மேலும் அறிய
Advertisement
கிராம மக்கள், மாணவர்களின் பாதுகாப்பில் அரசு அதிகாரிகள் அதிக அக்கறை செலுத்த வேண்டும் - நீதிபதி கருத்து
மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய மேல் நீர் தேக்க தொட்டியின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய தொழில்நுட்ப வல்லுநர் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் - உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
கட்டிடங்களின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய நீதிமன்றம் நிபுணர்கள் குழு அல்ல. எனவே தொழில்நுட்ப வல்லுநர்களின் ஆய்வு அறிக்கை படி அரசு உரிய முடிவு எடுக்க வேண்டும்.
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சியில் மிகவும் சேதமடைந்து காணப்படும் நான்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடித்து புதிய நீர்த்தேக்க தொட்டி கட்ட உத்தரவிட கோரிய வழக்கு.
மனிதநேய மக்கள் கட்சியின் மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் கலந்தர் ஆசிக் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொது நல மனுவில், ‘ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சியில் வசிக்கும் மக்கள் முழுவதும் விவசாயத்தையே நம்பி உள்ளனர். சுமார் பல்லாயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி நாள்தோறும் 4 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க 4 மேல் நிலை நீர் தேக்க தொட்டி கட்டி குடிநீர். விநியோக செய்யபட்டு வருகிறது. இந்த நீர் தேக்க தொட்டி. கடந்த 99 ஆம் ஆண்டு கட்டபட்டது தற்போது மிகவும் சேதமடைந்து கீழே இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. தொட்டி கீழே விழும் நிலையில் அருகில் அரசுப்பள்ளிகள், குடியிருப்புகள் உள்ளதால் அசாம்பாவித சம்பவங்கள், உயிர்ப்பலிகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அபாயகரமான நிலையில் உள்ள 4 மேல் நிலை நீர் தேக்க தொட்டிகளை இடித்து புதிய நீர்த் தொட்டிகளை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என தனது மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணை செய்யபட்டு இறுதி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இயற்கையாக அரசு அதிகாரிகள் கிராமமக்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பில் அதிக அக்கறை காட்ட வேண்டும். கட்டிடங்களின் உறுதி தன்மை குறித்து ஆராய்ச்சி செய்ய நீதிமன்றம் நிபுணர்கள் அல்ல. எனவே அரசு அதிகாரிகள் தொழில்நுட்ப நிபுணர்கள் வைத்து நீர்நிலை தொட்டியின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய வேண்டும். அவர்களிடம் இருந்து பெறப்படும் அறிக்கையின் அடிப்படையில் புரிய முடிவு எடுக்கப்பட வேண்டும். ஒருவேளை உறுதித் தன்மை நன்றாக இருந்தால் நீர் தேக்க தொட்டியை இடிக்க தேவை இல்லை. எனவே தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆய்வு செய்து தொட்டிகள் பாதுகாப்பானவை என்று நிபுணர்கள் சான்றளிக்க வேண்டும். இதுவரை நீர் தேக்கத் தொட்டியை தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆய்வு செய்யவில்லை என்றால் மூன்று மாதத்தில் ஆய்வு செய்து அறிக்கை பெற வேண்டும் ஆய்வு அறிக்கையின் படி அரசு உரிய முடிவு எடுக்கலாம் என கூறி வழக்கை முடித்து வைத்தார்.
மேலும் சென்னை தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Cyclone Michaung: ”சென்னையில் 80 சதவீதம் மின் விநியோகம் சரி செய்யப்பட்டுள்ளது" - தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ”மழை நீர் வடிகாலுக்கு 4 கோடி கூட செலவு செய்யவில்லை” - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி !
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion