மேலும் அறிய
Madurai Hc; தென்காசி கல் குவாரி முறைகேடு: ட்ரோன் அளவீடு அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!
தென்காசி மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகளை ட்ரோன் மூலமாக அளவீடு பணிகள் முடிவடைந்துள்ளது - அரசு தரப்பு.

மதுரைக் கிளை
தென்காசி மாவட்ட கல் குவாரிகளில் GPS - ட்ரோன் மூலம் ஆய்வு நடத்தி சட்டவிரோத குவாரிகள் நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கு.
ட்ரோன் மூலம் ஆய்வு செய்ய மனு
தென்காசி மாவட்டம் புளியரைச் சேர்ந்த ஜமீன், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில்..,"தென்காசி மாவட்ட கல் குவாரிகளில் அனுமதி பெற்ற அளவை காட்டிலும் அதிகளவில் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு, கேரள மாநிலத்துக்கு கனரக வாகனங்களில் கொண்டுச் செல்லப்படுகிறது. பல குவாரிகள் சட்டவிரோதமாக செயல்படுகிறது. இதனால் தமிழக அரசுக்கு பெரியளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே தென்காசி மாவட்ட கல் குவாரிகளின் ட்ரோன் மூலம் ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அரசுத் தரப்பில், "தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 45 கல்குவாரிகள் உள்ளன. ட்ரோன் மூலமாக அளவீடு பணிகள் முடிவடைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டது. அப்பொழுது நீதிபதிகள் ட்ரோன் மூலம் அளவீடு பணி முடிந்தால் அறிக்கையை எங்கே என கேள்வி எழுப்பினர்.? அறிக்கை விரைவில் தாக்கல் செய்ய படும் என தெரிவிக்கப்பட்டது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அளவிடும் பணியில் பல குளறுபடிகள் நடந்துள்ளது. வழக்கறிஞர் ஆணையம் நியமனம் செய்து ட்ரோன் மூலம் அளவிடும் பணியை நடத்த வேண்டும் என முறையீடு செய்யப்பட்டது. அப்போது நீதிபதிகள் முதலில் அறிக்கை தாக்கல் செய்யட்டும் அதில் என்ன குளறுபடிகள் உள்ளது, என்பதை பிறகு பார்ப்போம். என, தெரிவித்து அறிக்கை தாக்கல் செய்ய இறுதி அவகாசம் வழங்கி வழக்கு விசாரணை ஒத்தி வைத்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















