kumbakkarai falls: கும்பக்கரை அருவியில் குறைந்த வெள்ளப்பெருக்கு.. ஆனந்த குளியலிடும் சுற்றுலா பயணிகள்
கும்பக்கரை அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு நீரின் அளவு குறைந்து நீர் வரத்து சீரானதால் இரண்டு நாட்களுக்கு பின்பு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி.
கும்பக்கரை அருவியில் நீர் வரத்து சீரானதால் இரண்டு நாட்களுக்கு பின்பு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். ஆர்ப்பரித்து கொட்டி வரும் நீரில் ஆனந்த குளியலிட்டு மகிழும் சுற்றுலா பயணிகள்.
கொடை வெயிலால் நீரின்றிருந்த அருவி
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த மூன்று மாதத்திற்கும் மேலாக முற்றிலும் மழைப்பொழிவு இல்லாத நிலையில் அருவிக்கு முற்றிலும் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் சுட்டெரிக்கும் கோடை வெயிலின் வெப்பத்தின் தாக்கத்தை தணிப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தரும் சுற்றுலா பயணிகள் முற்றிலும் குறைந்த அளவு வரும் நீரில் பல மணி நேரம் காத்திருந்தும், அருவிப் பகுதிகளில் தேங்கிய நீரில் குளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
Vegetable Price: விலை குறைந்த கீரை.. சீரான விலையில் சின்ன வெங்காயம்.. இன்றைய காய்கறி விலை இதோ!
கோடை மழையால் அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலை பகுதி, வட்டக்கானல், வெள்ளகெவி, பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஐந்து நாட்களாக பெய்த கனமழையால் அருவிக்கு நீர் வரத்த அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கடந்த இரண்டு நாட்களாக வனத்துறையினர் குளிக்க தடை விதித்தனர்.
படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்
இந்த நிலையில் நேற்று அருவியில் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாத நிலையில் அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறைந்து நீர்வரத்து சீரானதால் இரண்டு நாட்களுக்குப் பின்பு கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதித்தனர். இதனால் அதிகாலை முதலே கோடை வெப்பத்தின் தாக்கத்தை தணிக்க சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டி வரும் நீரில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் சிறியவர் முதல் பெரியவர் வரை ஆனந்த குளியல் போட்டு மகிழ்ச்சி அடைகின்றனர்