிடிப்பு
இதனால், பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே நெல்லை - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பராமரிப்பு பணிகள் நடைபெறும் வரை சுங்கச்சாவடிகளில் வரி வசூல் செய்வதை நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டும்." என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் புஷபா சத்யநாராயனா, வேல்முருகன் அமர்வு 2 வாரத்திற்குள், வழக்கு குறித்து தேசிய நெடுச்சாலை துறை தலைவர் முறையாக பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் அவ்வாறு செய்யத் தவறினால் சுங்கச்சாவடியில் வரி வசூல் செய்வதற்கு தடை விதிக்க நேரிடும் எனக்கூறி வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
க்ரைம்
வேலைவாய்ப்பு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion