மேலும் அறிய
மதுரை பூ மார்க்கெட்: தீபாவளி நெருங்க நெருங்க பூக்களின் விலை உயருமா? இன்றைய விலை நிலவரம் இதோ!
மதுரை மலர் சந்தையில் பூக்களின் விலை கணிசமாக உள்ளது, தீபாவளி நெருங்கும் நேரத்தில் பூக்கள் விலை அதிக விலைக்கு விற்பனையாக வாய்ப்புள்ளது.

மல்லிகைப் பூ
பூக்கள் விற்பனை மிக சுமாராக உள்ளது. ஒன்றரை டன் வரத்து இருந்ததாகவும், தீபாவளியை ஒட்டி பூக்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்
தென்மாவட்டங்களில் மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் மிக முக்கியமானவை. இந்த மார்க்கெட்டுக்கு மல்லிகைப் பூக்கள் வரத்துக் குறைந்ததால் அதன் விலை முகூர்த்தம் மற்றும் விழாக்கள் இல்லாத நாட்களில் கூட அதிகமாக இருக்கும். அதே போல் திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை, செம்பட்டி, சின்னாளபட்டி, கன்னிவாடி, ஆத்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, வேடசந்தூர், வடமதுரை, சாணார்பட்டி, நத்தம், தொப்பம்பட்டி உள்ளிட்ட இடங்களில் ஆண்டு முழுவதும் மலர் சாகுபடி நடைபெறுகிறது. இந்த பகுதிகளில் நடைபெறும் மலர்கள் அனைத்தும் திண்டுக்கல் அண்ணா வணிக வளாகத்தில் உள்ள மலர் சந்தைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுவது வழக்கம். இப்படி மதுரை மற்றும் சுற்றியுள்ள மலர்சந்தைகளில் பூக்களின் விலை முக்கியதுவம் வாய்ந்தது. இந்நிலையில் முக்கியமான மதுரை பூ மார்கெட்டில் (13.10.2025) இன்றைய விலை குறித்து பார்க்கலாம்.
மதுரை மலர் சந்தையில் பூக்களின் இன்றைய விலை நிலவரம்:
* மல்லி கிலோ ரூ.650,
* பிச்சி ரூ.400,
* முல்லை ரூ.300,
* செவ்வந்தி ரூ.80,
* சம்பங்கி ரூ.60,
* செண்டு மல்லி ரூ.50,
* கனகாம்பரம் ரூ.600,
* ரோஸ் ரூ.100,
* பட்டன் ரோஸ் ரூ.150,
* பன்னீர் ரோஸ் ரூ.180,
* கோழிக்கொண்டை ரூ.60,
* அரளி ரூ.200,
* மரிக்கொழுந்து ரூ.70,
* தாமரை (ஒன்றுக்கு) ரூ.5 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பூக்கள் விற்பனை மிக சுமாராக உள்ளது. ஒன்றரை டன் வரத்து இருந்ததாகவும், தீபாவளியை ஒட்டி பூக்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு என மாட்டுத்தாவணி மீனாட்சி மொத்த பூ வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் முருகன் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
கிரிக்கெட்
இந்தியா
Advertisement
Advertisement






















