மேலும் அறிய

சத்தத்தால் அதிர்ந்த மதுரை மாநகராட்சி கூட்டம் ; பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்ட மேயர் !

கேள்வி கேட்க வாய்ப்பளிக்கவில்லை என கூறி திமுக மாமன்ற உறுப்பினர்களே மேயர்,  ஆணையாளரிடம் முறையிட்டதால் பரபரப்பு.

மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மேயர் இந்திராணி மற்றும் ஆணையாளர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநகராட்சியில் புதிதாக நியமிக்கப்பட்ட பொறியாளர்கள் தொடர்பாகவும் மாமன்றத்தில் ஒப்பதல் பெறுவதற்கான குறிப்பு வழங்கப்பட்டது. இதில்  மதுரை மாநகராட்சி மேயருக்கு ஆலோசனைகள் வழங்க,  கொள்கைகள், செயல்முறை மற்றும் திட்டங்கள் குறித்து ஆலோசனை வழங்குதல், ஆய்வுகள் தணிக்கைகள் மற்றும் கூட்டங்கள் ஆகியவற்றில்  மேயருடன் கலந்து கொள்ளுதல், அரசுத் துறை மற்றும் உயர் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்களுடன் பணிகள் தொடர்பான மேயர்  தெரிவிக்கும் தகவல்களை தகவல் பரிமாற்றம் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அர்ச்சனா தேவி  என்பவரை ஊதியமின்றி நியமனம் செய்வதற்கான ஒப்பதல் கோரப்பட்டிருந்தன. 

மேயரின் ஆலோசகர் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் ஆதரவாளர் என்பதால் ஏற்கனவே பல முறை சர்ச்சை ஆகியுள்ள நிலையில் தற்போது மாமன்ற கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நிதியமைச்சரின் முழுமையான கட்டுப்பாட்டில் மேயரை கொண்டுவருதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுவதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றனர். இது  சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும் மேயரை தனி நபர் மூலமாக கட்டுப்படுத்தும் முயற்சி எனவும் எதிர்கட்சி மாமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து நடைபெற்ற கேள்வி நேரத்தில் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மண்டல குழு தலைவர்களின் கேள்விகளுக்கு மேயர் பதிலளிக்காமல் முழுவதிலுமாக மேயரின் கூற்றுபடி என்ற வார்த்தையோடு மாநகராட்சி ஆணையாளரே பதில் அளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

சத்தத்தால் அதிர்ந்த மதுரை மாநகராட்சி கூட்டம் ; பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்ட மேயர் !
தொடர்ச்சியாக நடைபெற்ற கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்பு நிதி குறித்து எதிர்கட்சியினர் எழுப்பிய கேள்வியின்போது பதிலளித்த மேயர் மாநகராட்சிக்கு ஆயிரம் கோடி கடன் உள்ளதாக பதிலளித்த நிலையில், ஒப்பந்த பணியாளருக்கான நிலுவைத்தொகை போன்ற நிதிச்செலவீனங்கள் இருப்பதால் சிறப்பு நிதியை உயர்த்த வாய்ப்பில்லை என பதிலளித்தார். இதனையடுத்து சொத்து வரி உயர்வை திரும்ப பெற கோரி எதிர்கட்சி உறுப்பினர்கள் மேயரை முன்பாக முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து தி.மு.கவினரும் முழக்கமிட்டதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து எதிர்கட்சி மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

சத்தத்தால் அதிர்ந்த மதுரை மாநகராட்சி கூட்டம் ; பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்ட மேயர் !
இதன் தொடர்ச்சியாக நடைபெற்ற கூட்டத்தில் திமுக மாமன்ற உறுப்பினர்கள் சிலர் தங்களுக்கு கேள்விக்கான வாய்ப்பு வழங்கவில்லை எனவும்,  மேயருக்கு விருப்பமுள்ள மாமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் வாய்ப்பு அளிப்பதாகவும் கூறி மேயர் மற்றும் ஆணையாளரிடம் முறையிட்டதால் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து எதிர்கட்சி மாமன்ற உறுப்பினர்கள் சபையின் மாண்பை கலங்கடிக்கும் வகையில் செயல்பட்டதால் நடவடிக்கை வேண்டும் என திமுக மண்டல தலைவர்கள் மேயரிடம் மனு அளித்தனர்.

சத்தத்தால் அதிர்ந்த மதுரை மாநகராட்சி கூட்டம் ; பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்ட மேயர் !
 
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த எதிர்கட்சித் தலைவர் சோலைராஜா பேசுகையில், “சொத்து வரி உயர்வை திரும்பப்பெற வேண்டும் எனவும், உறுப்பினர்களின் கேள்விக்கு மேயர் பதிலளிக்கவில்லை, மேயருக்கான ஆலோசகரை நியமிப்பது தொடர்பாக குறிப்பு இடம்பெற்றது தேவையற்றது, கடந்த ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களை தற்போது முடக்கிவைக்கிறார்கள்” என குற்றம்சாட்டினர்.

தலைப்பு செய்திகள்

விருதுநகர் 2026-27: ரூ.37,959 கோடி கடன் திட்டம் - மாவட்ட ஆட்சியர் வெளியீடு!
விருதுநகர் 2026-27: ரூ.37,959 கோடி கடன் திட்டம் - மாவட்ட ஆட்சியர் வெளியீடு!
விருதுநகரில் தேசிய குடற்புழு நீக்க நாள்: 7 லட்சம் குழந்தைகள், பெண்களுக்கு ஆரோக்கிய மாத்திரைகள்!
விருதுநகரில் தேசிய குடற்புழு நீக்க நாள்: 7 லட்சம் குழந்தைகள், பெண்களுக்கு ஆரோக்கிய மாத்திரைகள்!
விருதுநகர்: சதுரகிரி ஆடி அமாவாசை; 6 மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!
விருதுநகர்: சதுரகிரி ஆடி அமாவாசை; 6 மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Embed widget