மேலும் அறிய

காரைக்காலில் இருந்து கிளம்பிய கார்... சீர்காழி பாலத்தில் காத்திருந்த ட்விஸ்ட்! எஸ்பி-யின் அதிரடி ஆபரேஷன்!

மயிலாடுதுறை அருகே சட்டவிரோதமாக வெளிமாநில மதுபாட்டில்கள் மற்றும் சாராயத்தைக் கடத்தி வந்த காரைக்காலைச் சேர்ந்த நபரை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே சட்டவிரோதமாக வெளிமாநில மதுபாட்டில்கள் மற்றும் சாராயத்தைக் கடத்தி வந்த காரைக்காலைச் சேர்ந்த நபரை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர். அவரிடமிருந்து 2,016 பாண்டி மதுபாட்டில்கள், 110 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 2 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தீவிரமடையும் போதைப்பொருள் தடுப்பு வேட்டை

மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனை, கஞ்சா, குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் போன்ற போதைப்பொருட்களின் நடமாட்டத்தை முற்றிலும் ஒழித்துக்கட்டும் நோக்கில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. B. சினேஹா ப்ரியா உத்தரவின் பேரில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் பகுதியாக, மாவட்டம் முழுவதும் உள்ள மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சிறப்பு அதிரடிச் சோதனைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

தென்னலக்குடி பாலம் அருகே விடிய விடிய அதிரடி சோதனை

இந்நிலையில், சீர்காழி காவல் சரகத்திற்குட்பட்ட தென்னலக்குடி பாலம் பகுதியில் மயிலாடுதுறை மதுவிலக்கு காவல் ஆய்வாளர் ராஜேஷ் தலைமையிலான காவலர்கள் தீவிரக் கண்காணிப்பு மற்றும் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காவலர்களுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், சந்தேகத்திற்கிடமாக வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்தச் சோதனையின் போது, புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த ரகுராமன் (46), த/பெ. கலைசெல்வன்,  திருவேட்டங்குடி, காரைக்கால் என்பவர் சட்டவிரோதமாகப் புதுச்சேரி மாநில மது வகைகளைக் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பெருமளவிலான மது மற்றும் வாகனங்கள் பறிமுதல்

போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், புதுச்சேரியிலிருந்து தமிழகப் பகுதிக்கு அதிக லாபத்திற்கு விற்பனை செய்வதற்காக இந்த மதுபாட்டில்கள் மற்றும் சாராயம் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் கைதான ரகுராமனிடமிருந்து 2,016 பாண்டி மதுபாட்டில்கள், 110 லிட்டர் பாண்டி சாராயம், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 2 நான்கு சக்கர வாகனங்கள் (கார்கள்) பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பொருட்களின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறையில் அடைப்பு

இதையடுத்து, ரகுராமன் மீது சீர்காழி மதுவிலக்கு காவல் நிலையத்தில் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிபதியின் உத்தரவின் பேரில் நீதிமன்றக் காவலுக்கு (சிறையில்) அடைக்கப்பட்டார்.

எஸ்பி கடும் எச்சரிக்கை மற்றும் பொதுமக்களுக்கு கோரிக்கை

இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. B. சினேஹா ப்ரியா, எச்சரிக்கை செய்தி ஒன்றை விடுத்துள்ளார் அதில் "மயிலாடுதுறை மாவட்டத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களின் செயல்பாடுகள் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. சட்டவிரோதமாக மது, கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்பவர்கள் மற்றும் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

"மேலும், போதைப்பொருட்கள் இல்லாத மாவட்டமாக மயிலாடுதுறையை மாற்ற பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும்  கேட்டுக் கொண்டுள்ளார். பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் நடைபெறும் போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பான தகவல்களைத் தமிழக அரசின் DRUG FREE TN செயலி (App) மூலமாக உடனடியாகப் புகாராகத் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் தெரிவிக்கும் பொதுமக்களின் விவரங்கள் முற்றிலும் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்றும் காவலத்துறை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

எமனை வென்ற திருக்கடையூரில் சிலிர்க்க வைத்த ஆன்மீக வைபவம்! என்ன தெரியுமா..?
எமனை வென்ற திருக்கடையூரில் சிலிர்க்க வைத்த ஆன்மீக வைபவம்! என்ன தெரியுமா..?
பெண்களுக்குச் சூப்பர் வாய்ப்பு! அரசு நலத்திட்டங்களைப் பெற ஆன்லைனில் உடனே பதிவு செய்யுங்கள்!
பெண்களுக்குச் சூப்பர் வாய்ப்பு! அரசு நலத்திட்டங்களைப் பெற ஆன்லைனில் உடனே பதிவு செய்யுங்கள்!
பழைய மின்மோட்டாரை மாற்றி 4-Star மின்மோட்டார் வாங்க அரசு மானியம்! உடனே விண்ணப்பியுங்கள்!
பழைய மின்மோட்டாரை மாற்றி 4-Star மின்மோட்டார் வாங்க அரசு மானியம்! உடனே விண்ணப்பியுங்கள்!
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget