மேலும் அறிய
Advertisement
மதுரை மத்திய சிறையில் கைதிகளிடம் குறைகளை கேட்டறிந்த சிறைத்துறை டிஜிபி
கைதிகளிடம், அவா்களது குறைகளை அம்ரேஷ் பூஜாரி கேட்டறிந்தாா். மேலும், சிறைத்துறை காவலா்கள் குடியிருப்பு பகுதிக்கு சென்று அங்கு வசிக்கும் சிறைக்காவலா் குடும்பத்தினரிடம் குறைகளை கேட்டறிந்தாா்.
தமிழக சிறைத்துறை டி.ஜி.பி.,யாக அம்ரேஷ் பூஜாரி கடந்த 4- ஆம் தேதி பொறுப்பேற்றது முதல் சிறைத்துறையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறாா். அதன் ஒரு பகுதியாக அவா், தமிழகத்தின் முக்கிய சிறைச்சாலைகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் மதுரை மத்திய சிறைச்சாலையில் சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் பூஜாரி நேற்று ஆய்வு செய்தார். மதுரை சிறையில் கைதிகள் அடைக்கப்படும் பகுதி, நூலகம், மருத்துவமனை, தொழிலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை பாா்வையிட்டாா்.
தமிழக சிறைத்துறை #டிஜிபி தமிழகத்தின் முக்கிய சிறைச்சாலைகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் மதுரை மத்திய சிறைச்சாலையில் சிறைத்துறை டிஜிபி #அம்ரேஷ்பூஜாரி இன்று ஆய்வு செய்தார். மதுரை சிறையில் கைதிகள் அடைக்கப்படும் பகுதி, நூலகம் என பல்வேறு பகுதிகளை பாா்வையிட்டாா். pic.twitter.com/tuBh7eXaC5
— arunchinna (@arunreporter92) November 20, 2022
தொடர்ந்து கைதிகளுக்கு உணவு தயாா் செய்யப்படும் பகுதிக்கு சென்று, அங்கு சுகாதாரமான முறையில் உணவு தயாரிப்பது மற்றும் கைதிகளால் தயாரிக்கப்படும் பொருட்கள் உள்ளிட்டவற்றை சோதனையிட்டார். சிறை வளாகத்தில் தண்டனைக் கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் அறை, விசாரணைக் கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் அறை, பெண்கள் தனிச்சிறை ஆகியவற்றையும் ஆய்வு செய்தாா்.
கைதிகளிடம், அவா்களது குறைகளை அம்ரேஷ் பூஜாரி கேட்டறிந்தாா். மேலும், சிறைத்துறை காவலா்கள் குடியிருப்பு பகுதிக்கு சென்று அங்கு வசிக்கும் சிறைக்காவலா் குடும்பத்தினரிடம் குறைகளை கேட்டறிந்தாா்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - அழகன்குளம் அகழ்வாய்வு அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க நீதிபதி உத்தரவு
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
அரசியல்
வணிகம்
பொது அறிவு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion