மேலும் அறிய
Madurai Hc ; தொல்லியல் துறையில் காலியிடங்கள்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு! அரசுக்கு என்ன உத்தரவு?
தொல்லியல் துறை கொள்கை ரீதியான அடிப்படையில், மனுதாரரின் கோரிக்கைகளை அரசு பரிசீலித்துத் தகுந்த முடிவுகளை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

மதுரைக் கிளை
தொல்லியல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை விரைந்து நிரப்ப கோரிய வழக்கு.
கடல்சார் தொல்லியல் பிரிவையும் உருவாக்க வேண்டும்
மதுரை புஷ்பவனம் என்பவர் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு...,” தமிழகத்தில் உள்ள நினைவுச் சின்னங்களின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பிற்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும். தொல்லியல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். நினைவுச் சின்னங்களை ஆண்டுக்கு ஒருமுறை அதிகாரிகள் ஆய்வு செய்து, அதன் நிலையை புகைப்பட ஆதாரங்களுடன் அறிக்கையாக வெளியிட வேண்டும்.
மேலும் சுற்றுலாப் பயணிகளுக்காக நவீன கழிப்றைகள், உணவகங்கள் அமைக்க வேண்டும். அனைத்துத் தொல்லியல் இடங்களையும் மாற்றுத்திறனாளிகள் எளிதாகச் சென்று பார்க்கும் வகையில் மாற்றியமைக்க வேண்டும். இதே போல தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய இந்தியத் தொல்லியல் ஆய்வு மையம் மற்றும் பிரத்யேகக் கடல்சார் தொல்லியல் பிரிவையும் உருவாக்க வேண்டும். என மனுவில் கூறியிருந்தார்.
பரிசீலித்துத் தகுந்த முடிவுகளை எடுக்க வேண்டும்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு. பழங்கால நினைவுச்சின்னங்கள், தொல்பொருள் தளங்கள் மற்றும் எச்சங்களைப் பாதுகாப்பதற்கான
தேசியத் தொல்லியல் துறை கொள்கை ரீதியான அடிப்படையில், மனுதாரரின் கோரிக்கைகளை அரசு பரிசீலித்துத் தகுந்த முடிவுகளை எடுக்க வேண்டும் என்று இந்த வழக்கை முடித்து வைத்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















