மேலும் அறிய
சத்யா கொலை; பெண்களை பெற்ற தந்தையாக மனம் குமுறுகிறது - நடிகர் தாமு
மாணவர்களுக்கு கல்லீரல் குறித்து பாடம் வைத்தால் மதுபழக்கத்திற்கு ஆளாகமாட்டார்கள், மாணவர்கள் கிங்காக வர வேண்டும் என்றால் நோ ஸ்மோக்கிங், நோ ட்ரிங்கிக் என்றார்.

நடிகர் தாமு
உலக உணவு தினத்தினை முன்னிட்டு மதுரையில் அட்சய பாத்திரம் என்ற அமைப்பின் சார்பில் பார்வையற்றோருக்கு அரிசி, எண்ணெய் உள்ளிட்ட சமையல் பொருட்கள் மற்றும் இரவு உணவளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரைப்பட நடிகர் தாமு கலந்துகொண்டு பார்வையற்றோர்களுக்கு அரிசி உணவுப்பொருட்களை வழங்கினார். முன்னதாக பார்வையற்றோரிடம் உரையாற்றிய நடிகர் தாமு பார்வையற்றோர்களின் வேண்டுகோளை ஏற்று மிமிக்ரி செய்து காட்டினார். இதில் அட்சய பாத்திரம் அமைப்பின் நிறுவனர் நெல்லை பாலு மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். இதனை தொடர்ந்து பார்வையற்றோருக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் தாமு,” இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகி உள்ளனர். போதை பொருள் தடுப்பது குறித்த விழிப்புணர்வு தொடர வேண்டும். ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது முதல்நாள் காட்சி பார்த்தபின் ரசிகர்கள் கூறும் கருத்தே நிர்ணயித்துவிடும், சினிமாவை ஓடிடியில் பார்ப்பதை விட திரையங்கில் பார்த்து ரசிப்பது தான் அது சினிமா, எவ்வளவு பெரிய விஞ்ஞான வளர்ச்சி வந்தாலும் அது திரையரங்குகளில் தான் இருக்க வேண்டும் என்பது எனது எண்ணம், திரைப்படங்களில் பாசிடிவ், நெகடிவ் இருக்கிறது. இளைஞர்கள் பாசிட்டாவானதை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

சினிமாவில் போதை காட்சிகளில் மது அருந்தக்கூடாது என எழுத்து போடுவது ஏமாற்றுவேலை, இது பெரிய மனமாற்றத்தை தராது. நான் திரைப்படம் இயக்கினால் போதை காட்சிகள் இல்லாமல் எடுப்பேன். சினிமா என்பது பொழுதுபோக்கு தான் நல்ல சினிமா என்பது படம் பார்க்கும்போது டைம் போவதே தெரியாமல் இருப்பது தான் நல்ல சினிமா அது தான் வெற்றிப்படமாக அமையும். திரைப்படங்களில் நகைச்சுவை என்ற பெயரில் பெண்களை உருவக்கேலி செய்வது தடுக்க வேண்டும். யார் மனதையும் காயப்படுத்தக்கூடாது. சென்னை கல்லூரி மாணவி சத்யா கொலை சம்பவத்தை நினைத்தால் அழுகை வருகிறது, பெண் பிள்ளைகளை பெற்ற ஒரு தந்தையாக எனது உள்ளம் குமுறுகிறது, நீதிபோதனைகளை பள்ளி வகுப்பிலயே கற்றுக்கொடுக்க வேண்டும். மாணவர்கள் மீது சினிமாத்துறையினர் அக்கறை காட்ட வேண்டும், சினிமாவில் பள்ளி சீருடையுடன் காதலிப்பது போன்ற காட்சிகளை நிஜம் என இளைஞர்கள் நம்புகின்றனர். இதனால் இளைஞர்கள் மனதில் தாக்கம் ஏற்படும் எனவே இது போன்ற காட்சிகளை தவிர்க்கவேண்டும், சினிமா மூலம் மாற்றத்தை கொண்டுவர வேண்டும். மாணவர்களுக்கு கல்லீரல் குறித்து பாடம் வைத்தால் மதுபழக்கத்தை ஆளாகமாட்டார்கள், மாணவர்கள் கிங்காக வர வேண்டும் என்றால் நோ ஸ்மோக்கிங், நோ ட்ரிங்கிக்” என கேட்டுக்கொண்டார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai Meenakshi Amman Temple: சூரிய கிரகணத்தால் வரும் 25-ந் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நடை அடைப்பு..!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
ஆட்டோ
தமிழ்நாடு
Advertisement
Advertisement