மேலும் அறிய
மதுரை மின் நுகர்வோர்களே! குறைகளை நேரடியாக தெரிவிக்கலாம், முக்கிய அறிவிப்பு முழு விவரம் !
மதுரையில் நாளை பல இடங்களில் மின்தடை, அதே போல் வரும் 4-ஆம் தேதி மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது.

மின் நுகர்வோர்களின் குறைதீர் கூட்டம்
Source : whatsapp
மின் நுகர்வோர்களின் குறைகளை நேரடியாக கேட்கும் கூட்டம் நடைபெறவுள்ளது, பொதுமக்கள் கலந்துகொள்ள வேண்டுகோள்.
மின் குறைதீர் கூட்டம்
மேற்பார்வைபொறியாளர் மதுரை மின் பகிர்மான வட்டம் மதுரைபெருநகர், தலைமையில். செயற்பொறியாளர், வடக்கு கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்களின் குறைகளை நேரடியாக கேட்கும் கூட்டம் 04.12.2025 வியாழக்கிழமை அன்று காலை 11.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை மதுரை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள தலைமை பொறியாளர், மதுரை மண்டலம் அலுவலக வளாகத்தில் உள்ள செயற்பொறியாளர், பகிர்மானம் ( வடக்கு ( பெருநாள் / மதுரை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. ஆகையால் இக்கோட்டத்திற்குட்பட்ட தமுக்கம், ரேஸ்கோர்ஸ், செல்லூர், சொக்கிகுளம், திருப்பாலை, ஆனையூர், ஆத்திகுளம், அண்ணாநகர், கே.கே.நகர், புதுர், மேலமடை மின்பிரிவு பகுதிகளில் உள்ள அனைத்து மின் நுகர்வோரும் தங்கள் குறைகளை நேரிலோ (அல்லது) மனுக்கள் மூலமாகவோ மேற்பார்வைப்பொறியாளர், அவர்களிடம் தெரிவித்துக்கொள்ளலாம்.
மாதாந்திர பராமரிப்புப் பணிகள் தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் நாளை காலை 09 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மின் தடை ஏற்படும் பகுதிகள் வில்லாபுரம் ஹவுசிங் போர்டு, FF ரோடு, வில்லாபுரம் கிழக்கு பகுதிகள், சின்னக்கண்மாய், தென்றல் நகர், மணிகண்டன் நகர், மயான ரோடு, அகஸ்தியர் தெரு, அன்பு நகர், காளியம்மன் கோவில், அருப்புக்கோட்டை மெயின் ரோடு, ஜெயவிலாஸ் முதல் வெற்றி தியேட்டர் வரை, வில்லாபுரம் TNHB புதுநகர், அருப்புக்கோட்டை மெயின் ரோட்டில் வெற்றி தியேட்டரிலிருந்து வாசுகி தெரு வரை,LK துளசிராம் தெரு, மீனாட்சி நகர், கணபதி நகர், நல்லதம்பி தோப்பு, காவேரி தெருக்கள், செந்தமிழ் தெருக்கள், சௌடேஸ்வரியம்மன் கோவில், தாமரை தெரு, வைகை தெரு, குரு மஹால் பகுதிகள், ஓம்சக்தி நகர், பரமேஸ்வரி அம்மன் கோவில் தெரு, ஜெயபாரத் சிட்டி 1&2 வாசுகி தெரு, நந்தகோபாலன் தெரு, மற்றும் நேதாஜி தெரு, TVS நகர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















