Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7: நாடு முழுவதும் இன்றைய பல்வேறு முக்கிய நிகழ்வுகள் தொடர்பான தகவல்களை, உடனுக்குடன் அறிய ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் தொடர்ந்து இணைந்திருங்கள்
LIVE
Background
- பொதுமக்கள் அஞ்சலிக்காக பெரம்பூரில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங்கின் உடல் - பகுஜன் சமாஜ் கட்சி மாயாவதி சென்னை வந்து நேரில் அஞ்சலி செலுத்த திட்டம்
- பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்திலேயே ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய குடும்பத்தினர் கோரிக்கை - சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று அவசர வழக்காக விசாரணை
- ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லையா? திருமாவளவனின் குற்றச்சாட்டுகளுக்கு காவல்துறை விளக்கம்
- பி.எம். கிசான் திட்டத்தில் விவசாயிகளை இணைப்பதில் தமிழக அரசு அலட்சியம் - அண்ணாமலை குற்றச்சாட்டு
- மறுதேதி குறிப்பிடப்படமால் ஒத்திவைக்கப்பட்ட இளநிலை மருத்து படிப்பிற்கான கலந்தாய்வு - இம்மாத இறுதியில் தொடங்க வாய்ப்பு
- உத்தரபிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி 13 பேர் உயிரிழப்பு
- மெய்தி மற்றும் குக்கி இன மக்களிடையே ஓராண்டிற்கும் மேலாக தொடரும் மோதல் - மணீப்பூரில் பாதிக்கபப்ட்டவர்களை நாளை நேரில் சந்திக்கிறார் ராகுல் காந்தி
- அமெரிக்காவில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு - 4 பேர் உயிரிழந்த சோகம்
- இங்கிலாந்தில் சர்ச்சைக்குரிய அகதிகள் சட்டம் ரத்து - பதவியேற்றதுமே புதிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அதிரடி
- இந்தியா - ஜிம்பாப்வே இடை இன்று இரண்டாவது டி20 போட்டி - சுப்மன் கில் தலைமையிலான இளம் அணி தோல்வியில் இருந்து மீண்டு வருமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பு?
- ட்.என்.பி.எல்: சேலம் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்சர் விளாசி மதுரை பாந்தர்ஸ் அணி அபார வெற்றி
இரவு 10 மணி வரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அறிவிப்பு
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, தேனி ஆகிய மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து திருவாமத்தூர் பகுதியில் அமைச்சர் உதயநிதி தேர்தல் பிரச்சாரம்
விக்கிரவாண்டி ஊராட்சியில் ரூபாய் 3 கோடி 18 லட்சம் மதிப்பீட்டில் கெடார் ஊராட்சியில் மாதிரி பள்ளிகள் மற்றும் மாணவர் குடியிருப்பு கட்டுமான பணிகள் விரைந்து முடிக்கப்படும்.
வி.சாலை ஊராட்சியில் ரூபாய் 18 கோடி மதிப்பீட்டில் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்றம் விரைவாக கட்டி முடிக்கப்படும் மக்கள் பயன்பாட்டிற்கு விரைந்து திறக்கப்படும்.
விக்கிரவாண்டி ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்கம் விரைவில் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்.
மேலும் விக்கிரவாண்டி தொகுதியில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலங்கள் விரைந்து முடிக்கப்படும்.
வாதனூர் வாய்க்கால் பணி தூர்வாரப்பட்டு நேர்வழி தடம் நிறைந்த சீர் செய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் நடைபெற்ற வரும் காணை ஊராட்சியில் கட்டப்பட வரும் வட்டார வளர்ச்சி அலுவலகப் பணிகள் விரைந்து முடிக்கப்படும்.
திமுகவை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்
Breaking News LIVE: சிறு வயதில் இருந்தே இந்திய கலாச்சாரம் பிடிக்கும் - ரஷ்ய பெண் கலைஞர்
9ம் தேதி கதக் நடனம் ஆடுவோம்... கலாச்சார மையத்தில் இந்த நடன வடிவத்தை கற்றுக்கொண்டோம்... எனக்கு சிறுவயதில் இருந்தே இந்திய கலாச்சாரம் பிடிக்கும்... இந்திய நடன வடிவங்களை படிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு எப்போதும் உண்டு.
#WATCH | A Russian artist says, "...On 9th we will perform Kathak dance...we learned this dance form at the cultural centre...I liked Indian culture from childhood...I always wanted to study Indian dance forms..." pic.twitter.com/pnrPtJR6aP
— ANI (@ANI) July 7, 2024
ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் மாரி செல்வராஜ், பா. ரஞ்சித் உள்ளிட்டோர் பங்கேற்பு
பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் மாரி செல்வராஜ், பா. ரஞ்சித் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
பொத்தூரில் அடக்கம் செய்யப்படும் ஆம்ஸ்ட்ராங் உடல்: பலத்த பாதுகாப்பு!
திருவள்ளூர்: செங்குன்றம் அருகே பொத்தூரில் ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் செய்யப்படவுள்ள நிலையில், இறுதி ஊர்வலத்திற்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.