விசில் அடிக்க இரு விரல்கள் தேவைப்படும் ஆனால் தற்போது ஒரு விரல் இருந்தாலே போதும் - திரைப்பட நடிகர் ராஜூ கலகல !
நான் ஓட்டு போடுவதற்காக வரிசையில் நிற்கும் சாதாரண ஆள் அவர்களை பற்றி கருத்து ஒன்றும் இல்லை. திமுக - அதிமுக குறித்த கேள்விக்கு நடிகர் ராஜூ பதில்.

விசில் அடிக்க இரு விரல்கள் தேவைப்படும் ஆனால் தற்போது ஒரு விரல் இருந்தாலே போதும்-இதற்கு முன்னால் அடித்த விசில் சத்தம் திரையரங்குகளுக்கு மட்டுமே கேட்கும் ஆனால் தற்போது அடிக்கும் விசில் சத்தம் தமிழ்நாடு முழுவதும் கேட்கும்
கல்லூரி நிகழ்ச்சியில் பன் பட்டர் ஜாம் திரைப்பட நடிகர் ராஜூ
மதுரையில் கல்லூரி மாணவிகளிடையே பேசிய பன் பட்டர் ஜாம் திரைப்பட நடிகர் ராஜூ மதுரை மாவட்டம் பரவை அருகே மங்கையர்கரசி மகளிர் கல்லூரியில் மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான கலாச்சார விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பிக் பாஸ், குக் வித் கோமாளி, டிவி தொகுப்பாளர் மற்றும் திரைப்பட நடிகரான ராஜூ ஜெயமோகன் கலந்து கொண்டு கல்லூரி மாணவிகளின் கேள்விக்கு பதில் அளித்தார்.
மேடையில் பேசியபோது.
ஆண்கள் கல்லூரிக்கு சென்றால் பொதுவாகவே விசில் சத்தம் கேட்க முடியும், பெண்கள் விசில் அடிக்க தெரியததால் விசில் சத்தம் கேட்க முடியவில்லை. விசில் அடிக்க இரு விரல்கள் தேவைப்படும் ஆனால் தற்போது ஒரு விரல் இருந்தாலே போதும். இதற்கு முன்னால் அடித்த விசில் சத்தம் திரையரங்குகளுக்கு மட்டுமே கேட்கும், ஆனால் தற்போது அடிக்கும் விசில் சத்தம் தமிழ்நாட்டு முழுவதும் கேட்கும். என தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவாக பேசினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தாய்மார்கள் கொடுத்த வெற்றியால் தான் "பன் பட்டர் ஜாம்" திரைப்பட வாய்ப்பு கிடைத்தது. அதனால் அவர்களின் ரசனைக்கு ஏற்ப "பன் பட்டர் ஜாம்" திரைப்படம் அமைந்தது. அடுத்து சினிமா ரசிகர்களை கவரும் வகையில் ஐந்து வருடங்களுக்கு முன் நானே எழுதிய கதையில் நானே இயக்கி நானே நடிக்க இருக்கிறேன்.
விஜய் அரசியலுக்கு வந்தது குறித்த கேள்விக்கு
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நமக்கு யாரும் பகை இல்லை எனக்கு விஜய் பிடிக்கும் அவர் அரசியல் வந்ததால் சந்தோசம். விஜய் அமைதியாக பேசுவார் என்று நினைத்தேன். ஆனால் தற்போது மேடைக்கு மேடை விஜய் அவர்கள் பேசும்போது ஆச்சரியமாக உள்ளது. நான் படிக்கும் காலத்தில் எனக்கு எவ்வளவு அரசியல் தெரியும் என்றால் எலக்சன் என்பது ஒரு விடுமுறை நாள் மட்டுமே. ஆனால் தற்போது இருக்கும் தலைமுறையினருக்கு அரசியல் பற்றி நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார்கள்
திமுக அதிமுக கட்சிகளுக்கு மத்தியில் தவெக விஜய் வருகை பற்றி கேள்விக்கு
நான் இதைப் பற்றி பேசினால் கமெண்டில் என்னை அடி அடி என அடிப்பார்கள். அவர்கள் எல்லாம் பெரிய கட்சியினர். நான் ஓட்டு போடுவதற்காக வரிசையில் நிற்கும் சாதாரண ஆள் அவர்களை பற்றி கருத்து ஒன்றும் இல்லை
தற்போதயெல்லாம் பார்வையாளர்களை எண்ணிக்கையாக தான் பார்க்கிறார்கள்
ஒருவர் மீது உள்ள அபிமானத்தை எவ்வாறு பணமாக மாற்றலாம் என்றுதான் நினைக்கிறார்கள் நிறைய இடங்களில், சாப்பிடுபவர்களை மனதில் வைத்து சமைத்தால் தான் மறுமுறை நம்மை அணுகுவார்கள். அதே போல், எவ்வளவு தாமதமாக செய்தாலும் எவ்வளவு முறை செய்தாலும் மக்கள் ரசித்து சிரிக்கும் வகையில் எடுக்க வேண்டும் நானும் அதை செய்வேன்” இவ்வாறு பேசினார்.























