மேலும் அறிய
Advertisement
திமுகவின் உட்கட்சி, கூட்டணி கட்சி மோதலால் களேபரம் - 1 மணி நேரம் முடங்கிய மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டம்
திமுக மாமன்ற குழு தலைவர் ஜெயராமனோ எங்களுடையே கேள்விக்கு பதில் சொல்லுங்க மேயரே என கேட்டுகொண்டே இருக்க மேயர் ஆதரவு திமுக மாமன்ற உறுப்பினர்கள் ஒரு பக்கம் வாக்குவாதம் செய்தனர்.
100 வார்டுகளை கொண்ட மதுரை மாநகராட்சியில் மேயர் இந்திராணி, அவர்கள் நிதியமைச்சரின் ஆதரவாளர் என்பதால் பதவியேற்பு தொடங்கி இன்று வரை கோ.தளபதி ஆதரவு மற்றும் அமைச்சர் பி.மூர்த்தி ஆதரவு கவுன்சிலர்கள் தொடர்ந்து தங்களது வார்டு பகுதிகளில் எந்த பணிகளும் நடைபெறவில்லை என கூறி ஒவ்வொரு மாமன்ற கூட்டத்திலும் மேயருக்கு எதிர்ப்பு தெரிவித்து புகார் வாசித்து வருகின்றனர்.
#maduraicorporation | திமுகவின் உட்கட்சி மற்றும் கூட்டணி கட்சி மோதலால் களேபரமாகி ஒரு மணி நேரம் முடங்கிய மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டம் !
— arunchinna (@arunreporter92) April 3, 2023
further reports to follow - @abpnadu#madurai |@LPRABHAKARANPR3
| #TamilNadu @abpnadu @abplive | @dhamurmm91 @k_for_krish |@info_libidosw pic.twitter.com/lPFsUBDKIn
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 58-வது வார்டு தி.மு.க., கவுன்சிலராக ஜெயராமை தி.மு.க., மாமன்ற உறுப்பினர்கள் குழு தலைவராகவும் அவரின் கீழ் சிலரையும் பல்வேறு பதவிகளை ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்து அதனை தி.மு.க.,வின் அதிகாரபூர்வ நாளிதழான முரசொலியிலும் விளம்பரம் வெளியிட்டனர். இந்நிலையில் குழுத்தலைவருக்கு தனி அறை ஒதுக்கீடு குறித்தும், மாமன்ற கூட்டத்திற்கு முன் மாமன்றத்தில் கொண்டுவரும் தீர்மானங்கள் குறித்தும் விவாதிப்பதற்கான அறை ஒதுக்கீடு குறித்தும் கோரிக்கை மேயருக்கு கடிதம் அனுப்பினர்.
அதற்கு பதில் கடிதம் அனுப்பிய மாநகராட்சி நிர்வாகம் உங்களுக்கு வழங்கிய சிறப்பு நிலை பொறுப்பு குறித்த சான்றிதழ் சமர்பிக்க வேண்டும் என கேட்கப்பட்ட நிலையில் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட தங்களுக்கே சான்றிதழ் கேட்டு தங்களை அவமானப்படுத்துவதாக கூறி இன்று நடைபெற்ற மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மேயருக்கு எதிர்ப்பு தெரிவித்து முரசொலியில் வெளியான அறிவிப்பை காட்டி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திமுக தலைமையில் அறிவிப்பை மேயர் இழிவுபடுத்தவதாக கூறி கண்டன முழக்கங்களை எழுப்பி மாநகராட்சி கூட்ட அதிகாரியை முற்றுகையிட்டனர். அப்போது பதிலளித்த மேயர் நானும் திமுக தலைமை என்ன சொல்கிறதோ அதை தான் சொல்கிறேன் என பதிலளித்தார் இதனால் ஜெயராம் தரப்பினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை பார்த்த மேயரின் ஆதரவு திமுக மாமன்ற உறுப்பினர்கள் திமுக மாமன்ற குழு தலைவர் ஜெயராமுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவருடன் வாக்குவாதம் செய்தனர். இதனால் மாநகராட்சி கூட்டம் உட்கட்சி மோதலால் ஒரு மணி நேரத்திற்கு முடங்கியது. இதனால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் கட்சி மாமன்ற உறுப்பினர்கள் இது என்ன கட்சி கூட்டமா? உங்க கட்சி பிரச்சனைய பேசுற இடம் இது என எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட..
அப்போது திமுக மாமன்ற உறுப்பினர்களோ ஏய் என்ன நீ மட்டும் ராகுல்காந்திக்கு ஆதரவாக போர்டு தூக்கிட்டு வந்த என காங்கிரஸ் கட்சியினரை ஒருமையில் பேச அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி மாமன்ற தலைவரோ என்னய்யா இப்டி ஒருமையில் பேசுறனு சொல்லி கொதித்து எழுந்து வாக்குவாதம் செய்தனர்
ஆனாலும் திமுக மாமன்ற குழு தலைவர் ஜெயராமனோ எங்களுடையே கேள்விக்கு பதில் சொல்லுங்க மேயரே என கேட்டுகொண்டே இருக்க மேயர் ஆதரவு திமுக மாமன்ற உறுப்பினர்களான உசிலை செந்தில், ஜெயராஜ், பாண்டியம்மாள் என ஒரு திமுக பிரிவினர் வாக்குவாதம் செய்தனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - சத்தத்தால் அதிர்ந்த மதுரை மாநகராட்சி கூட்டம் ; பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்ட மேயர் !
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
மயிலாடுதுறை
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion