மேலும் அறிய

அதிமுக தொண்டர்களுக்கு தனது குடும்பத்துடன் உணவு சமைத்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

சாம்பார், புளி குழம்பு, கூட்டு பொரியல் ஆகியவற்றிறகு தேவையான காய்கறிகளை வெட்டியும், அதனை தனது குடும்பத்தின் சார்பில் உணவுகளை தயாரித்தார்.

சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, சட்ட ஒழுங்கு பிர்சனை உள்ளிட்டவற்றால், பொதுமக்கள் பாதுகப்பட்டுள்ளதாக அதனை கண்டித்தும், உயர்த்தப்பட்ட கட்டணங்களை உடனடியாக  திரும்பபெற வலியுறுத்தி மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் வருகின்ற 9ம் தேதி பேரூராட்சி பகுதியிலும், 13ம் தேதியும் நகராட்சிகள் பகுதிகளிலும், 14 ஆம் தேதி ஒன்றியங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அ.தி.மு.க., சார்பில் நடைபெற உள்ளது.
 
இதுதொடர்பாக மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில்  டி.குன்னத்தூரில்  உள்ள அம்மா கோயிலில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது: ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும்    ஜி 20 மாநாட்டில் ஒவ்வொரு உலக தலைவர்கள் தலைமை பொறுப்பேற்று நடத்துவார்கள். அதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டிற்கான ஜி-20 மாநாட்டை நமது இந்தியா தலைமை பொறுப்பை ஏற்றுள்ளது. இது நமக்கு கிடைத்த மிகப்பெரிய கெளரவமாகும். இந்த மாநாட்டிற்கான அனைத்து கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம், பாரதப் பிரதமர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்க அனைத்து கட்சிகளுக்கு மத்திய அரசு அழைப்பு விட்டது. அதனை தொடர்ந்து நமது கழகத்தின் சார்பில் கழக இடைக்கால பொதுச் செயலாளருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது, இதனைத் தொடர்ந்து அவர் பங்கேற்று நமது இயக்கத்திற்கு மாபெரும் வரலாற்று பெருமையை தேடித் தந்துள்ளார். இதன் மூலம் இந்த இயக்கத்திற்கும், கழக ஒன்னரை கோடி தொண்டர்களுக்கும், மிகப்பெரிய கௌரவத்தை எடப்பாடியார் பெற்றுத் தந்துள்ளார் .எடப்பாடியாரின் வெற்றி மென்மேலும் தொடர புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் அருளாசியும், தொண்டர்கள் ஆதரவும், மக்கள் பேராதரவும் அவரின் கரத்தை மேலும் பலப்படுத்தும். இதன் மூலம் கழகத்திற்கு மாபெரும் வலிமையை உருவாக்கித் தந்துள்ளார். அவருக்கு கூட்டத்தின் வாயிலாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கழக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க, திமுக அரசிற்கு எதிராக நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டங்களில் பொதுமக்களும் பெரும் திரளாக பங்கேற்க செய்திட வேண்டும்.

அதிமுக தொண்டர்களுக்கு தனது குடும்பத்துடன் உணவு சமைத்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
 
கழக அம்மா பேரவையின் சார்பில் பிப்ரவரி 23 ஆம் தேதி 51 ஏழை,எளிய மணமக்களுக்கு தனது பொற்கரங்களால் எடப்பாடியார் திருமணத்தை நடத்தி வைக்கிறார். அதனை தொடர்ந்து வரும் 11ஆம் தேதி இதற்கான முகூர்த்தக்கால் அமைக்கும் பணி டி.குன்னத்தூர் அம்மா கோயிலில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் மூத்த அமைச்சர்களும், தலைமைக் கழக நிர்வாகிகளும், மாவட்ட கழகச் செயலாளர்களும், சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்கிறார்கள்.

அதிமுக தொண்டர்களுக்கு தனது குடும்பத்துடன் உணவு சமைத்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
 
தற்போது வங்க கடலில், புதிதாக  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி மாண்டஸ் என்ற பெயருடன், புதிதாக புயல் உருவாகி இதனால் 7 ம் தேதி முதல் 9ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் கனத்த மழையும், சில மாவட்டங்களில் அதிகமான மழையும் பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. ஆகவே தமிழக அரசு இதை கவனத்தில் கொண்டு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை போர்க்கால அடிப்படை எடுத்து உயிர்பலி இல்லாத பேரிடரை எதிர் கொள்ள வேண்டும் என்று பேசினார்.

அதிமுக தொண்டர்களுக்கு தனது குடும்பத்துடன் உணவு சமைத்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
 
முன்னதாக ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் தொண்டர்களுக்கு ஆர்.பி.உதயகுமார் குடும்பத்தினருடன் சமையலில் ஈடுபட்டார். சாம்பார், புளி குழம்பு, கூட்டு பொரியல் ஆகியவற்றிறகு தேவையான காய்கறிகளை வெட்டியும், அதனை தனது குடும்பத்தின் சார்பில் உணவுகளை தயாரித்தார். இந்த வீடியோ சமூக வலைதலங்களில் பரவி வருகிறது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Manmohan Singh Death: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார் - துடித்துப்போன அரசியல் தலைவர்கள் - மனமுடைந்து இரங்கல்
Manmohan Singh Death: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார் - துடித்துப்போன அரசியல் தலைவர்கள் - மனமுடைந்து இரங்கல்
Manmohan Singh: தத்தளித்த இந்திய பொருளாதாரம், கரையேற்றிய மன்மோகன் சிங் - ”எல்பிஜி” ரீஃபார்ம், லைசன்ஸ் ராஜ் ரத்து
Manmohan Singh: தத்தளித்த இந்திய பொருளாதாரம், கரையேற்றிய மன்மோகன் சிங் - ”எல்பிஜி” ரீஃபார்ம், லைசன்ஸ் ராஜ் ரத்து
Manmohan Singh: வளர்ச்சியே மூச்சு..! இன்றைய இந்தியாவிற்கு, அன்றே அடித்தளம் போட்ட மன்மோகன் சிங் - இவ்வளவு சீர்திருத்தங்களா?
Manmohan Singh: வளர்ச்சியே மூச்சு..! இன்றைய இந்தியாவிற்கு, அன்றே அடித்தளம் போட்ட மன்மோகன் சிங் - இவ்வளவு சீர்திருத்தங்களா?
Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manmohan Singh Death: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார் - துடித்துப்போன அரசியல் தலைவர்கள் - மனமுடைந்து இரங்கல்
Manmohan Singh Death: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார் - துடித்துப்போன அரசியல் தலைவர்கள் - மனமுடைந்து இரங்கல்
Manmohan Singh: தத்தளித்த இந்திய பொருளாதாரம், கரையேற்றிய மன்மோகன் சிங் - ”எல்பிஜி” ரீஃபார்ம், லைசன்ஸ் ராஜ் ரத்து
Manmohan Singh: தத்தளித்த இந்திய பொருளாதாரம், கரையேற்றிய மன்மோகன் சிங் - ”எல்பிஜி” ரீஃபார்ம், லைசன்ஸ் ராஜ் ரத்து
Manmohan Singh: வளர்ச்சியே மூச்சு..! இன்றைய இந்தியாவிற்கு, அன்றே அடித்தளம் போட்ட மன்மோகன் சிங் - இவ்வளவு சீர்திருத்தங்களா?
Manmohan Singh: வளர்ச்சியே மூச்சு..! இன்றைய இந்தியாவிற்கு, அன்றே அடித்தளம் போட்ட மன்மோகன் சிங் - இவ்வளவு சீர்திருத்தங்களா?
Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
"இந்தியா கூட்டணியில் உங்களுக்கு இடம் இல்ல" காங்கிரஸ்-க்கு கெட் அவுட்.. கொதிக்கும் கெஜ்ரிவால்!
Embed widget