மேலும் அறிய

CM MK Stalin Letter: இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்களை உடனடியாக மீட்க வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக மீட்க தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.  

தமிழக மீனவர்கள் கைது:

டிசம்பர் 9 ஆம் தேதி, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 25 பேர் 2 படகுகள் மூலம் கைது செய்யப்பட்டுள்ளனர். பருதித்துறை கடற்பரப்பில் இருந்து மீனவர்கள் கைது செய்யப்பட்டு காங்கேசன்துறை கடற்படை துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனால் அப்பகுதி மீனவர்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.  

  இலங்கைக் கடற்படையினரால் 9.12.2023 அன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த 25 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களது 3 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் இதுபோல தொடர்ந்து கைது செய்யப்பட்டு வரும் நிலையில் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக மீட்க உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு இன்று (11-12-2023) கடிதம் எழுதியுள்ளார். 

முதலமைச்சர் கடிதம்:

முதலமைச்சர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், IND-TN-06-MM- 7675 பதிவெண் கொண்ட விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தைச் சேர்ந்த 12 மீனவர்களும், IND-PY-PK-MM-1499 என்ற பதிவெண் கொண்ட விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த 13 மீனவர்களும், 9-12-2023 அன்று இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர் என்று கவலைபடத் தெரிவித்துள்ளார்.

அதோடு, IND-TN-10-MM-558 என்ற பதிவெண் கொண்ட மற்றொரு மீன்பிடிப் படகு இலங்கை கடற்படையின் ரோந்துக் கப்பலால் சேதப்படுத்தப்பட்டுள்ளதையும் முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் மீதான தாக்குதல்கள் சமீபகாலமாக அதிகரித்து வருவது, நமது மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தி வருவதாக தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக மீட்க உரிய நடவடிக்கைகளை இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் மேற்கொள்ள உத்தரவிடுமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Delhi Election Result 2025: கெஜ்ரிவாலை ஓடவிட்ட பாஜக வேட்பாளர்... யார் இந்த பர்வேஷ் வர்மா.?
கெஜ்ரிவாலை ஓடவிட்டபாஜக வேட்பாளர்... யார் இந்த பர்வேஷ் வர்மா.?
Erode Election Result LIVE :  வெற்றிநடையில் திமுக.. டெபாசிட் வாங்குமா நாம்  தமிழர் ?
Erode Election Result LIVE : வெற்றிநடையில் திமுக.. டெபாசிட் வாங்குமா நாம் தமிழர் ?
Erode East By Election Result: எகிறி அடித்த திமுக!  டெபாசிட் வாங்குமா நாதக... ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள் 2025
Erode East By Election Result: எகிறி அடித்த திமுக! டெபாசிட் வாங்குமா நாதக... ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள் 2025
Delhi Election Result 2025: ஹாட்ரிக் டக்-அவுட்டா? கணக்கை தொடங்குமா காங்கிரஸ்? டெல்லியில் தொண்டர்கள் ஏக்கம்..!
Delhi Election Result 2025: ஹாட்ரிக் டக்-அவுட்டா? கணக்கை தொடங்குமா காங்கிரஸ்? டெல்லியில் தொண்டர்கள் ஏக்கம்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”அப்பா நான் போறேன்” தவெக தாவும் ரவீந்திரநாத்? மன வேதனையில் OPSSivagangai : பெண் SI மீது தாக்குதல்  ”காக்கி சட்டையை கழட்டிடுவேன்?”  ஆபாசமாக பேசிய விசிக நிர்வாகிDMK Vs VCK | ”தலித்துகளுக்கு பாதுகாப்பு இல்லை”விசிக தாவிய EX திமுக நிர்வாகி கூட்டணிக்குள் சலசலப்பு!Chennai High Court Warned Seeman | ”வாய்-க்கு வந்ததை பேசாத” சீமானுக்கு நீதிபதி குட்டு” 4 முறை கோர்ட் படி ஏறட்டும்”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Delhi Election Result 2025: கெஜ்ரிவாலை ஓடவிட்ட பாஜக வேட்பாளர்... யார் இந்த பர்வேஷ் வர்மா.?
கெஜ்ரிவாலை ஓடவிட்டபாஜக வேட்பாளர்... யார் இந்த பர்வேஷ் வர்மா.?
Erode Election Result LIVE :  வெற்றிநடையில் திமுக.. டெபாசிட் வாங்குமா நாம்  தமிழர் ?
Erode Election Result LIVE : வெற்றிநடையில் திமுக.. டெபாசிட் வாங்குமா நாம் தமிழர் ?
Erode East By Election Result: எகிறி அடித்த திமுக!  டெபாசிட் வாங்குமா நாதக... ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள் 2025
Erode East By Election Result: எகிறி அடித்த திமுக! டெபாசிட் வாங்குமா நாதக... ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள் 2025
Delhi Election Result 2025: ஹாட்ரிக் டக்-அவுட்டா? கணக்கை தொடங்குமா காங்கிரஸ்? டெல்லியில் தொண்டர்கள் ஏக்கம்..!
Delhi Election Result 2025: ஹாட்ரிக் டக்-அவுட்டா? கணக்கை தொடங்குமா காங்கிரஸ்? டெல்லியில் தொண்டர்கள் ஏக்கம்..!
Delhi Election Result 2025 LIVE: பாஜக வசம் தலைநகரம் - முக்கிய தலைகளை இழந்த ஆம் ஆத்மி, யார் யார் தெரியுமா?
Delhi Election Result 2025 LIVE: பாஜக வசம் தலைநகரம் - முக்கிய தலைகளை இழந்த ஆம் ஆத்மி, யார் யார் தெரியுமா?
Tiruvannamalai Girivalam: திருவண்ணாமலையில் தை மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது தெரியுமா.?
திருவண்ணாமலையில் தை மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது தெரியுமா.?
CM Stalin: முதலமைச்சர் துறைக்கே இந்த நிலைமையா? கருணாநிதி பெருமைக்கே ஆப்பு? ஸ்டாலின் ஆக்‌ஷன் எடுப்பாரா?
CM Stalin: முதலமைச்சர் துறைக்கே இந்த நிலைமையா? கருணாநிதி பெருமைக்கே ஆப்பு? ஸ்டாலின் ஆக்‌ஷன் எடுப்பாரா?
Rock Salt: தீயாய் பரவும் தகவல், திடீரென அதிகரித்த கல் உப்பு விற்பனை -  தமிழ்நாடு முழுவதும் பறந்த உத்தரவு
Rock Salt: தீயாய் பரவும் தகவல், திடீரென அதிகரித்த கல் உப்பு விற்பனை - தமிழ்நாடு முழுவதும் பறந்த உத்தரவு
Embed widget