மேலும் அறிய
மதுரை அருகே குடிநீரில் மலம் கலந்த அதிர்ச்சி! சோழவந்தான் கிராமத்தில் நடந்தது என்ன? அதிகாரிகள் தீவிர விசாரணை
மேல்நிலைத் தொட்டியை அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறை ஆய்வு செய்தனர். தவறு செய்த நபரை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் தொட்டி
Source : whatsapp
மதுரை சோழவந்தான் அருகே மேல்நிலை குடிநீர் மேல்நிலை தொட்டியில் மலம் கலந்ததாக தெரிவித்த நிலையில் அரசு அதிகாரிகள் மற்றும் சமயநல்லூர் துணை காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
அமச்சியாபுரம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு மேல்நிலைத் தொட்டி
மதுரை மாவட்டம் சோழவந்தான் அடுத்த கருப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட அமச்சியாபுரம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன் மேல்நிலைத் தொட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இப்பகுதியில் அதிகம் ஒரே சமூகத்தை சேர்ந்த பொது மக்கள் மட்டுமே வசித்து வருகின்றனர். இந்த நிலையில் குடிநீரில் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் கூறியதை அடுத்து தொட்டியை ஆய்வு செய்தபோது மலம் போல் மேல்நிலைத்தொட்டியில் கலந்திருப்பது தெரிய வந்ததாக கூறப்படுகிறது.
அதிகாரிகள் ஆய்வு
மேலும் இதன் வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவி வந்த நிலையில் தற்போது இந்த மேல்நிலை தொட்டியை வாடிப்பட்டி துணை தாசில்தார் பார்த்திபன், சமயநல்லூர் துணை காவல் கண்காணிப்பாளர் ஆனந்தராஜ் வாடிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமி காந்தம், ஊராட்சி உதவி இயக்குனர் அரவிந்தன் மற்றும் நேரில் வந்து குடிநீர் மேல்நிலைத்தொட்டியை ஆய்வு செய்தனர்.
தவறு செய்தவர் மீது நடவடிக்கைப்
மேலும் இதுகுறித்து இப்போது மக்கள் கூறுகையில்...,” இந்த பகுதியில் ஒரே சமுதாயத்தை சேர்ந்த சுமார் 600க்கும் மேற்பட்ட பொது மக்கள் வாசித்து வருகின்றனர். இந்த புதிய குழுவில் தொட்டி கட்டப்பட்டு கடந்த ஐந்து நாட்களாக குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. குடிநீரில் துர்நாற்றம் வீசியதாக தெரிவித்த நிலையில் மேல்நிலைத் தொட்டியில் சென்று பார்த்தபோது மலம் கலந்திருப்பது தெரிந்தது. மேலும் இதுகுறித்து அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தோம். தற்போது இந்த மேல்நிலைத் தொட்டியை அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறை ஆய்வு செய்தனர். தவறு செய்த நபரை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் தீவிர விசாரணை
மேலும் இந்த விவகாரத்தில் சிறுவன் ஒருவன் சம்மந்தப்பட்டுள்ளதாகவும், இதனை விளையாட்டுத்தனமாக செய்துள்ளதாகவும் இதில் திட்டமிட்டு காரணம் இல்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருந்த போதிலும் இது குறித்து முழுவிசாரணை செய்த பின் தகவல்கள் வெளிவரும் என சொல்லப்படுகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















