மேலும் அறிய
Advertisement
மரங்களை பாதிக்காதவாறு சாலைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் - உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை
நெடுஞ்சாலை சார்ந்த பணிகள் மேற்கொள்ளும் போது சாலையோரங்களில் நிற்கும் மரங்கள் பாதிக்காத வகையில் பணிகள் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்திடும் வகையில் மதுரை கலெக்டர் 8 வாரத்திற்குள் உரிய சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.
கடந்த 7.7.2022 அழகர்கோவில் ரோட்டில் டூவீலரில் சென்றபோது சாலையோர மரம் சாய்ந்து விழுந்து எனக்கு பலத்த காயம் ஏற்பட்டதுடன் எனது டூவீலரும் சேதமானது நெடுஞ்சாலைத்துறை தரப்பில் சாலையின் இருபுறமும் நடைபாதை அமைக்கும் பணி நடந்துள்ளது. இதற்காக முறையற்ற வகையில் பள்ளம் தோண்டியதால் மரம் சாய்ந்துள்ளது இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், ரூ.ஒரு லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் எழுத்தராக பணிபுரியும் பழனிக்குமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
ஒப்பந்ததாரர் பணிகளை முறையாக மேற்கொள்ளவில்லை மண் தோண்டப்பட்டதால் பலமிழந்து மரம் சாய்ந்துள்ளது. சம்பவம் குறித்த மனுதாரரின் புகாரின் மீது தல்லாகுளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, 4 வாரத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் நெடுஞ்சாலை சார்ந்த பணிகள் மேற்கொள்ளும் போது சாலையோரங்களில் நிற்கும் மரங்கள் பாதிக்காத வகையில் பணிகள் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்திடும் வகையில் மதுரை கலெக்டர் 8 வாரத்திற்குள் உரிய சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள கொட்டகுடியைச் சேர்ந்த பழனிக்குமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு
ஐகோர்ட் கிளையில் வழக்கறிஞர் எழுத்தராக உள்ளேன். கடந்த 7.7.2022ல் அலுவலகத்திற்கு டூவீலரில் சென்றேன். அழகர்கோவில் ரோட்டில் சென்றபோது சாலையோர மரம் சாய்ந்து விழுந்தது. அதில் எனக்கு பலத்த காயம் ஏற்பட்டது. எனது டூவீலரும் சேதமானது. நெடுஞ்சாலைத்துறை தரப்பில் சாலையின் இருபுறமும் நடைபாதை அமைக்கும் பணி நடந்துள்ளது. இதற்காக முறையற்ற வகையில் பள்ளம் தோண்டியதால் மரம் சாய்ந்துள்ளது. எனவே, இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், ரூ.ஒரு லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: ஒப்பந்ததாரர் பணிகளை முறையாக மேற்கொள்ளவில்லை. மண் தோண்டப்பட்டதால் பலமிழந்து மரம் சாய்ந்துள்ளது. சம்பவம் குறித்த மனுதாரரின் புகாரின் மீது தல்லாகுளம் போலீசார் வழக்குபதிவு செய்திருக்க வேண்டும். ஆனால், அப்படி செய்யவில்லை. எனவே, சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, 4 வாரத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். நெடுஞ்சாலை சார்ந்த பணிகள் மேற்கொள்ளும் போது சாலையோரங்களில் நிற்கும் மரங்கள் பாதிக்காத வகையில் பணிகள் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்திடும் வகையில் மதுரை கலெக்டர் 8 வாரத்திற்குள் உரிய சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion