மேலும் அறிய

மதுரை விதிமீறல் கட்டடங்கள்: 94 அதிகாரிகள் மீது நடவடிக்கை, உயர் நீதிமன்றம் அதிரடி!

விதிகளை மீறி கட்டிய கட்டடங்களை பூட்டி சீல் வைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - மாநகராட்சி ஆணையர் தரப்பில் அறிக்கை.

விதிகளை மீறி கட்டிய கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கிய மாநகராட்சி அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு. மாநகராட்சி ஆணையாளரின் பதிலை ஏற்று வழக்கை முடித்து வைத்து உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.

 
மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அமலன் தாக்கல் செய்த பொதுநல வழக்கு.
 
மதுரை தமிழகத்தில் வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக உள்ளது இந்நிலையில் மதுரையில் வளர்ச்சியில் கட்டுமானங்கள் முக்கியத்துவம் பெறுகிறது இதனை பயன்படுத்தி கடந்த 10 ஆண்டுகளாக விதிமுறைகளுக்கு முரணாக வணிக நிறுவனங்கள் மருத்துவமனைகள், திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது இதனால் போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் வணிக நோக்கத்திற்காக கட்டப்படும் கட்டுமானங்கள் தமிழக அரசின் விதிகளுக்கு முரணாக கட்டுவதால் விபத்துகளும் ஏற்படுகிறது. இந்த கட்டுமானங்கள் கட்டி முடிக்கப்பட்டு கட்டுமான நிறைவு சான்று வழங்கும்போது மாநகராட்சி அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்யாமல் கட்டுமான நிறைவு சான்றுகளும் வழங்கி வருகின்றனர் இது போல் மதுரையில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் விதிமுறைக்கு முரணாகவும் அரசின் அனுமதி இல்லாமலும் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன எனவே அரசின் விதிகளுக்கு எதிராக மற்றும் அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் இதற்கு உறுதுணையாக இருந்த மாநகராட்சி அதிகாரிகள், நகர அமைப்பு கட்டிட அனுமதி வழங்கும் அதிகாரிகள் ங மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என  மனு தாக்கல் செய்திருந்தார்.
 
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
 
இந்த வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்த போது  மதுரை மாநகராட்சி ஆணையாளர் நிலை அறிக்கை தாக்கல் செய்தார். அதில்  விஷால் டி மால் வணிக வளாகம், சரவணா மருத்துவமனை, ஹோட்டல் கௌரி கிருஷ்ணா,தேவகி மருத்துவமனை, 
விக்ரம் மருத்துவமனை, ஜேசி.ரெசிடென்சி, ஆசிர்வாத் மருத்துவமனை என மதுரை மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது சில நிறுவனங்கள் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்திருந்தார்.
 
விதிகளை மீறி கட்டிய கட்டிடங்கள்
 
இதனை பதிவு செய்த நீதிபதிகள் மாநகராட்சியில்  விதிகளுக்கு முரணாக கட்டப்பட்டுள்ள கட்டடங்களை விரைந்து   இடித்து அப்புறப்படுத்தி அதன் நிலை அறிக்கை  தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் சிவி கார்த்திகேயன் சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகராட்சி தரப்பில் விதிகளை மீறி கட்டய கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்துவது குறித்து 90 தனி நபர்களுக்கு விதிகளை பின்பற்றி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது தொடர்ச்சியாக கட்டடங்களை பூட்டி சீல் வைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகராட்சியில் விதிகளை மீறி கட்டய கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கியதாக 94 அலுவலர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விளக்கம் திருப்தி இல்லையெனில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க படும் என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதிகள் இதன் ஆவணங்களை மனுதாரர் வழக்கறிஞருக்கு வழங்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget