மேலும் அறிய

Madurai: வேளாண் சுற்றுலா தலங்களை மேம்படுத்த மதுரையில் மாதிரி வேளாண் கிராமம் உருவாக்கம்

செப்டம்பர் 27ம் தேதி,  'உலக சுற்றுலா தினத்தை' முன்னிட்டு தொடங்கிய நிகழ்வு ஒரு மாதமாக நடந்து வருகிறது.

சிலம்பாட்டம், கொம்பு இசை, பறை இசை, மரக்கால், மானாட்டம், மயிலாட்டம், கிழவன் கிழவி ஆட்டம், பொய்க்கால்  ஆட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
 
டிஸ்கவர் தமிழ்நாடு 2024

தமிழ்நாட்டில் உள்ள வேளாண் சுற்றுலா தலங்களை மேம்படுத்தவும், விவசாயத்தின் அவசியத்தை உலகம் முழுவதும் அறியச் செய்யவும் 'டிஸ்கவர் தமிழ்நாடு 2024' என்னும் திட்டத்தின் ஒரு பகுதியாக வேளாண் சுற்றுலாவை, தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நடத்தி வருகிறது. இதற்காக, மதுரை செட்டிகுளம் கிரேஸ் கார்டனில் வேளாண் சுற்றுலா மாதிரி கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாட்டில் நுழையக்கூடிய காய்கறிகள், பழங்கள், நன்செய், புன்செய் பயிர்கள் இங்கு விளைவிக்கப்பட்டுள்ளன. ஆடு, நாட்டுமாடு, கோழி போன்ற கால்நடைகளும் இங்கே வளர்க்கப்படுகின்றன. அன்றாட உணவுக்கு தேவையான அனைத்தும் இங்கேயே விளைவிக்கப்படுகின்றன. டெர்னம் ஹோம்ஸ் உடன் இணைந்து இதே போல், மதுரை காரியாபட்டி அருகில், 35 ஏக்கரில் வேளாண் கிராமம் உருவாக்கப்பட உள்ளது.
 
இன்ஃப்ளுயன்சர்ஸ் ஆன் வீல்ஸ்

செப்டம்பர் 27ம் தேதி,  'உலக சுற்றுலா தினத்தை' முன்னிட்டு தொடங்கிய நிகழ்வு ஒரு மாதமாக நடந்து வருகிறது. இதற்கான விழா செட்டிகுளம் கிரேஸ் கார்டன் வேளாண் சுற்றுலா  மாதிரி கிராமத்தில் நடைபெற்றது. நிகழ்வின் ஒரு பகுதியாக, 'இன்ஃப்ளுயன்சர்ஸ் ஆன் வீல்ஸ்' என்ற நிகழ்வுக்கும் தமிழ்நாடு சுற்றுலாத் துறை ஏற்பாடு செய்திருந்தது. சமூக ஊடகங்களில் பிரபலமாக உள்ள பிரான்ஸ், இலங்கை, வங்கதேசம் உட்பட வெளிநாடு மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 20 சோசியல் மீடியா இன்ஃப்ளுயன்சர்ஸ் சிறப்பு விருந்தினர்களாக இந்நிகழ்வில் பங்கேற்றனர். இவர்களின் மூலமாக தமிழ்நாட்டு வேளாண் சுற்றுலா மற்றும் மற்ற சுற்றுலாத் தலங்களை வெளிநாட்டில் பிரபலப்படுத்தும் நோக்கில் இந்நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 
விளையாட்டுப் போட்டி

கலைமாமணி கோவிந்தராஜ் கலைக்குழு சார்பாக 40 கிராமிய இசைக் கலைஞர்கள் பங்கேற்ற நாட்டுப்புற பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சிலம்பாட்டம், கொம்பு இசை, பறை இசை, மரக்கால், மானாட்டம், மயிலாட்டம், கிழவன் கிழவி ஆட்டம், பொய்க்கால்  ஆட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நிகழ்வில், மன்பாண்டங்கள், பனைகள் நேரடியாக தயாரித்துக் காட்டப்பட்டன. மேலும் இயற்கை நீர் குளியல் கயிறு இழுத்தல் உறியடிப்போட்டி உன்னிட நிகழ்வுகளும் நடத்தப்பட்டன. தமிழ்நாட்டில் மாதிரி வேளாண் கிராமங்களை அமைக்க உள்ள டெரனம் ஹோம்ஸ் ஆனந்த் ரவிச்சந்திரன், கிரேஸ் கார்டன் நிறுவனர் அருள் ஜேம்ஸ் எட்வின்தம்பு, தமிழ்நாடு சுற்றுலாத்துறை அலுவலர் ஜெனட், மதுரை மாவட்ட சுற்றுலா அலுவலர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: “அதிமுக எங்களுக்கு வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு நோ”  தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
TVK Vijay: “அதிமுக எங்களுக்கு வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு நோ” தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
Pongal Bus: மக்களே! தொடங்கியது பொங்கல் பேருந்துகளுக்கான முன்பதிவு - உடனே புக்கிங்கை போடுங்க
Pongal Bus: மக்களே! தொடங்கியது பொங்கல் பேருந்துகளுக்கான முன்பதிவு - உடனே புக்கிங்கை போடுங்க
Kanguva: ''சூர்யாவை விமர்சிக்க உரிமை இல்லை; சினிமாவுக்கு எதிராக மட்டும் சீறுவது ஏன்?'' இயக்குநர் இரா.சரவணன் கேள்வி
Kanguva: ''சூர்யாவை விமர்சிக்க உரிமை இல்லை; சினிமாவுக்கு எதிராக மட்டும் சீறுவது ஏன்?'' இயக்குநர் இரா.சரவணன் கேள்வி
Kasthuri: ஐஸ்வர்யா ராய்க்கே டஃப் கொடுத்தவர் கஸ்தூரி! இத்தனை நாளா இது தெரியாம போச்சே!
Kasthuri: ஐஸ்வர்யா ராய்க்கே டஃப் கொடுத்தவர் கஸ்தூரி! இத்தனை நாளா இது தெரியாம போச்சே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Udhayanidhi Vs EPS : ”ஊர்ந்து போன கரப்பான் பூச்சி நன்றி-னா என்னானு தெரியுமா?”EPS-க்கு உதயநிதி பதிலடிTVK Jhon Arokiasamy : விஜயின் அரசியல் ஆலோசகர் தவெக-வின் MASTER THE BLASTER  ஜான் ஆரோக்கியசாமி யார்?ADMK TVK Alliance : அதிமுகவுடன் டீல் பேசும் விஜய்?துணை முதல்வர் பதவி..80 சீட் புரட்டி போடும் கூட்டணிKasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: “அதிமுக எங்களுக்கு வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு நோ”  தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
TVK Vijay: “அதிமுக எங்களுக்கு வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு நோ” தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
Pongal Bus: மக்களே! தொடங்கியது பொங்கல் பேருந்துகளுக்கான முன்பதிவு - உடனே புக்கிங்கை போடுங்க
Pongal Bus: மக்களே! தொடங்கியது பொங்கல் பேருந்துகளுக்கான முன்பதிவு - உடனே புக்கிங்கை போடுங்க
Kanguva: ''சூர்யாவை விமர்சிக்க உரிமை இல்லை; சினிமாவுக்கு எதிராக மட்டும் சீறுவது ஏன்?'' இயக்குநர் இரா.சரவணன் கேள்வி
Kanguva: ''சூர்யாவை விமர்சிக்க உரிமை இல்லை; சினிமாவுக்கு எதிராக மட்டும் சீறுவது ஏன்?'' இயக்குநர் இரா.சரவணன் கேள்வி
Kasthuri: ஐஸ்வர்யா ராய்க்கே டஃப் கொடுத்தவர் கஸ்தூரி! இத்தனை நாளா இது தெரியாம போச்சே!
Kasthuri: ஐஸ்வர்யா ராய்க்கே டஃப் கொடுத்தவர் கஸ்தூரி! இத்தனை நாளா இது தெரியாம போச்சே!
Udhayanithi:
Udhayanithi: "ஆமா.. நாங்க விஷக்காளான்தான்" EPS சொன்னதை ஒப்புக்கொண்ட உதயநிதி - ஏன்?
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Bus: இனி ஹாப்பி! அரசு பேருந்துகளில் இனி 3 மாசத்துக்கு முன்பே புக்கிங் - அரசு அதிரடி
TN Bus: இனி ஹாப்பி! அரசு பேருந்துகளில் இனி 3 மாசத்துக்கு முன்பே புக்கிங் - அரசு அதிரடி
Tamilnadu Roundup: மத்திய அரசு மீது முதலமைச்சர் குற்றச்சாட்டு! தஞ்சையில் விடுமுறை - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: மத்திய அரசு மீது முதலமைச்சர் குற்றச்சாட்டு! தஞ்சையில் விடுமுறை - தமிழகத்தில் இதுவரை
Embed widget