மேலும் அறிய
Advertisement
உய்யக்கொண்டான் ஆறு ஆக்கிரமிப்பு: ஆவணங்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு!
மனுதாரர் குறிப்பிடும் இடத்தை ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகள் இருப்பின் அவற்றை அகற்றி அப்பகுதியின் ஸ்கெட்ச் மற்றும் புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களுடன் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
திருச்சி மாவட்டம் மேலசவேரியார்புரம் கிராமத்தில் உள்ள உய்யக்கொண்டான் ஆற்றுப்பகுதியில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடக் கோரிய வழக்கில் உத்தரவு.
திருச்சி மாவட்ட பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர், உதவி செயற்பொறியாளர், இடத்தை ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகள் இருப்பின் அவற்றை அகற்றி அப்பகுதியின் ஸ்கெட்ச் மற்றும் புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களுடன் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த பெரியசாமி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "காவிரி ஆறு தமிழகத்தின் முக முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. காவிரி ஆறு, பல கால்வாய்களாக பிரிக்கப்பட்டு, இறுதியாக உய்யக்கொண்டான் ஆற்றில் கலக்கிறது. இந்த கால்வாய்களால் பல கிராமங்கள் பாசன மற்றும் குடிநீர் வசதியைப் பெறுகின்றன. தாயனூரிலிருந்து, உய்யகொண்டான் ஆறு வரையிலான கால்வாயில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. ஆக்கிரமிப்பால் கால்வாயின் அகலம் குறைந்து தண்ணீர் செல்ல இயலாத நிலை உள்ளது. மேலசவேரியார்புரம் கிராமத்தில் உள்ள உய்யக்கொண்டான் ஆற்றுப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. கிராம நிர்வாக அலுவலர், சட்டமன்ற உறுப்பினர் என பலரிடமும் முறையிட்டும் எவ்வித பலனும் இல்லை. ஆகவே திருச்சி மாவட்டம் மேலசவேரியார்புரம் கிராமத்தில் உள்ள உய்யக்கொண்டான் ஆற்றுப்பகுதியில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு, திருச்சி மாவட்ட பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர், உதவி செயற்பொறியாளர் ஆகியோர் மனுதாரர் குறிப்பிடும் இடத்தை ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகள் இருப்பின் அவற்றை அகற்றி அப்பகுதியின் ஸ்கெட்ச் மற்றும் புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களுடன் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 6 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள் சில...
Google pay: இனி ஹிங்கிலீஷில் பணம் அனுப்பலாம் - கூகுள் பே புதிய அப்டேட்!https://t.co/kL0N7iEM5U#GooglePay #Update #Hinglish
— ABP Nadu (@abpnadu) November 18, 2021
பாலியல் வழக்கில் சர்ச்சைக்குரிய கருத்து: பெண் நீதிபதி பதவி நீக்கம்!https://t.co/QkdCx474AF#Bangladesh #Judge #Controversy
— ABP Nadu (@abpnadu) November 18, 2021
IND vs NZ : எல்லாம் 17 மயம்: 17 ம் தேதி... 17 பந்துகள்... 17 ரன்கள்... 17 ம் நம்பர் ஜெர்ஸி... கலக்குறே ரிஷப்!#INDVsNZT20 #pant #jersy17https://t.co/fcwzMdNrAP
— ABP Nadu (@abpnadu) November 18, 2021
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
க்ரைம்
க்ரைம்
தொழில்நுட்பம்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion