மேலும் அறிய

யாருக்கும் இந்த நிலைமை வரக்கூடாது... செமஸ்டருக்கு பணம் கட்ட காசு இல்லாததால் மாணவர் எடுத்த விபரீத முடிவு

மதுரையில் கல்லூரி செமஸ்டர் கட்டணம் செலுத்த முடியவில்லை எனக்கூறி மன உளைச்சலில் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்த பரிதாபம்.

மதுரையில் கல்லூரி செமஸ்டர் தேர்வு கட்டணம் செலுத்த முடியாத நிலையில் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
செமஸ்டர் தேர்வுக்கான பணம் கட்ட முடியாத சூழலில் மன உளைச்சல்
 
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பூலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மகனான இளமாறன் (18). இவர் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் பி.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்துவந்துள்ளார். இந்த நிலையில் இளமாறன் மதுரை புது விளாங்குடி கணபதி நகர் பகுதியில் உள்ள தனது பாட்டியான அமுதாவின் வீட்டில் தங்கியபடி கல்லூரியில் படித்து வந்துள்ளார். கடந்த செமஸ்டர் தேர்வுக்கான பணம் கட்ட முடியாத சூழலில் கடந்த சில தினங்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ள மாணவன் இளமாறன் இன்று மதியம் திடீரென வீட்டில் ஆள் இல்லாத போது தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
 
காவல்துறையினர் விசாரணை
 
இதனையடுத்து வீட்டிற்கு வந்த இளமாறனின் பாட்டி அமுதா கதவை தட்டிய போது திறக்காத நிலையில் அருகில் உள்ளவர்கள் உதவியுடன் கதவை திறந்து பார்த்தபோது இளமாறன் தூக்கிட்டு தற்கொலை செய்து உயிரிழந்தது தெரியவந்துள்ளது. பின்னர் காவல்துறையினருக்கு அளித்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கூடல் புதூர் காவல்துறையினர் உடலை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து கூடல் புதூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
பல்வேறு கோணங்களிலும் தீவிர விசாரணை
 
மதுரையில் கல்லூரி செமஸ்டர் தேர்வு கட்டணம் செலுத்த முடியாத நிலையில் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினரின் விசாரணையில் முதற்கட்ட தகவலின் செமஸ்டர் கட்டணம் செலுத்த முடியாதது காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என தெரிய வந்த நிலையில் வேறு ஏதும் காரணம் இருக்கிறதா?  என்பது குறித்தும் பல்வேறு கோணங்களிலும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
 
மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.  சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம், எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,  சென்னை - 600 028.  தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Savukku shankar: வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
Student Scholarship: மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
ABP Premium

வீடியோ

Kaliyammal Joins TVK | காளியம்மாளுக்கு மகளிரணி? டிக் அடித்த விஜய்! குஷியில் தவெகவினர்! | NTK | Vijay
Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Savukku shankar: வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
Student Scholarship: மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
TN TRB Exam: உதவிப் பேராசிரியர் தேர்வு எப்போது? ஹால் டிக்கெட் பெறுவது எப்படி? டிஆர்பி அறிவிப்பு
TN TRB Exam: உதவிப் பேராசிரியர் தேர்வு எப்போது? ஹால் டிக்கெட் பெறுவது எப்படி? டிஆர்பி அறிவிப்பு
Savukku Shankar: எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
EPS ADMK: அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
OPS vs EPS: கை விட்ட பாஜக.! கடைசி சான்ஸும் அவுட்... ஓபிஎஸ் போட்ட புதிய பிளான்.?
கை விட்ட பாஜக.! கடைசி சான்ஸும் அவுட்... வேறு வழியில்லாமல் ஓபிஎஸ் போட்ட புதிய பிளான்.?
Embed widget