மேலும் அறிய

Madurai Hc: நர்சிங் கல்லூரி மாணவி பாலியல் வழக்கு; அதிமுக பிரமுகரின் ஜாமீன் மனு தள்ளுபடி

மாணவி முதல் பட்டதாரி ஆக வேண்டும் என்ற ஆசையில் சேர்ந்து பயின்றுள்ளார். அவருக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் மிகவும் கொடுமையானது - நீதிபதி

ஒவ்வொரு மாணவரும் தாங்கள் பயிலும் கல்வி நிறுவனங்களில்  தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்  என்ற முழு நம்பிக்கையுடன் அங்கு நுழைகின்றனர்.- நீதிபதி.

கரூர் மாவட்டம் குளித்தலை ரெயில் நிலையம் அருகே சண்முகா நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் கடந்த 2021-ம் ஆண்டு பழங்குடி இனத்தை சேர்ந்த ஒரு மாணவி, நர்சிங் படிப்பில் சேர்ந்தார். விடுதியில் தங்கி படித்து வந்த அந்த மாணவியை, கல்லூரியின் சட்ட ஆலோசகரும், கல்லூரி நிறுவனரின் சகோதரருமான அ.தி.மு.க. பிரமுகர் வக்கீல் செந்தில்குமார், கட்டாயப்படுத்தி பாலியல் தொந்தரவு அளித்து உள்ளார். பின்னர் கல்லூரி விடுதியில் இருந்து அவரை கடத்திச் சென்று பல்வேறு இடங்களில் வைத்து தொடர் பாலியல் தொந்தரவு அளித்து இருக்கிறார். இந்த சம்பவத்துக்கு விடுதி வார்டன் அமுதவள்ளியும், செந்தில்குமாருக்கு உடந்தையாக இருந்துள்ளனர். பல நாட்கள் கழித்து அவர்களிடம் இருந்து தப்பிய அந்த மாணவி, கடந்த 2022ம் ஆண்டில் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் குளித்தலை அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்து, செந்தில்குமார், அமுதவள்ளி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் இருவரும் தங்களுக்கு ஜாமீன் கேட்டு கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது. கீழ்கோர்ட்டின் இந்த உத்தரவை ரத்து செய்து, தங்களுக்கு ஜாமீன் கேட்டு அவர்கள் இருவரும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

Madurai Hc: நர்சிங் கல்லூரி மாணவி பாலியல் வழக்கு; அதிமுக பிரமுகரின் ஜாமீன் மனு தள்ளுபடி

இந்த மனு நீதிபதி கே.கே. ராமகிருஷ்ணன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது பாதிக்கப்பட்ட மாணவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜாமீன் மனுதாரரான செந்தில்குமார் பிரபல அரசியல் கட்சியில் இருப்பதால், இந்த வழக்கின் சாட்சிகளை எளிதாக கலைத்துவிடுவார். தற்போது அவர் சிறையில் இருந்துவரும்போதே பாதிக்கப்பட்ட மாணவி தரப்பினரை அவரது ஆட்கள் மிரட்டி வருகின்றனர். எனவே வழக்கு விசாரணை முடியும் வரை செந்தில்குமாருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது. சாட்சிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

Madurai Hc: நர்சிங் கல்லூரி மாணவி பாலியல் வழக்கு; அதிமுக பிரமுகரின் ஜாமீன் மனு தள்ளுபடி

விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

குளித்தலை நர்சிங் கல்லூரியில் பழங்குடி இனத்தை சேர்ந்த மாணவி ஒருவர், தனது குடும்பத்தில் முதல் பட்டதாரி ஆக வேண்டும் என்ற ஆசையில் சேர்ந்து பயின்றுள்ளார். அவருக்கு பாலியல் தொந்தரவு அளித்து சம்பவம், கடுமையானது. ஒவ்வொரு மாணவரும் தாங்கள் பயிலும் கல்வி நிறுவனங்களில்  தங்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்ற முழு நம்பிக்கையுடன் அங்கு நுழைகின்றனர். குறிப்பாக பெண் கல்வி நிறுவனங்கள், அங்கு படிக்க வரும் மாணவிகளுக்கு தகுந்த பாதுகாப்பை தருவது அவர்களின் கடமை. கல்வி நிறுவனங்களில் பாலியல் சுரண்டல் இல்லை என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என ஏற்கனவே உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில் மனுதார்கள் மீதான குற்றச்சாட்டுகள் தீவிரமானவை. எனவே செந்தில்குமார், அமுதவள்ளி ஆகியோரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகின்றன. அவர்கள் மீதான வழக்கு விசாரணை முடியும் வரை சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும் இந்த வழக்கை கரூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் 3 மாதத்தில் முடிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Embed widget