மேலும் அறிய

இரட்டை ரயில் பாதை பணிகளுக்காக ரயில் போக்குவரத்தில் மாற்றம்

இரட்டை ரயில் பாதை பணிகளுக்காக ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது குறித்து ரயில்வே நிர்வாகம் தகவல்

கோவில்பட்டி - கடம்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை ரயில் பாதை பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகள் நடைபெற வேண்டி உள்ளது. அதற்காக இந்த பகுதியில் ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முழுமையாக ரத்தாகும் ரயில்கள் ஜனவரி 9 அன்று ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட வேண்டிய கன்னியாகுமரி விரைவு ரயில் (22622) மற்றும் ஜனவரி 10 அன்று கன்னியாகுமரியில் இருந்து புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் விரைவு ரயில் (22621) ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. மேலும் திருச்சி - திருவனந்தபுரம் - திருச்சி இன்டர்சிட்டி ரயில்கள் (22627/22628) ஜனவரி 11 அன்று முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. 
 
இரட்டை ரயில் பாதை பணிகளுக்காக ரயில் போக்குவரத்தில் மாற்றம்
 
பகுதியாக ரத்தாகும் ரயில்கள் 
 
1. பாலக்காடு - திருச்செந்தூர் - பாலக்காடு விரைவு ரயில்கள் (16731/16732) ஜனவரி 8, 9, 11 ஆகிய நாட்களில் விருதுநகர் - திருச்செந்தூர் இடையேயும் ஜனவரி 10 அன்று மதுரை - திருச்செந்தூர் இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படும். 
 
2. ஜனவரி 8, 9, 10 ஆகிய நாட்களில் ஈரோட்டில் இருந்து புறப்பட வேண்டிய திருநெல்வேலி விரைவு ரயில் (16845) மற்றும் ஜனவரி 9, 10, 11 ஆகிய நாட்களில் திருநெல்வேலியில் இருந்து புறப்பட வேண்டிய ஈரோடு விரைவு ரயில் (16846) ஆகியவை திண்டுக்கல் - திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
 
3. ஜனவரி 8, 9, 10 ஆகிய நாட்களில் தாம்பரத்திலிருந்து புறப்பட வேண்டிய நாகர்கோவில் அந்தியோதயா விரைவு ரயில் (20691) மற்றும் ஜனவரி 9, 10, 11 ஆகிய நாட்களில் நாகர்கோவில் இருந்து புறப்பட வேண்டிய தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில் (20692) ஆகியவை திருச்சி - நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
 
4. கோயம்புத்தூர் நாகர்கோவில் கோயம்புத்தூர் பகல் நேர விரைவு  ரயில்கள் (16322/16321) ஜனவரி 9, 10, 11 ஆகிய நாட்களில் ஈரோடு - நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இரட்டை ரயில் பாதை பணிகளுக்காக ரயில் போக்குவரத்தில் மாற்றம்
5. ஜனவரி 9, 10 அன்று புனலூரில் இருந்து புறப்பட வேண்டிய மதுரை விரைவு ரயில் (16730) மற்றும் ஜனவரி 10, 11 அன்று மதுரையிலிருந்து புறப்பட வேண்டிய புனலூர்  விரைவு ரயில் (16731) ஆகியவை திருநெல்வேலி - மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
 
6. ஜனவரி 9, 10 அன்று சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய திருச்செந்தூர் செந்தூர் விரைவு ரயில் (16105) மற்றும் ஜனவரி 10, 11 அன்று திருச்செந்தூரில் இருந்து புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர் செந்தூர் விரைவு ரயில் (16106) ஆகியவை திருச்சி - திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
 
7. ஜனவரி 10 அன்று மைசூரில் இருந்து புறப்பட வேண்டிய தூத்துக்குடி விரைவு ரயில் (16236) மற்றும் ஜனவரி 11 அன்று தூத்துக்குடியில் இருந்து புறப்பட வேண்டிய மைசூர் விரைவு ரயில் (16235) ஆகியவை விருதுநகர் - தூத்துக்குடி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

மாற்று பாதையில் இயக்கப்படும் ரயில்கள்
 
1. ஜனவரி 10 அன்று சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய குருவாயூர் விரைவு ரயில் (16127) மற்றும் ஜனவரி 10 அன்று குருவாயூரில் இருந்து புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர் விரைவு ரயில் (16128) ஆகியவை திருநெல்வேலி, தென்காசி, ராஜபாளையம், விருதுநகர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு முறையே 160 மற்றும் 125 நிமிடங்கள் காலதாமதமாக திருநெல்வேலி மற்றும் திருச்சி சென்று சேரும். 
 
2. ஜனவரி 10 அன்று பெங்களூரில் இருந்து புறப்பட வேண்டிய நாகர்கோவில்  விரைவு ரயில் (17235) விருதுநகர், ராஜபாளையம், தென்காசி வழியாக மாற்று பாதையில் இயக்கப்பட்டு 140 நிமிடங்கள் கால தாமதமாக திருநெல்வேலி சென்று சேரும்.

கால தாமதமாகும் ரயில்கள்
 
1. ஜனவரி 10 அன்று திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட வேண்டிய திருச்சி இன்டர்சிட்டி விரைவு ரயில் (22628) 90 நிமிடங்கள் கால தாமதமாக திருச்சி சென்று சேரும்.
 
2. ஜனவரி 10 அன்று சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட வேண்டிய நெல்லை விரைவு ரயில் (12631) மற்றும் முத்து நகர் விரைவு ரயில் (12693) ஆகியவை முறையே 40 மற்றும் 30 நிமிடங்கள் கால தாமதமாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி சென்று சேரும்.
 
3. ஜனவரி 12 அன்று திருச்செந்தூர் - வாஞ்சி மணியாச்சி சிறப்பு ரயில் (06680) திருச்செந்தூரில் இருந்து 110 நிமிடங்கள் காலதாமதமாக புறப்படும்.

தலைப்பு செய்திகள்

விவசாயத்திற்கு மண் அள்றோம்.. பொய் சொல்லிட்டு சிவகங்கையில் என்ன வேலை பாக்குறாங்க தெரியுமா?
விவசாயத்திற்கு மண் அள்றோம்.. பொய் சொல்லிட்டு சிவகங்கையில் என்ன வேலை பாக்குறாங்க தெரியுமா?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
தமிழக தொழில் துறை 17-க்கு சரிவு.. ஆர்.பி. உதயகுமார் த.வெ.க., மீது கொந்தளிப்பு !
தமிழக தொழில் துறை 17-க்கு சரிவு.. ஆர்.பி. உதயகுமார் த.வெ.க., மீது கொந்தளிப்பு !
மதுரை சிறையில் அன்வர்தீன் மரணம்: பழனி கோயில் நில மோசடி வழக்கில் திருப்பம்!
மதுரை சிறையில் அன்வர்தீன் மரணம்: பழனி கோயில் நில மோசடி வழக்கில் திருப்பம்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Embed widget