மேலும் அறிய
சவுக்கு சங்கருக்கு ஜாமீன்; என்னென்ன நிபந்தனைகள்..?
சவுக்கு சங்கர் தினமும் காலை 10:30 மணிக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். - உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை நீதித்துறை பதிவாளர்
நீதித்துறை பற்றி அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனையை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தற்போது சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
உச்சநீதிமன்றம் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கிய உத்தரவில் நிபந்தனைகளை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதித்துறை பதிவாளர் வழங்க உத்தரவிட்டது.
இதன்படி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதித்துறை பதிவாளர் வெங்கடாவரதன் ஜாமீன் வழங்குவதற்கான நிபந்தனைகளை வழங்கியுள்ளார்.
அதில்,
* சவுக்கு சங்கர் தினமும் காலை 10:30 மணிக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.
* உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சமூக வலைதளங்களில் எந்த கருத்துக்களையும் பதிவிட கூடாது.
* நீதிமன்றம் உத்தரவிட்டால் உடனடியாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சவுக்கு சங்கர் ஆஜராக வேண்டும்.
* நீதித்துறை குறித்து எந்த கருத்துக்களையும் சவுக்கு சங்கர் தெரிவிக்கக் கூடாது.
* 20,000 மதிப்புள்ள பத்திரத்தில் இரண்டு நபர்கள் பிணையம் வழங்க வேண்டும்.
என தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion