மேலும் அறிய
Madurai Hc ; திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிமன்ற உத்தரவை விமர்சிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம் !
திருப்பரங்குன்றம் விவகாரம்: சமூக ஊடகங்களில் தேவையற்ற விமர்சனங்கள் செய்வதை ஏற்க முடியாது - உயர்நீதிமன்ற நீதிபதிகள்.

மதுரைக் கிளை
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக பிறப்பித்த உத்தரவுகள் குறித்து பொதுவெளியிலோ சமூக ஊடகங்களிலோ தேவையின்றி விமர்சனம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என நீதிபதிகள் கருத்து.
மதுரை உயர்நீதிமன்ற கிளை
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றவேண்டும் என இந்து அமைப்புகள், பி.ஜே.பி.,யினர் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுபடி தீபம் ஏற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் சட்ட ஒழுங்கு காரணம்காட்டி, காவல்துறையினர் மலைக்கு செல்ல அனுமதி மறுத்திவிட்டனர். இதனை தொடர்ந்து, இது நீதிமன்ற அவமதித்தாக தெரிவிக்கப்பட்டு தொடர்பான விசாரணைகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் குறித்து பொதுவெளியிலோ சமூக ஊடகங்களிலோ தேவையின்றி விமர்சனம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் தீபம்
Madurai Thiruparankundram issues ; திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்காத மதுரை மாவட்ட ஆட்சியர் மீது தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரிய, மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்றது. நிர்வாக நீதிபதி ஜெயச்சந்திரன், நீதிபதி ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இருதரப்பு வாதங்கள் நடைபெற்றன. அப்போது பேசிய நீதிபதிகள்...,” இந்த வழக்கில் யாரெல்லாம் எதிர்மனுதாரராக சேர விரும்பினார்களோ அவர்கள் அனைவரையும் எதிர்மனுதாரர்களாக சேர்க்கலாம். அதற்கான கால அவகாசம் வழங்கப்படும். இந்த மனுக்கள் அனைத்தும் வெள்ளிக்கிழமை விசாரணை செய்யப்படும். அதற்குப் பிறகு புதிதாக வரும் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்றனர்.
சமூக ஊடகங்களிலோ தேவையின்றி விமர்சனம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது
திருப்பரங்குன்றம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி வாதம் செய்தபோது, தீபத்தூண் தர்காவுடையது என கோருகிறீர்களா? என வக்ஃபு வாரியத்திடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, இந்த நீதிமன்றமே அனைத்திற்கும் கடைசி நிவாரணம். நீதிமன்றம் அவமதிப்பு நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு நடந்து கொள்ளாதீர்கள் என எச்சரிக்கை செய்தனர். மேலும் அவர்கள், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக பிறப்பித்த உத்தரவுகள் குறித்து பொதுவெளியிலோ சமூக ஊடகங்களிலோ தேவையின்றி விமர்சனம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என எச்சரித்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















