Madurai Book Fair 2024: மதுரையில் புத்தக திருவிழா ஆரம்பிக்க போறாங்க...எப்போ, எங்க, என்னென்ன ஏற்பாடுன்னு தெரியணுமா?
புத்தகத் திருவிழாவில் முன்னணி பதிப்பகங்களின் அரங்குகள், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த சிறப்பு அரங்குகளும் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தினந்தோறும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள். பிரபல எழுத்தாளர்கள், பட்டிமன்றப் பேச்சாளர்கள் பங்கேற்கும் சிந்தனை அரங்கம் நிகழ்ச்சி நடைபெற உள்ளன.
Madurai Book Fair 2024 ;
வரலாற்று பெருமைமிக்க மதுரையின் அடையாளமாக திகழும் தமுக்கம் மைதானத்தில் ஆண்டுதோறும் புத்தக திருவிழா நடைபெறும். தென் மாவட்ட மக்களுக்கு மையமாக கருதப்படும் மதுரையில், நடத்தப்படும் புத்தக திருவிழாவிற்கு இலட்சக்கணக்கான வாசகர்கள் வந்து செல்வார்கள். இந்நிலையில் இந்தாண்டு புத்தக திருவிழா நடைபெறும் நிகழ்வு குறித்து அறிவுப்பு வெளியாகியுள்ளது.
- Madurai: கிருஷ்ண ஜெயந்தி திருவிழா: வழுக்குமரம் ஏறி அசத்திய இளைஞர்கள்! கிராம மக்கள் பாராட்டு !
மதுரை மாவட்ட ஆட்சியர் தகவல்
மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள மதுரை மாநாட்டு மையத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பாக புத்தகத் திருவிழா 2024 நடைபெறவுள்ளது. என மதுரை மாவட்ட ஆட்சிதலைவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா தெரிவித்துள்ளதாவது...,” மதுரை மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகம் சார்பாக ப.பா.சி. ஒருங்கிணைப்பில் ஆண்டுதோறும் புத்தக திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், நடப்பாண்டிற்கான புத்தக திருவிழா மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள மதுரை மாநாட்டு மையத்தில் வருகின்ற 06.09.2024 முதல் 16.09.2024 வரையில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மதுரை புத்தக திருவிழா ஏற்பாடு
இதற்கான முன்னேற்பாடுபணிகள் துரிதமாக புத்தகத் திருவிழாவில் முன்னணி பதிப்பகங்களின் அரங்குகள் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த சிறப்பு அரங்குகளும் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல தினந்தோறும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள். பிரபல எழுத்தாளர்கள், பட்டிமன்றப் பேச்சாளர்கள் பங்கேற்கும் சிந்தனை அரங்கம் நிகழ்ச்சி நடைபெற உள்ளன. மேலும், புத்தகத் திருவிழாவிற்கு வரும் அனைவரும் சுவையான. சுகாதாரமான சிற்றுண்டி உணவு வகைகளை உண்டு மகிழ உணவு அரங்குகள் தயார் செய்யப்பட உள்ளது” எனவும் கூறியுள்ளார்.
புத்தகம் வாங்க திட்டம்
இது குறித்து மேலூர், பழையசுக்காம்பட்டி கக்கன் வாசகர் வட்டம் இளைஞர்கள் நம்மிடம்...,” மதுரையில் ஒவ்வொரு விடயங்களும் கொண்டாடப்படும். அப்படி தான் புத்தக திருவிழாவையும் வரவேற்போம். இந்தாண்டு புத்தக திருவிழா தேதி அறிவிப்பு வெளியானது மகிழ்ச்சி அளிக்கிறது. ’சுளுந்தி, கடலும் கிழவனும், அழகர்கோயில், பார்த்திபன் கனவு, அறியப்படாத தமிழகம், சமயங்களின் அரசியல், அவன் காட்டை வென்றான்’ - உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை எங்கள் மன்றம் சார்பாக வாங்க முடிவு செய்துள்ளோம். தொடர் வாசிப்பு எங்கள் மன்ற இளைஞர்களை மேம்படுத்தும். எங்களுக்கு பின்னால் வரும் இளைஞர்களும் இதனை பின்பற்ற எளிமையாக இருக்கும். அதே போல் புத்தக வாசிப்பிற்கு மதுரை கலைஞர் நூலகம் கிடைத்ததும், மதுரை மக்களுக்கு வரப்பிரசாதம் தான். எனவே புத்தக திருவிழா, நூலகங்களை அனைவரும் பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என தெரிவித்தனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Vande Bharat: இப்ப வருகிற வந்தே பாரத் தான் மெயின் பிக்சர்: 31-ல் துவங்கி வைக்கிறார் மோடி!
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - "எந்த நாகரிக சமூகமும் இதை ஏத்துக்காது" கொல்கத்தா சம்பவம் குறித்து மனம் நொந்து பேசிய குடியரசு தலைவர்!