மதுரையில் மலர் சந்தையில் வரத்து அதிகரிப்பு - பூக்களின் விலை கடும் வீழ்ச்சி
பூக்களின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதால் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கவலை அடைந்தாலும் பொதுமக்கள் பூக்களை குறைந்த விலையில் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

தென் மாவட்டங்களில் மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தை மிக முக்கியமானது. பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு பூக்களை வாங்கிச் செல்கின்றனர். மதுரை மலர் சந்தையில் இருந்து தான் பல்வேறு இடங்களுக்கும் விமானம் மூலம் மலர்கள் அனுப்பப்படுகிறது.
வரத்து அதிகரிப்பு பூக்களின் கடுமையான வீழ்ச்சி !
மதுரை மாட்டுத்தாவணி மலர்சந்தையில் மல்லிகை பூ கிலோ - ரூ.300க்கு விற்பனை, பிச்சி, முல்லை பூக்கள் கிலோ ரூ.300 க்கும், பட்டன்ரோஸ் - ரூ.80, சம்மங்கி, செண்டுமல்லி பூக்கள் - ரூ.50, கனகாம்பரம் - கிலோ 400ரூபாய்க்கும் விற்பனை. | #Madurai | pic.twitter.com/Wc5FY5hW6k— arunchinna (@arunreporter92) April 28, 2023


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

