மேலும் அறிய

மதுரையில் பம்பர் to பம்பர் Traffic இனி இந்த இடத்தில், இந்த பிரச்னை இருக்காது.. வந்தாச்சுங்க முக்கிய பாலம் !

தமுக்கம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரையில் ரூ.213.80 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலத்தை முதலமைச்சர் நாளை திறந்து வைக்கிறார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மதுரை மாவட்டத்தில் முடிவுற்ற பல்வேறு திட்டப்பணிகளை நாளை (21.02.2026) தொடங்கி வைக்க உள்ளார்கள். 

மதுரை கோரிப்பாளையம் மேம்பாலம்  
 
மதுரையில் நீண்ட நாள் கோரிக்கையான கோரிப்பாளையம் - செல்லூர் பகுதியை இணைக்கும் மேம்பாலம் ரூ.213.80 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் முடிந்தது. கோரிப்பாளையம் மேம்பாலம் பணிகள் விரைவாக முடிந்திருக்க வேண்டும் தனியார் கல்லூரி நிர்வாகம் வழக்கு தொடுக்கப்பட்டதால் தாமதமானது.
 
பாலத்திற்கு சிறப்பு பெயர்
 
 கோரிப்பாளையம் மேம்பாலத்திற்கு சிறப்பான பேரை வைக்க வேண்டும் என கோரிக்கை வந்துள்ளது. இந்த பகுதி மக்கள் என்ன எண்ணுகிறார்களோ அந்த பெயரை முதல்வர் வைப்பார். என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்திருந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன், பாலம் திறப்பு குறித்தும் - பாலத்தின் பெயர் குறித்தும் அறிவிப்பு வெளியானது.
 
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில்
 
”நீண்ட பாலங்களை அமைத்துச் சாதனை படைத்துவரும் நமது #DravidianModel-இல், அடுத்து மதுரையில் அமைகிறது 1.3 கிலோமீட்டர் நீளமுள்ள “நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலம்”! தமுக்கம் மைதானம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரை கட்டப்பட்டுள்ள பாலத்திற்கு, இந்திய நாட்டின் விடுதலைக்காகத் தனக்கெனப் பாதையை உருவாக்கி, நம் தென்மாவட்ட மக்களை விடுதலைப் போரில் ஈடுபடுத்திய வீரத்தின் அடையாளமான #NetajiSubashChandraBose அவர்களின் பெயரைச் சூட்டிப் பெருமிதம் கொள்கிறேன். ரூ.213 கோடியில் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலத்தை வரும் 21-ஆம் நாள் என்னுடைய மதுரைப் பயணத்தில் திறந்து வைக்கிறேன்.” எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பலரும் எதிர்பார்த்த நிலையில் இந்த பாலம் நாளை வெற்றிகரமாக  திறக்கப்படுகிறது. 
 
நாளை முதல்வர் பங்கேற்கும் நிகழ்வு லிஸ்ட்
 
தமிழ்நாடு முதலமைச்சர் நாளை 21.02.2026 மதுரை மாவட்டத்திற்கு வருகை தந்து ரூ.1536.31 கோடி செலவிலான 867 ஊரகக் குடியிருப்புகளுக்கு கூட்டுக் குடிநீர் திட்டம், தமுக்கம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரையில் ரூ.213.80 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலம், ரூ.50 கோடி செலவில் மறுசீரமைக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்ட வண்டியூர் பூங்கா, ரூ.3.50 கோடி செலவில் அங்கூரான் நவீன அறிவியல் மையம், ரூ.1.67 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலகக் கட்டடம் மற்றும் மன்ற கூட்ட அரங்கம், ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் ரூ.50 இலட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள HP கணினி திறன் மேம்பாட்டு மையம் மற்றும் வடபழஞ்சி எல்காட் வளாகத்தில் பினாகிள் இன்ஃபோடெக் நிறுவனத்தின் விரிவுப்படுத்தப்பட்ட புதிய உலகளாவிய சிறப்புப் பொறியியல் மையக் கட்டடம் ஆகியவற்றை துவங்கி வைக்க உள்ளார்கள். இந்நிகழ்வில் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ள உள்ளனர். 
 
தலைப்பு செய்திகள்

தமிழக தொழில் துறை 17-க்கு சரிவு.. ஆர்.பி. உதயகுமார் த.வெ.க., மீது கொந்தளிப்பு !
தமிழக தொழில் துறை 17-க்கு சரிவு.. ஆர்.பி. உதயகுமார் த.வெ.க., மீது கொந்தளிப்பு !
மதுரை சிறையில் அன்வர்தீன் மரணம்: பழனி கோயில் நில மோசடி வழக்கில் திருப்பம்!
மதுரை சிறையில் அன்வர்தீன் மரணம்: பழனி கோயில் நில மோசடி வழக்கில் திருப்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
கள்ளுக்கான தடையை மறு ஆய்வு செய்ய கோரி மனு.. உள்துறை முதன்மைச் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு !
கள்ளுக்கான தடையை மறு ஆய்வு செய்ய கோரி மனு.. உள்துறை முதன்மைச் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு !

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
TASMAC Liquor Bottles : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
Embed widget