மேலும் அறிய

மதுரையில் மலைவாழ் மக்கள் வசிக்கும் கிராமத்தில் மர்ம காய்ச்சலால் 15 குழந்தைகள் பாதிப்பு

குறிப்பிட்ட கிராமங்களில் ஆய்வு செய்து முகாம்கள் நடத்தவில்லை என்றும், விரைவில் சிறப்பு முகாம்களை அமைத்து மலைவாழ் மக்களை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

உசிலம்பட்டி அருகே மலைவாழ் மக்கள் வசிக்கும் கிராமத்தில் மர்ம காய்ச்சலால் அடுத்தடுத்து 15 பச்சிளம் குழந்தைகள் பாதிப்பு - ஒரு குழந்தை ஏற்கனவே உயிரிழந்த சூழலில் மேலும் 14 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மதுரை மர்ம காய்ச்சல்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே டி - கிருஷ்ணாபுரத்தை அடுத்துள்ள மொக்கத்தான் பாறை கிராமத்தில் சுமார் 100 -க்கும் அதிகமான மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் வசிக்கும் முத்தையா என்பவரது 3 வயது மகனுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு மர்ம காய்ச்சல் ஏற்பட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தாக கூறப்படுகிறது.

- NIA Raid: சிவகங்கையில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த யூடியூபர் வீட்டில் என்ஐஏ ரெய்டு - கைப்பற்றப்பட்ட ஆவணங்கள்

மதுரையில் மலைவாழ் மக்கள் வசிக்கும் கிராமத்தில் மர்ம காய்ச்சலால் 15  குழந்தைகள் பாதிப்பு

அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதி

இந்நிலையில் இந்த ஒரே வாரத்தில் அடுத்தடுத்து சுமார் 14 பச்சிளம் குழந்தைகளுக்கு மர்ம காய்ச்சல் பரவி வருவதை கண்டு கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதில் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 8 பேரும், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 2 குழந்தைகளும் கடந்த ஓரிரு நாட்களில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சூழலில். இன்று ஒரே நாளில் 4 பச்சிளம் குழந்தைகள் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரமாக ஒரு இறப்பு நிகழ்ந்த பின்னும் மருத்துவ அலுவலர்கள் இக்கிராமத்தை ஆய்வு செய்து முகாம்கள் நடத்தவில்லை என்றும், விரைவில் சிறப்பு முகாம்களை அமைத்து மலைவாழ் மக்களை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

மதுரையில் மலைவாழ் மக்கள் வசிக்கும் கிராமத்தில் மர்ம காய்ச்சலால் 15  குழந்தைகள் பாதிப்பு

சமூக ஆர்வலர் கோரிக்கை

மேலும் இதுகுறித்து உசிலம்பட்டி சமூக ஆர்வலர் செந்தில் நம்மிடம் கூறுகையில்,”மதுரை மாவட்டத்தில் மேலூர், உசிலம்பட்டி, திருமங்கலம்  உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு கிராமங்கள் இருந்து வருகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன் டெங்கு பாதிப்பு அதிமாக இருந்தது. இதனால் இறப்பு விகிதமும் அதிகமானது. இந்நிலையில், உசிலம்பட்டி பகுதியில் மர்ம காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனை முக்கியமாக கருதி போர்கால அடிப்படையில் மருத்துவ முகாம்கள் அமைத்து மருத்துவ உதவி செய்யவேண்டும். இப்பகுதியில் போதுமான சத்தான உணவுகள் கிடைக்கவில்லை என்ற சூழலும் இருக்கிறது. எனவே அரசு தனி கவனம் எடுத்து பின் தங்கிய கிராமத்து குழந்தைகளுக்கு ஊட்டசத்து நிறைந்த உணவுகளை வழங்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.  உசிலம்பட்டியை அடுத்த மொக்கத்தான் பாறை கிராமத்தில் சுமார் 100க்கும் அதிகமான மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்த சுகாதாரத்துறை முயற்சி எடுக்க வேண்டும்” என்றார்.

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Zak Crawley: 10 ஆண்டுகளில் இது மூன்றாவது முறை மட்டுமே.. இந்திய மண்ணில் ஜாக் கிராலி தனித்துவ சாதனை படைப்பு!

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Ind vs Eng 2nd Test: இங்கிலாந்தை ஓடவிட்ட இந்தியா; இரண்டாவது டெஸ்ட்டில் 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Embed widget